(Reading time: 11 - 22 minutes)

பெறுநூர் ஸ்ரீ சுப்பிரமணிய ஆலயத்திலிருந்து மேலும் இரண்டு சிலைகள் திருட்டுப் போனாதாக கண்டுபிடிப்பு..”

அன்றைய ஹாட் நியூஸ் அதுதான்..

அனைத்து நியூஸ் சானல்களிலும் சக்திவேலின் முகத்துடன் செய்தி ப்ளாஷ் செய்யப்பட்டுக்கொண்டிருந்தது..

சேனல்களை ஒன்றொன்றாக மாற்றிக்கொண்டிருந்த நாதன் திரும்பத் திரும்ப ஒரே செய்தி பிளாஷாக.. டிவியை ஆப் செய்துவிட்டு சோபாவில் சாய்ந்திருந்தார் நாதன்..

அவர் மனதில் ஆயிரமாயிரம் கேள்விகளும் சிந்தனைகளும் ஊர்வளமாய்..

அதைக் கலைப்பதுபோல் வீட்டு வாசலில் வந்து நின்றது அந்த ராயல் என்பீல்ட்..

அதன் ஒலி சொல்லாமல் சொல்லியது மகனின் வருகையை..

மெல்ல மெல்ல கண்களைத் திறந்தவர் முன் அழகான புன்னகையுடன் வந்து நின்றான் பிரஜித்..

நாதனின் ஒரே மகன்..

கடிகாரத்தையும் அவன் முகத்தையும் மாறி மாறி பார்த்தவரின் கண்களில் ஏன் லேட் என்ற கேள்வி தேங்கி நிற்க..

“பிரென்ட் வீட்டுக்குப் போயிட்டு வந்தேன்ப்பா..”, என்றிருந்தான் பிரஜித் பார்வையை வேறெங்கோ பதித்தபடி..

அப்படியா..?? நம்பிவிட்டேன் என்ற பார்வையுடன் அவர் அவனுக்கு எந்தவொரு பதிலும் சொல்லாமல் எழுந்து செல்ல..

லேசாக தன் தோள்களை குலுக்கி அதை அலட்சியம் செய்தவன் அடுத்துப்போய் நின்ற இடம் கிட்சன்..

சந்தானலட்சுமியின் இடம் அது..

சந்தானலட்சுமி.. நாதனின் மனைவி.. பிரஜித்தின் தாய்..

பூனை நடையிட்டு தாயின் பின் வந்து நின்றவன் பே என்று கத்த..

பயந்துதான் போனார் அவர்.. சிறு நடுக்கம் கூடவே உடலில்..

“அம்மா.. நான்தான்..”, சிரித்துக்கொண்டே தனது வருகையை அவன் அவருக்கு உணர்த்தி அவரை அவன் அணைத்துக்கொள்ள..

செல்லமாக இரண்டடி பரிசுக்களாய் அவரிடமிருந்து..

“இப்படியாடா பயமுறுத்துவ..??”

“ஜஸ்ட் சும்மா.. விளையாட்டுக்கு..”, என்று கன்னடித்தவன், “அவருக்கு என்னவாம்..??”

“யாருக்கு..??”, தெரிந்தும் தெரியாததுபோல் அவர் கேட்க..

“உங்க வீட்டுக்காரருக்குத்தான்..”, முறைத்தப்படி இவன் சொல்ல..

“துரை அப்பான்னு சொல்லமாட்டாரோ..??”, நொடித்துக்கொண்ட சந்தானலட்சுமி, “தெரியல.. வீட்டுக்கு வந்ததில் இருந்து இப்படித்தான் இருக்கார்.. கேட்டுப்பார்த்துட்டேன் நான்.. வழக்கம்போல் பதில் இல்லை..”, சலிப்பு மட்டுமே குரலில்..

“விடுங்கம்மா.. சுரைக்காய் முத்துன்னா சந்தைக்கு வந்துதான் ஆகனும்..”, கொஞ்சம் நக்கலாக..

“டேய்.. என்ன இருந்தாலும் அவர் உன் அப்பாடா.. இப்படியெல்லாம் பேசாதே..”, சந்தானலட்சுமி கடிந்துகொள்ள..

“அவரும் அப்பா மாதிரி நடந்துக்கனும்..”, முனுமுனுத்துக்கொண்டான்..

மகனின் முனுமுனுப்பு அவரின் காதுகளிலும் விழத்தான் செய்தது.. அது மனதையும் கொஞ்சம் நோகத்தான் செய்தது..

இருந்தும் தந்தை மகனின் இந்த இடைவெளியை இணைக்கத்தான் முடியவில்லை அவரால்.. புலம்பவும் மனதைப் போட்டு குழப்பிக்கொள்ளவும் மட்டுமே அவரால் முடிந்த செயல்..

ழக்கம்போல் தாரிகையின் வருவிற்காக காத்திருந்த நிஷா சோர்வில் படிகளிலேயே உறங்கிப்போனாள்..

காற்றில் அவளது கற்றைமுடி முகத்தை மறைத்திட சுகமாய் இன்னும் வாகாய் அங்கேயே படுத்துவிட்டாள் நிஷா..

இரவு மணி எட்டைத்தொட வீட்டிற்கு வந்த தாரிகைக்கு நிஷாவின் தரிசனமே..

அவள் உறங்குவது சிறுகுழந்தையை நினைவுபடுத்த.. சற்றே நேரம் தன்னையே அறியாமல் நிஷாவைப் பார்த்திருந்தாள் அவள்..

“அன்று மட்டும் இவளை நான் பார்க்காமல் போயிருந்தால்..??”, நித்தமும் மனதில் எழும் கேள்விதான் அது..

இன்றும் எழுந்தது..

அதில் கோபம் ஆதங்கம் அருவருப்பு நிம்மதியென பல கலவையான உணர்வுகளின் படையெடுப்பு..

என்னதான் அதட்டி உருட்டி மிரட்டினாலும் தன்னையே சுற்றிச் சுற்றி வருபவளை மிகவும் பிடிக்கும் தாரிகைக்கு..

அவளது கள்ளமில்லா அன்பு யாரையோ நினைவுபடுத்துவதுபோல்..

இவள் அவளின் பிரதிபிம்பம்தான்..

எவ்வேளையிலும் இவளை நான் யாருக்காகவும் எதற்காகவும் இழக்கமாட்டேன்..

மனதிலிருந்த உறுதி இன்னும் இன்னும் இறுகுவதுபோல்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.