(Reading time: 13 - 26 minutes)

“அப்படி என்ன விஷயம் சொல்லுங்க கேட்போம்.”

“நீ அந்த வெண்பா பொண்ணை விரும்புறியா?”

“சிந்தாம்மா!!!”

“நா உன்னை பத்து மாசம் சுமந்து பெத்ததில்லையே தவிர நீ என் புள்ள தான்ய்யா..உன் மனசு எனக்கு புரியாதா!இப்போ எல்லாம் உன் முகத்துல ஒரு சிரிப்பு எப்போதுமே இருக்கு.அதுவும் வெண்பா பொண்ணை பத்தி பேசினா அத்தனை பிரகாசம்..இதுக்கெல்லாம் வேற என்ன அர்த்தம் இருக்க போகுது!!”

சட்டென அவன் மடி சாய்ந்து கொண்டவன்,”உண்மைதான் ம்மா..பெண்களோட பேசாதவன் இல்ல நா..ஆனா வெண்பா அளவு யாரையும் நினைச்சதில்ல..அதுமட்டுமில்லாம அவ அளவுக்கு நானா யார்கிட்டேயும் பேசினதும் இல்ல.முதல்ல கொஞ்சம் குழப்பம் இருந்தது ஆனா அப்பறம் 100% இது காதல் தான்னு புரிஞ்சுகிட்டேன்.”

“அப்பறம் என்ன தம்பி அவகிட்ட பேச வேண்டியது தான..”

“இல்ல ம்மா..அதுல தயக்கம் நிறையவே இருக்கு என் வேலை பொறுப்பு இதெல்லாம் அவளுக்கு எந்தளவு ஏத்துக்க முடியும்னு தெரில.எல்லாத்துக்கும் மேல நம்ம உறவை அவ எப்படி புரிஞ்சுப்பானு தெரில..அவளையும் என் காதலையும் விட எனக்கு நீங்க முக்கியம் மா..அதான் கண்டதையும் பேசி அவளை குழப்ப வேண்டாம்னு பாக்குறேன்.”

“தம்பி எனக்கு இன்னும் எத்தனை காலம் கடவுள் போட்டுருக்காரோ எனக்காக பாத்து உன் வாழ்க்கையை கெடுத்துக்காத அப்படி அந்த பொண்ணுக்கு பிடிக்கலனா நா நம்ம ஹோம்ல இருந்துட்டு போறேன்.இதுல என்ன இருக்குய்யா..எனக்கு நீ நல்லா இருக்கணும் குழந்தை குட்டியோட நூறு வருஷம் சந்தோஷமா இருக்கனும் அதுவே போதும்..”

“சிந்தாம்மா ப்ளீஸ் இன்னொரு தடவை இப்படி பேசாதீங்க.இந்த விஷயத்தை இப்படியே விடுங்க அதுவே என்ன நடக்கணுமோ நடக்கட்டும்..”,என கூறிவிட்டு வெளியே சென்று விட்டான்.

மருத்துவமனைக்கு வந்தவனுக்கு ஏனோ மனம் முழுதும் சிந்தாம்மாவின் கேள்வியே உழன்று கொண்டிருந்தது.ஏனோ இன்னதென கூறமுடியாத ஒரு உணர்வு.தன் சிந்தனையில் உழன்றவனை வெளிக் கொண்டு வந்தது அவனின் அலைபேசி அழைப்பு.

திரையில் ஒளிர்ந்த பெயரை கண்டு மனம் அதுவாய் மலர்ந்தாலும் இருக்கும் மனநிலையில் அவளிடம் எப்படி என்ன பேசுவதென சிறு குழப்பம்.அழைப்பு நின்றுவிட வேகமாய் குறுஞ்செய்தி அனுப்பினான்.

“ஆன் டியூட்டி..ஷல் ஐ கால் யூ அஃப்டர் அன் அவர்?எதுவும் ப்ராப்ளம் இல்லையே?”,அனுப்பியவனுக்கு நிஜமாகவே பதட்டம் அவளாய் ஒரு நாளும் குறுஞ்செய்தியோ அழைப்போ செய்ததில்லை விஷயமின்றி,பதிலுக்காக காத்திருக்க குறுஞ்செய்திக்கான ஒலி எழுப்பியது.

“ப்ராப்ளம் இல்ல..ஆனா உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்.நாளைக்கு ஃப்ரீயா பேச முடியுமா?”

“ஷுவர் ஈவ்னிங் மீட் பண்ணலாம்.ப்ளேஸ் நீயே சொல்லு..”

“தேங்க்ஸ்.பெசண்ட் நகர் பீச்லயே மீட் பண்ணலாம்..பை..நாளைக்கு பாக்கலாம்.”

படபடப்பான மனம் மேலும் படபடத்தது.என்னவாய் இருக்கும் என ஆயிரம் கோணங்களில் யோசித்தாலும் விடைமட்டும் தெரியவில்லை.

அப்படிஇப்படியாய் பொழுதை நகர்த்தியவன் மறுநாள்  மாலை கூறிய படி பீச்சை அடைந்திருந்தான்.அவனுக்கு முன் வந்து எங்கோ வெறித்தபடி அவள் அமர்ந்திருக்க அருகே வந்தவன் சற்று இடைவெளிவிட்டு அவளருகில் அமர்ந்தான்.

“ஹாய் வெண்பா..”

“ஹாய் திவா..”

எப்போதும் இருக்கும் உற்சாகம் குரலில் இல்லாததைப் போல் தோன்றியது திவ்யாந்திற்கு.

“என்னாச்சு குரலே சரியில்ல.ஆர் யூ ஓ.கே?”

“ஐ அம் நாட் அட் ஆல் ஓ.கே திவா..ரொம்ப குழப்பமா இருக்கு.ஒரு விஷயத்தை உங்ககிட்ட சொல்லலாம்னு தான் வர சொன்னேன்.ஆனா இப்போ நீங்க என்ன நினைப்பீங்களோனு ஒரு மாதிரி இருக்கு.”

“என்ன வெண்பா ஏதோ புது ஆள்கிட்ட பேசுற மாதிரி பேசிட்டு இருக்க..எதுவாயிருந்தாலும் சொல்லு..”

“திவா..வந்து ஐ திங்க் அம் இன் லவ் வித் யூ..”,கூறியவளின் பார்வை அவள் கைகளிலேயே இருக்க திவ்யாந்திற்கோ தன் காதுகளையே நம்ப முடியவில்லை.

“என்ன சொன்ன??”

“நீங்க என்னை எப்படி வேணா நினைச்சுகோங்க திவா பட் இதுக்கு மேல என்னால மனசுக்குள்ளயே வச்சுக்க முடில..

கொஞ்ச நாளாவே உங்ககிட்ட நா சாதாரணமா பேசலையோனு தான் தோணுது.யார்கிட்ட பேசும் போதும் இப்படி தடுமாற்றம் வந்ததில்ல.ஆனா உங்க கண்ணும் அந்த குரலும் எனக்கு என்னவோ ஆயிரம் பலத்தை கொடுக்குற மாதிரி மனசு ஒரு அமைதி அடையுற மாதிரி ஒரு பீல்.

இப்போ இந்த நிமிஷம் கூட மனசு அத்தனை அமைதியா இருக்கு..இதை நா எப்பவும் உணர்ந்தது இல்லை.இதெல்லாம் வாழ்க்கை மொத்தத்துக்கும் கிடைக்கணும்னு ஆசை பட்றேன்.என்ன பத்தி உங்களுக்கு எல்லாமே தெரியும் சோ நீங்க யோசிச்சு சொல்லுங்க..”,என்று முடித்த பின்புதான் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.