(Reading time: 13 - 26 minutes)

“லவ் யூ சோ மச் ஃபார் எவர் மை கண்ணம்மா…வில் யூ மேரி மீ..”

சம்மதமென தலையசைத்தவள் வெட்கத்தில் விழி தாழ்த்திக் கொள்ள பற்றியிருந்த விரல்களை அழுத்திப் பிடித்தவன் அவளையே நோக்கியிருந்தான்.

“லவ் யூ டூ திவா..ரியலி இப்போ இந்த செகண்ட் இந்த பீல் வாழ்க்கைல ரொம்பவே மறக்க முடியாதது.அதுலயும் உங்களோட கண்ணம்மாவா..அட்ஸ் அமேசிங்..”

“எப்பவுமே இந்த பெயர் மேல ஒருவித தாபம் உண்டு..ஓவர் ரொமண்டிங்கா இருக்குற மாதிரி தோணும்.கல்யாணம் பத்தி ரொம்ப யோசிச்சது இல்ல.பட் ஒருவேளை அது நடந்து மனைவினு ஒருத்தி வந்தா கண்டிப்பா இதுதான் அவளுக்கான பேர்னு..”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“இத்தனை நாள் இப்படியெல்லாம் தோணிணது இல்ல.ஆனா இப்போ அப்படி தான் தோணுது திவா..”,தன்னவனின் தோள் சாய்ந்து கொண்டாள்.

சில நிமிடங்கள் அப்படியே நகர,”ரொம்ப லேட் ஆச்சு கண்ணம்மா கிளம்பலாம்..நீயும் என்னோட நம்ம வீட்டுக்கு வா சிந்தாம்மா விஷயம் தெரிஞ்சா ரொம்பவே சந்தோஷப்படுவாங்க.”

“திவா நானா..எனக்கு ஒரு மதிரி இருக்கு நீங்களே அவங்ககிட்டபேசுங்க அப்பறமா நா வரேனே..”

“அட வெண்பா ஜி இவ்ளோ வெட்கபடுவாங்களா?இருந்தாலும் பரவால்ல நீயும் வா கண்ணம்மா..”

“என்னை மடக்குற வழியை நல்ல தெரிஞ்சுகிட்டீங்க திவா..”

“அப்போ குடும்பஸ்தன் ஆக நா முழுதாக தயார்னு சொல்லு..”,என்று சிரித்தவன் அவள் கை கோர்த்து அழைத்துச் சென்றான்.

வீட்டின் அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருக்க கதவை திறந்தவர் இருவரையும் ஒரு சேர பார்த்து உளம் குளிர்ந்து போனார்.இருந்தும் முகத்தில் எதையும் காட்டாமல் இயல்பாய் அவர்களை உள்ளே அழைத்துச் செல்ல திவ்யாந்த் அவளை சோபாவில் அமருமாறு கூறிவிட்டு சிந்தாம்மாவின்அருகில் சென்றான்.

பின்னிருந்து அவர் தோள் பற்றி,”ம்மா உங்க மருமக எப்படி இருக்கா உங்களுக்கு பிடிச்சுருக்கா?”,என முடிக்க வெண்பா அதிர்ச்சியும் ஆர்வமுமாய் அவரைப் பார்க்க அவரோ திவ்யாந்தை தன் மீது சாய்த்துக் கொண்டார்.

“என் வாழ்க்கையோட மிகப் பெரிய சந்தோஷம் தம்பிஇது.அவ்ளோ சந்தோஷமா இருக்கு..என் காலத்துக்கு அப்பறம் உனக்குனு ஒரு நல்ல குடும்ப வாழ்க்கை அமையனும்னு நா வேண்டாத தெய்வம் இல்ல.அந்த கடவுள் என்னை கை விடல..

வெண்பாம்மா ரொம்ப சந்தோஷம் ரெண்டு பேரும் நூறு வருஷம் நல்லா இருக்கணும் இருப்பீங்க..”,என்றவர் கண்கலங்கி நின்றார்.

“சிந்தாம்மா சந்தோஷமா இருக்கீங்கனு சொல்லிட்டு இப்படி கண்கலங்கலாமா.இவ்ளோ வீக்கான மாமியாரா இருந்தா என்னோட எப்படி சண்டை போடமுடியும்.மாமியார் மருமகளா நாம போடுற சண்டைல திவா மிரண்டு போக வேணாமா?”,என்று கண்ணடித்துச் சிரித்தாள்.

“என்னம்மா இப்படி சொல்லிட்ட சண்டையெல்லாம் போட வராது எனக்கு அதுவும் என் புள்ளையோட மனம் கவர்ந்தவளோட சண்டையா அட போம்மா..”

“அடடா இப்படி சப்புனு முடிச்சுடீங்களே..சரி போங்க உங்க ரெண்டு பேருக்கும் நா நிறைய டியூஷன் எடுக்க வேண்டியிருக்கு அப்போ கத்து தரேன் எல்லாம்..”

“நல்ல பொண்ணு..நாளைக்கே நா போய் ஜோசியரை பார்த்து தேதி குறிச்சுட்டு வரேன்..”,என்றவாறே அவர்களுக்கு உணவு எடுத்து வர சிந்தாமணி உள்ளே செல்ல அவளருகில் வந்தவன்,

“நா கூட நிறைய சொல்லி தரணும் என் கண்ணம்மாக்கு இல்ல..”,காதுக்குள் ஒலித்த அந்த மென்குரலில் மொத்தமாய் கரைந்திருந்தவள்,

“ச்ச டாக்டரே ரொம்ப மோசம் நீங்க..”,என்றவள் அவன் கையில் லேசாய் அடித்தவாறு சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.

தொடரும்

Episode # 04

Episode # 06

{kunena_discuss:1221}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.