(Reading time: 12 - 24 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 30 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

சுடரொளியை இந்த நேரத்தில் வீட்டுக்கும் அழைத்து செல்ல முடியாது, இங்கேயே வைத்திருக்கவும் முடியாது. இப்போது என்ன செய்வது? என்று மகி யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அறிவு அவனை தேடி அங்கு வந்தான்.

முன்னாடி மது பாட்டில் இருக்க, நாற்காலியில் அமர்ந்தப்படியே மேசை மேல் கவிழ்ந்துப் படுத்தப்படி இருந்த சுடரை பார்த்து அதிர்ச்சியானவன், மகியை பார்த்து,

“டேய் என்னடா இது?” என்று கேட்கவும், மகியோ திருதிருவென்று முழித்தான்.

“அடப்பாவி எத்தனை நாள் எனக்கு கம்பெனி கொடுடா.. ஒரு முறை இதை ட்ரை பண்ணி பார்க்கணும், தனியா சரக்கடிக்க பயமா இருக்குன்னு கேட்ருக்கேன்.. அப்போல்லாம் நல்ல பிள்ளை மாதிரி இருந்துட்டு, இப்போ ஒரு பொண்ணு கூட சரக்கடிச்சிட்டு இருக்கியே, இது நியாயமா? தர்மமா?” என்றுக் கேட்கவும், கொஞ்சம் டென்ஷன் நீங்கி, அறிவை பார்த்து சிரித்தவன்,

“டேய் அப்பா வேண்டாம்னு சொன்னா பால் கிளாஸை கூட கையில் தொட மாட்ட, நீ சரக்கடிக்க போறீயா, போடா போடா..” என்று கேலியாக கூறினான்.

“சரி அதையெல்லாம் இப்படி பப்ளிக்ல பேசி மானத்தை வாங்காத, இப்போ நாம சீரியஸ் மோட்க்கு வருவோமா?

 என்ன காரியம்டா செஞ்சிருக்க, வீட்டுக்கு தெரிஞ்சா என்னாகும்னு தெரியுமா?”

“நானே அந்த பயத்துல தான் உட்கார்ந்துக்கிட்டு இருக்கேன்.. அவளோட ஆசைக்காக இப்படி பண்ணிட்டேன்.. ஆனா இப்படி கொஞ்சத்துக்கே இப்படி ப்ளாட் ஆகிடுவான்னு நான் நினைக்கலடா.. அவளுக்கு லண்டன்லயே இந்த பழக்கம் இருக்குன்னு சொன்னதால தான் அவளுக்கு இதை வாங்கி கொடுத்தேன்..”

“இருக்கலாம்டா ஆனா அது லண்டன்ல, இங்க இப்படின்னா அதை யாருடா நல்லதா எடுத்துப்பாங்க.. இங்க நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் செட் ஆகாதுன்னு நீ தான் சொல்லணும்.. அருளோ இல்ல இலக்கியாவோ இப்படி ஆசைப்பட்டு கேட்டா இப்படித்தான் அவங்க ஆசையை நிறைவேத்தணும்னு நினைப்பியா? இது தப்பு வேண்டாம்னு சொல்லியிருக்க மாட்ட..”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“உனக்கு தெரியாதுடா அறிவு, அவளோட சின்ன வயசு வாழ்க்கை எப்படி இருந்துச்சுன்னு தெரிஞ்சா நீயும் இப்படி தான் நடந்துப்ப, அதுக்காக அடிக்கடி இவளுக்கு இப்படியெல்லாம் வாங்கி கொடுத்துருக்க மாட்டேன்.. இப்போதைக்கு அவளை ஹாப்பியா வச்சிக்க மட்டுமே செஞ்சேன்.. நானே அவக்கிட்ட இனி இதெல்லாம் வேண்டாம்னு சொல்லிக்கிட்டு தான் இருந்தேன்..”

“சரி இப்போ இவளை எப்படி வீட்டுக்கு கூட்டிட்டு போகறது..?’

“அது உங்கிட்ட தான் இருக்கு அறிவு, நீதான் ஹெல்ப் பண்ணனும்”

“நானா என்னடா  சொல்ற?’

“இவளை உன்னோட ரூம்க்கு கூட்டிட்டு போகணும், நல்லவேலை இது லீவ் டைம்ங்கிறதால, காலையிலேயே வேலைக்கு போய் சம்பளத்தோட  மதியமே இங்க வந்துட்டா.. இப்போ இவ என் கூட தான் இருக்கா.. கொஞ்சம் வெளிய போகப் போறோம்னு நான் எழில் அத்தைக்கிட்ட சொல்லிட்றேன்.. இவளை உன்னோட ரூம்க்கு அழைச்சிட்டு போய் படுக்க வச்சிடுவோம்.. கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திரிச்சான்னா அதுக்குப்பிறகு சரியாகிடுவா.. அப்புறம் நாம ஈவ்னிங்க் வொர்க் முடிஞ்சதும் அங்க போய் அவளை அழைச்சிக்கிட்டு போய் நான் வீட்ல விட்டுட்றேன்.. சரியா?”

“டேய் என்ன விளையாட்றீயா? ஒரு பொண்ணைக் கூட்டிக்கிட்டு வீட்டுக்கு போனா ஹவுஸ் ஓனர் ஆன்ட்டி பார்த்தா என்னடா ஆகறது.. அவங்க மட்டும் அப்பாக்கிட்ட சொல்லிட்டாங்கன்னா அவ்ளோ தான்”

“டேய் அவங்களை நம்மால சமாளிக்க முடியாதா? அதுமட்டுமில்லாம இது யாரோவா? நம்ம சுடர் டா.. அப்புறம் என்ன பயம்?’

“உனக்கு தெரியாதுடா.. ஒவ்வொரு முறை அப்பா சென்னை வரப்பவும் இங்க ரூம்க்கு வந்தா, ஹவுஸ் ஓனர் ஆன்டிக்கிட்ட என்கொயரி நடத்துவார்.. இதுவரைக்கும் அவங்கக்கிட்ட நான் எந்த கெட்ட பெயர் வாங்குற மாதிரியும் நடந்துக்கிட்டதுல்ல, ஆனா  இப்போ சுடர் மட்டும் சரக்கடிச்சிருக்கான்னு தெரிஞ்சா, அப்புறம் ஆன்ட்டி நம்மல என்ன நினைப்பாங்க.. வீடை மட்டும் காலி பண்ண சொன்னாங்கன்னா, அப்பா எதுக்கு ஏன்னு கேள்விக் கேட்டே உயிரை வாங்கிடுவாரு.. அதோட விட்டாக்கூட பரவாயில்ல. இங்க வந்து ஆன்ட்டிக்கிட்ட என்ன ஏதுன்னு கேட்டு ஆன்ட்டி உளறிட்டா அவளோ தான், அப்பா சாமியாடிடுவாரு..”

“அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது..அதைப்பத்தில்லாம் கவலைப்படாம இரு அறிவு, ஆன்ட்டியை நான் சமாளிக்கிறேன்..” என்று கூறியவன், ஒரு வண்டியை ஏற்பாடு செய்து அதில் சுடரொளியை அழைத்துச் சென்றான்.

அங்கே வீட்டு உரிமையாளரிடம் சுடருக்கு உடல்நலம் சரியில்லையென்றும், வீட்டில் அனைவரும் ஒரு விஷேஷத்திற்கு சென்றிருப்பதாகவும், அவள் மட்டும் போகவில்லையென்றும், இப்போது வீட்டில் தனியாக விட முடியாது என்பதால் அவளை அறையில் படுக்க வைத்து விட்டு, அவளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை அவரிடமே ஒப்படைத்துவிட்டு, இருவரும் ரெஸ்ட்டாரண்ட் செல்வதாக கூறிவிட்டு சென்றனர். அவரது பொறுப்பில் சுடரொளியை விட்டுவிட்டு செல்வதால், எந்த சந்தேகமும் படாமல் அவளை பார்த்துக் கொள்வதாக சொல்லி இருவரையும் அனுப்பி வைத்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.