(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - தாரிகை - 12 - மதி நிலா

series1/thaarigai

வருடம் : 2004..

விழாக்கோலமாய் காட்சியளித்தது தரணின் வீடு..

மாலையில் அப்பொழுதுதான் வீடு திரும்பியிருந்த தரண்யன் சத்தமாக இருந்த வீட்டைக்கண்டு யோசனையுடன் உள்ளே நுழைய..

அன்னையும் சித்தியும் புடவைகள் புடைசூழ அமர்ந்திருப்பதும் சித்தப்பாவும் அப்பாவும் இருவரின் செய்கைகளைக் கண்டு தலையில் கைவைத்து அமர்ந்திருப்பதையும் கண்டு புரிந்துவிட்டது..

அது பொங்கள் பர்ச்சேஸ் என்று..

உடைமாற்றி வந்தவன் தந்தைமார்களுடன் அமர்ந்துகொள்ள..

தாய்மார்கள் இவன் வருகையைக்கூட கவணிக்காது புடவைக்காரரை ஒரு வழி செய்துகொண்டிருந்தனர்..

“நித்யா எங்கே சித்தப்பா..??”, தரண் மெதுவாகக் கேட்க..

“அவ பாட்டியோட இருக்கா கண்ணா.. நீ ஏன் லேட்..??”

“ஸ்போர்ட்ஸ் டே வரப்போகுது சித்தப்ஸ்.. சோ கொஞ்சம் வர்க்ஸ்..”, என்றவன் தாய்மார்களைச் சுட்டிக்காட்டி, “ரொம்ப செலவு போல இன்னைக்கு..??”, கேலியாக வினவ..

“கொஞ்சம் இல்ல.. அடுத்த வருஷம் பொங்கலுக்கும் சேர்த்தி இப்பவே பர்ச்சேஸாம்..”, தகப்பனிடம் இருந்து பதில் வர…

கொஞ்சம் சத்தமாக சிரித்துவிட்டான் தரண்..

அவன் சிரிப்பில் தாய்மார்கள் இருவரும் திரும்பிப்பார்த்து முறைக்க..

காதைப் பிடித்து மன்னிப்பு கேட்பதுபோல் பாவனை செய்தவன், “நான் உங்களுக்கு செலெக்ட் பண்ணித்தறேன் சித்தி..”, என்று அவர் அருகில் வந்து அமர..

தன் அருகில் வந்தமர்ந்த அக்காவின் மகனை பாசமாகத் தோளில் தட்டிக்கொடுத்தவர், “கீதாக்கா.. பார்த்தியா என் பிள்ளையை.. எனக்கு புடவை செலெக்ட் பண்ணித் தருகிறானாம்..”, பெருமையாக..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அவன் நடிக்கறான் சீதா..”, மகனைப் பற்றி அறிந்தவர் ஸ்திரமாகச் சொல்ல..

“சித்தி என்னைப்பார்த்தால் நடிக்கறமாதிரியா இருக்கு..??”, பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு தரண் கேட்க..

இல்லையென்று சீதா தலையசைக்க..

ஒருவித தெனாவெட்டுடன் தாயைப் பார்த்தவன்..

சீதா ஒவ்வொறு சேலையாகத் தோளில் வைத்து இது நல்லா இருக்கா..?? அது நல்லா இருக்கா..?? என்று அவனிடம் கேட்க..

சித்தப்பாவின் நமட்டு சிரிப்பை கவணித்தும் கவணிக்காமலும் பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருந்தான்..

ஒருக்கட்டத்தில் பொருக்கமாட்டாமல் அவரிடமிருந்த இரண்டு சேலையையும் பறித்தவன் தன் தோளில் இரெண்டையும் போட்டிக்கொண்டு, “இரெண்டுமே சூப்பரா இருக்கு சித்தி.. இரெண்டையும் எடுத்துக்கோங்க..”, என்க..

வாயெல்லாம் பல்லானது சீதாவிற்கு..

தரண் செலெக்ட் செய்த இரெண்டு புடவையையும் எடுத்துக்கொண்டவர்..

“அம்மாக்கு..??”

“அம்மாக்கு..??”, சற்று நேரம் யோசித்தவன் மயில் வண்ண நிறத்தில் ஒரு புடவையும் ஆரஞ்ச் வண்ணத்தில் இரு புடவையும் எடுத்தக்கொடுக்க..

அவைகளை அனைவருக்கும் பிடித்துவிட்டது..

புடவைக்காரர் விடைப்பெற்றதும் தான் எடுத்த புடவைகளை ரூமில் வைத்துவிட்டு வரச்சொல்லி தரண்யனிடம் கீதா சொல்ல..

புதிய புடவைகள் இரெண்டையும் தோளில் சுமந்துகொண்டு சலித்தபடி அவர் அறைக்குள் சென்றான் தரண்..

அன்னையில் கபோர்டை திறக்கப்போனவனுக்கு என்னென்னவோ மனதில் எண்ணங்கள் உதிக்க..

கபோர்டின் கண்ணாடி வழியே தன் பிம்பத்தை ஒருநொடி பார்த்துத் திகைத்து அவசரமாக சேலைகளை கபோர்ட்டில் திணித்துவிட்டு பதற்றத்துடன் தனது அறைக்குள் புகுந்துகொண்டான்..

மாற்றம் புதிதல்ல அவளுக்கு..

பழகிப்போன ஒன்றுதான்.. கடந்துபோன ஒன்றுதான்..

ஆனால் இப்பொழுது மனதில் ஏற்பட்டிடருக்கும் ஏமாற்றம் சொல்லமுடியா வலியைத் தந்திருந்தது சமுத்திராவிற்கு..

அவள் மனதில் நினைப்பது நடவாது என்று தெரிந்திருந்தபோதிலும் திரும்பத் திரும்ப மனம் அதிலேயே உழன்றுகொண்டிருக்க தினறிப்போயிருந்தவள்.. இன்று தெளிந்திருந்தாள்..

தெளிந்துவிட்டாள் என்பதைவிட.. அவன் தெளிவித்துவிட்டான் என்றே சொல்லவேண்டும்..

தன்னை அவன் யூஸ் செய்திருக்கிறான் என்று அவள் மனதை அறுத்தாலும்..

புரிந்துகொண்டாள் அவள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.