(Reading time: 11 - 22 minutes)

தையோ அவங்க இரண்டு பேரும் நம்மக்கிட்ட மறைக்கறாங்க மொழி..”

“இல்லை சமூ.. இது வழக்கம்போல் நடக்கறதுதான்.. நிஷா வெளியில் உட்கார்ந்து இருக்கும்.. அதுக்கு செல்வி திட்டியிருக்கும்..”

“அதுமட்டும் இல்லை மொழி.. வேற என்னவோ இருக்கு.. கண்டிப்பா.. என்னால அதை உணர முடியுது.. நமக்குத் தெரியவேண்டாம்னு நினைக்கறாங்க..”

“புரியல சமூ.. என்ன செல்ற..??”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஆமா மொழி.. நீ கவனிச்சியா.. புதுசா நம்ம வீட்ல குடியேறியிருக்க அமைதியை..?? இப்படி அமைதியா இருந்து நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை.. செல்வி என்ன திட்டுனாலும் ஒதுக்குனாலும் நிஷா எப்பவும் சலசலன்னு பேசிட்டே இருப்பா.. எல்லா நேரத்திலையும் அப்படித்தான் அவ..

ஆனால் இன்னைக்கு ரொம்ப வித்யாசமா இருக்கு வீடு.. செல்வியோட சத்தம் வெளியில் கேக்கலனாலும் அவளோட இருப்பை அவள் ஏதோ ஒருவகையில உணர்த்திடுவா நம்மக்கிட்ட.. இன்னைக்கு அது அப்படி நடக்கல.. ரொம்பவே இறுக்கம்மா இருக்கா அவ.. இதிலிருந்தே தெரியல ஏதோ நடந்திருக்கு.. இல்லை நடக்கப்போகுது..”, என்ற சமுவின் குரலில் அத்தனை வருட அனுபவத்தின் சாயல்..

“ஆமாம்.. நீ சொல்வதெல்லாம் சரிதான் சமூ.. நீ சொன்னதுக்கப்புறம்தான் எனக்கு எல்லாம் புரியுது.. இரண்டு பேரும் நம்மக்கிட்ட எதையோ மறைக்கறாங்க.. நிச்சயமா அவங்க செயல்கள் அதைக்காட்டிக்கொடுக்குது..”, என்று யோசனையுடன் சொன்ன மொழி, “ஆனால் அதை ஏன் அவங்க இரண்டு பேரும் நம்மக்கிட்டயிருந்து மறைக்கனும்..??”, சுத்தமாக புரியவேயில்லை மொழிக்கு..

“நமக்குத் தெரியவேண்டாம்னு இரண்டு பேரும் நினைச்சிருக்கலாம்.. எனக்கு என்ன தோனுதுனா இரண்டு பேரும் மத்தவங்களுக்கு நல்லது பன்றேன்னு நினச்சிட்டு.. இரெண்டு பேரும் ஹர்ட்டாகப் போறாங்களோன்னு தோனுது.. எதையாவது பண்ணனும் மொழி.. கண்டிப்பா இரண்டு பேரும் ஹர்ட்டாகறதை என்னால பார்த்துட்டு இருக்கமுடியாது.. அதை நினைச்சும் பார்க்க முடியாது..”

அவளது பேச்சிலேயே புரிந்தது.. ஏதோ தீர்மானத்திற்கு வந்துவிட்டதுபோல்..

“என்ன பண்ணலாம்னு இருக்க சமூ..??”

“வேலு அண்ணாவை இங்க வரச்சொல்லலாம்.. அவர் சொன்னா கண்டிப்பா இரண்டு பேரும் கேட்பாங்க..”

“சரிவருமா இது..??”

“இதுமட்டும்தான் சரிவரும் மொழி..”, குரலில் அத்தனை அத்தனை உறுதி..

வணக்கம் தோழமைகளே..

தாரிகையைப் பிடித்திருக்கிறதா உங்களுக்கு..??

பெரிதாக யாரும் கருத்துக்கள் பதிவிடுவதில்லை என்பதால் உங்களுக்கு இக்கதை பிடித்திருக்கிறதா இல்லையா என்பதை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை..

சோ உங்கள் கருத்துக்களை பதிவிடவும் தோழமைகளே..

பாஸிட்டிவ்.. நெகட்டிவ்.. எதுவாக இருந்தாலும் பதிவிடவும்..

நன்றி..

உருவெடுப்பாள்..

Episode # 12

Episode # 14

{kunena_discuss:1168}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.