(Reading time: 12 - 23 minutes)

முதலில் சுதாரித்தது சமுத்திராதான்..

“இனி அப்படி பிச்சை எல்லாம் எடுக்க வேண்டாம்க்கா.. நம்மளே ஹோட்டல் ஆரம்பிக்கலாம்..”, நம்பிக்கையாக அவள் சொல்ல..

தானாக சம்மதம் சொன்ன கல்யாணி, “நான் இங்கிருக்கவங்க்கிட்ட பேசிட்டு சொல்றேன் சமுத்திரா.. எத்தனை பேர் ஒத்துவருவாங்கன்னு தெரியல.. ஆனால் முயற்சி செய்யலாம்..”, என்றவர் தயக்காமாக, “ஆனால் காசு..??”, என்று கேள்வி கேட்க..

“ஏற்பாடு பண்ணிடலாம்க்கா அதை.. லோன் கஷ்டம்தான்.. எங்களுக்கு எங்க ஊர்ல கொஞ்சம் சொத்திருக்கு.. அதுல கொஞ்சம் வித்து ஆரம்பிக்கலாம்.. பெருசா இல்லை.. சின்னதா போதும்.. பாக்ட்ரி வர்க்கர்ஸ்.. மில்லுல வேலை செய்யறவங்கன்னு நெறைய பேருக்கு மதிய உணவு சப்ளை பண்ணலாம்.. பெருசா அதுல ரிஸ்க் இருக்காது..”, தன் திட்டங்களை ஒன்றொன்றாகச் சொன்னவளைக் கண்டு மலைத்துப் போனார் கல்யாணி..

இவளுக்கு கண்டிப்பாக துணை நிற்க வேண்டும்..

உறுதி பிறந்தது அவருக்கு..

“சீக்கிரம் ஆரம்பித்துவிடலாம் சமு.. உன்கூட பக்கபலமாக இருக்கோம்..”, கல்யாணியின் உறுதி மற்றயிருவருக்கும் தெம்பை ஏற்படுத்தியிருக்க..

நம்பிக்கையுடன் விடைபெற்றனர் இருவரும்..

புதிய விடியல் தங்களை நெறுங்கிவரும் என்ற நம்பிக்கையில்..

ரண்.. குச்சியை வெச்சு என்னடா பண்ணிட்டு இருக்க..??”, ஸ்டேஜில் குச்சியைவைத்துத் தட்டிக்கொண்டிருந்தவனிடம் லாவண்யா கேட்க..

“ஸ்போர்ட்ஸ் டே அன்னிக்கு டான்ஸ் ஆடப்போறியாமே..??”

“ஆமா.. அதுக்கும் இதுக்கும் என்னடா சம்மந்தம்..”, புரியாமல் இவள் கேட்டுவைக்க..

“அதான்.. ஸ்டேஜ் உடஞ்சு விழக்கூடாதுல அதான்..”, சிரியாமல் இவன் சொல்ல..

கோபம் பொத்துக்கொண்டது லாவிக்கு..

அவன் முதுகில் இரெண்டடி இழுத்துவிட்டவள்..

“கண்ணாடியில டைலியும் பாக்கறேன் நான்.. நீ சொல்ற மாதிரி அப்படி ஒன்னும் குண்டு இல்லை நான்..”, சிலிப்புக்கொண்டு சொல்ல..

சிரிப்பு வந்துவிட்டது அவனுக்கு..

அதில் கடுப்படைந்தவளாக மீண்டும் அவனை அடித்தவள், “நீ என்னம்மோ திரௌபதி வேஷம் போட்றியாமே.. உன் பிரென்ட்ஸ் எல்லாம் சொன்னாங்க..”, என்னிடம் ஏன் அதை சொல்லவில்லை என்ற கேள்வி தேங்கியிருக்க அவனை நேர் பார்வை பார்த்துக் கேட்டாள் அவள்..

“அது பசங்களா கிளப்பிவிட்டது லாவி.. சின்ன வயசுல ஒரு தடவை நான் ஃபேன்ஸி ட்ரெஸ் காம்பட்டீஷன்ல இந்திரா காந்தி வேஷம் போட்ருந்தேன்.. அதனால திரௌபதி வேஷம் போட சொல்றாங்க..”

“அப்படியா.. நல்லதுதான்.. அப்போ நீ திரௌபதி வேஷம் போடு..”, அவள் ஊக்குவிக்க..

தயகினான் அவன்..

அதை உணர்ந்தாற்போல், “எதுக்குடா இந்த தயக்கம்..??”, என்று அவள் கேட்க..

“சங்கட்டமா இருக்கும் லாவி..”

“இதுல என்னடா தயக்கம்..?? இப்ப எல்லாம் பசங்க மாதிரி பொண்ணுங்க வேஷம் போடறோம்.. எங்களை மாதிரி நீங்களும் போடலாம்.. தப்பில்ல..”, அவள் ஊக்குவிக்க..

தயக்கத்துடன் ஒத்துக்கொண்டான் தரண்..

இதனால் வரும் விபரீதங்களும் மாற்றங்களும் தெரியாமல்..

ஸ்போர்ட்ஸ் டே அன்று..

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்யாசம் இல்லாமல் அனைத்து போட்டிகளிலும் கலந்துகொள்ள..

அந்த சூழல் அனைவரையும் இலகுவாக்கியிருந்தது..

பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்க..

காலை முதல் மாலைவரை ஓட்டமும் வெற்றியும் தோல்வியுமென பல கலவையும் தொடங்கி முடிய..

மாலையில் ஆரம்பமானது ஆட்டமும் பாட்ட்மும்..

லாவண்யா அன்று மாலை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க..

பதற்றத்துடனேயே காணப்பட்டான் தரண்..

அவனைக் காண்கையில் லாவியுடன் சேர்த்து அவன் பெற்றோருக்கும் சிரிப்புதான்..

சேலையைக்கட்டிக்கொண்டு நடக்கமுடியாமல் அவன் திண்டாட..

அவனது அல்லாடலைக் காண்பவர்கள் எல்லாம் அவனை கேலி கொஞ்சம் சங்கட்டமாகவே அவன் உணர்ந்தபோதிலும் அந்த உடை கொஞ்சம் பிடித்துத்தான் இருந்தது தருணிற்கு..

அது அவன் அன்னைக்காக அன்று செலெக்ட் செய்த மயில் நிறப் புடவை..

“டேய் உன்னாலதான் நடக்க முடியலைல பேசாம ஒரு இடத்தில் இருக்கலாம்ல..??”, கிடைத்த இடைவெளியில் லாவண்யா அவனை கடிந்துகொள்ள..

“அடியே.. நீ காம்பயரிங் பண்ணப் போய்ட்ட.. இருக்கற வேலையெல்லாம் யார் பார்க்கறதாம்..??”, நக்கலாக கேட்க..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.