(Reading time: 13 - 26 minutes)

தொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 05 - ஸ்ரீ

Vizhi vazhi uyir kalanthavale

பட்டாம்பூச்சி கூப்பிடும்போது பூவே ஓடாதே

காதல் தேனை சாப்பிடும்போது பேசக்கூடாதே

எதைத்தருவது நான் என்று

எதைப்பெறுவது தான் என்று

குறுக்கும் நெடுக்கும் குழந்தைப்போல

இதயம் குதித்தோட

 

தலை அசைக்கிது உன் கண்கள்

தவித்தவிக்கிது என் நெஞ்சம்

ஒருத்திப்போல ஒருத்தி வந்து உயிரைப்பந்தாட

 

பெண் கவிதை இவள்தானே

பொன் இதழால் படிப்பாயோ

கண் இணைப்போடு காதல் திறப்பாயோ

டற்கரை சந்திப்பிற்குப் பின் திவ்யாந்த் மனம் அத்தனை தயக்கம் குழப்பத்தையும் தாண்டி வெண்பாவை தனக்கானவளாகவே எண்ண ஆரம்பித்திருந்தது.

கிடைத்த நேரத்தில் குறுஞ்செய்தி அனுப்பினான்.அதை அனுப்பிவிட்டு பதிலுக்காக காத்திருக்கும் நேரம் ஏதோ கல்லூரி மாணவன் போல் மனம் அத்தனை படபடப்பாய் ஒரு வித உற்சாகத்தோடு துள்ளித் திரிந்ததது கண்டு அவனுக்கே சிரிப்பாய் இருந்தது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அதை விட அவனை முகம்சிவக்க வைத்த விஷயம் மனதிற்குள்ளேயே வைத்திருந்த விஷயத்தை சிந்தாமணி அம்மா கண்டு கொண்டதுதான்.

கிட்டதட்ட இருபது நாட்களுக்குப் பிறகு ஒரு மாலை வேளையில் திவ்யாந்த் வீட்டில் அமர்ந்து டீவி சேனலை மாற்றி மாற்றி போட்டவாறு எதிலும் நாட்டமில்லாமல் அமர்ந்திருக்க வாசலில் அழைப்பு மணி ஓசை கேட்டது.

இந்த நேரத்தில் யாராய் இருக்கும் என்றவாறே எழுந்து சென்று கதவை திறந்தவன் எதிரில் நின்றவளை கண்டு உலகமே மறந்து போனான்.

அழகிய ஆரஞ்சு வண்ண சில்க் காட்டன் புடவையில் அளவான ஒப்பனையோடு அம்சமாய் நின்றிருந்தாள் வெண்பா.

“ஹலோ வெண்பா என்ன ப்ளஸெண்ட் சர்ப்ரைஸ்.வா உள்ளே வா..சிந்தாம்மா யாரு வந்துருக்கா பாருங்க..”

“திவா நீங்க ஹாஸ்பிட்டல் போய்ருப்பீங்கனு நினைச்சேன்..லீவா?”

“இல்ல மார்னிங்கே ஓபி நிறைய பாத்தாச்சு நைட் ஒரு சர்ஜரி வேற இருக்கு அதான் கொஞ்ச நேரம் வீட்டுக்கு வந்துட்டு போலாம்னு வந்தேன்.”

“ஓ..மார்னிங் கோவில்ல சிந்தாம்மாவ பாத்தேன்.வீட்டுக்கு கூப்டுருந்தாங்க அதான் க்ளாஸ் முடிச்சுட்டு அப்படியே வந்துட்டேன்.”

“வா வா வெண்பா ம்மா..தம்பி இன்னைக்கு அவ பிறந்தநாளாம்.அதான் வீட்டுக்கு வர சொன்னேன்.”

“ஓ சொல்லவே இல்ல.எனி வே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெண்பா..”,கண் பார்த்து கை நீட்ட அந்த கண்களை கண்டவளோ ஒருவித மாய உலகில் சிக்கித்தான் போனாள்.அதுவும் அவனது அந்த தமிழ் அது ஒன்று போதுமே..

இருந்தும் சூழ்நிலை உணர்ந்தவளாய் தன்னை மீட்டெடுத்து அவனிடம் கை குலுக்கி நன்றியை தெரிவித்துவிட்டு சிந்தாமணியிடம் ஆசிர்வாதம் பெற்று சிறிதுநேரம் அங்கிருந்து பேசிவிட்டுச் சென்றாள்.

வீட்டிற்கு வந்தவளுக்கு திவா கதவை திறந்த நொடி தன் மனம் அடைந்த உற்சாகமும் ஆர்பரிப்பும் நினைவிற்கு வந்தது.

அவன் இருக்கமாட்டான் என்று தெரிந்துதான் சென்றாலும் ஏதோ ஒரு மூலையில் அவனை எதிர்பார்த்தது மனம்.அதுவும் அவன் வாழ்த்து கூறி கைகுலுக்கிய அந்த நொடி அவன் கண்களுள் புதைந்து எழுந்தபோது அப்படியாய் ஒரு சிலிர்ப்பு மனதில்.

கிளம்பும் வேளையிலும் அவன் கண்களாலேயே விடையளித்து தலையசைத்தது எல்லாமே சாதாரணமாகவே இருந்தாலும் வெண்பாவிற்கு அத்தனையும் மனதில் புது புத்துணர்வையே கொடுத்திருந்தது.

ஆனால் அதற்கான பதில் மட்டும் உடனே அவளுக்கு கிடைத்ததாய் தெரியவில்லை.ஒரு கட்டத்தில் பொறுமையிழந்தவள் அதைப்பற்றி மேலும் யோசிக்கத் தோன்றாமல் அப்படியே விட்டுவிட்டாள்.

இங்கு திவாவின் நிலையோ மனம் கொள்ளா உற்சாகத்தோடு கண்கள் டீவியில் பதிந்திருக்க இதழோரம் அழகான புன்னகையோடு வேறு உலகத்தில் இருந்தான்.

அவனை பார்த்தவாறே அவனருகில் வந்து அமர்ந்த சிந்தாமணி மெதுவாய் அவனிடம்,

“தம்பி உன்கிட்ட ஒண்ணு கேக்கவா?”

“என்ன சிந்தாம்மா புதுசா தயக்கமா பேசுறீங்க.என்கிட்ட கேக்க என்ன தயக்கம்??”

“இல்ல விஷயம் அப்படி அதனால தான்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.