(Reading time: 12 - 24 minutes)

ல்ல ஜீனியஸ்க்கே சில டைம் தப்பு நடக்கும் தனபால்.. அவங்க ஸ்டூடண்ட்ஸ்னா அவங்களுக்கு ஒன்னும் தெரியாதா? இப்போ இருக்க ஸ்டூடன்ஸ்ல்லாம் நம்மல விட ஜீனியஸா இருக்காங்க.. அவங்களை என்கிரேஜ் பண்ணி வேலை வாங்கணுமே தவிர திட்டக் கூடாது..

இவ்ளோ பேசற நீங்க, அதுக்கு பதிலா என்ன பிரச்சனைன்னு பார்க்கலாமே என்று சொல்லவும்” அவர் கொஞ்சம் வேலை இருப்பதாக சொல்லி தப்பித்து சென்றுவிட்டார்.

இன்னமும் படபடப்போடு அருள்மொழி நின்றிருக்கவும், “அருள் கூல், இதெல்லாம் பெரிய தவறே இல்லை. சிம்பிளா சரிப் பண்ணிடலாம்..” என்று இருவருக்கும் சொல்லிக் கொடுத்தப்படியே அதை சரி செய்தான். அதன்பின் தான் அருளின் படபடப்பு குறைந்தது.

“ஆமாம் ஏதாவது பிரச்சனைன்னா எனக்கு போன் பண்ணி சொல்லலாமில்ல..” என்று கேட்டதும் தான், இதுவரைக்கும் அவர்களுக்கு தன் எண்ணை தராதது ஞாபகத்திற்கு வந்து, அப்போதே அவர்களிடம் தன் அலைபேசி எண்ணை கூறியவன், அவர்களது அலைபேசி எண்ணையும் வாங்கிக் கொண்டான்.

அதை தன் அலைபேசியில் சேமித்து வைக்கும் போது, “ம்ம் அருள்1 அருள்2 ன்னு ஏற்கனவே ரெண்டு நம்பர் என்னோட மொபைல்ல சேவ் ஆகியிருக்கு, அதனால உன்னோட நம்பரை மொழின்னு தான் சேவ் செஞ்சு வைக்கப் போறேன்.. அதுவே நல்லா இருக்கு, அதனால இனி உன்னை அப்படித்தான் கூப்பிட போறென்” என்றவன் தமிழிலேயே அவளது பெயரை மொழி என்று பதிவு செய்து வைத்தான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“தமிழ்நாட்டுல பிறந்து வளர்ந்தவங்களுக்கே இந்த ழ ல்லாம் அவங்க நாக்குல நாட்டியம் ஆடும்.. ஆனா லண்டன்ல இருந்து வந்தாலும் அழகா தமிழ் பேசறீங்க, அதேபோல இதுவரைக்கும் என்னோட பின் பாதி பெயரை சொல்லி யாரும் கூப்பிடதில்ல, அப்படி கூப்பிடாம இருந்தாலும் சந்தோஷம் தான் படுவேன்.. ஏன்னா இந்த மொழியை கொலை பண்றதை நான் விரும்பமாட்டேன்” என்று அவள் சொல்லவும்,

“நான் லண்டன்ல இருந்து வந்தாலும், என்னோட அம்மா தமிழ்னு நான் சொல்லியிருக்கேன் இல்ல.. அப்படிப்பார்த்தா என்னோட தாய்மொழியே தமிழ் தான், அதுவும் என்னோட அம்மா தமிழ் லிட்ரச்சர் படிச்சவங்க, இன்ஸ்டியூட் ஆரம்பிச்சு தமிழ் சொல்லி கொடுக்கறாங்க.. முறைப்படி நான் அவங்கக்கிட்ட தமிழ் கத்துருக்கேன்.. நான் தமிழை கொலை பண்றது தெரிஞ்சா அவங்க என்னை ஒரு வழி செஞ்சுடுவாங்க.. சரி நீங்க வேலையைப் பாருங்க.. இதோ வந்துட்றேன்” என்று சொல்லிவிட்டு அவன் சென்றதும், அவள் அருகே வந்த இலக்கியா,

“என்னடி.. நீ அமுதன்னு கூப்பிட்றதும், சார்லஸ் உன்னை மொழின்னு கூப்பிட்றதும், ஏதோ சரியில்லையே, மச்சி இங்க என்னடி நடக்குது?” என்று கண்ணடித்துக் கேட்கவும்,

“என்னம்மா அப்படி நடக்குது.. நீதான் கொஞ்சம் சொல்லேன்..” என்று திருப்பி கேட்டவள்,

“ஆமாம் இங்க நாம வந்த அன்னைக்கு சார்லஸ் சார்லஸ்னு டயானா ரேஞ்ச்க்கு உருகிட்டு இப்போ என்னடி இப்படி பேசற..” என்று கேலியாக கேட்டாள்.

“ம்ம் மேட் இன் லண்டனா இருந்தா பரவாயில்ல, ஆனா பார்ட்ஸ்ல்லாம் நம்ம ஊர்ல இருந்து போயிருக்கே அதான் வேண்டாம்னு விட்டுட்டேன்.. அதுமட்டுமில்லாம நாம ரெண்டுபேரும் ஒரே ஆளை எப்படி மச்சி கரெக்ட் பண்ண முடியும்?

உன்னோட ஆள் எனக்கு அண்ணன் முறை, என்னோட ஆள் உனக்கு அண்ணன் முறை ஆகணும், நாம ரெண்டுப்பேரும் ஒரே ஆளுக்கு ரூட் விட்றது தெரிஞ்சா எங்கப்பா தொடப்பக்கட்டையை தூக்கிக்கிட்டு ஓட ஓட விரட்டுவாறு, அதால நான் முன்ன சொன்னது போல நீயே டயானாவா இருந்துக்க” என்று அவள் கூறியதும்,

“அடிப்பாவி விட்டா முடிவே பண்ணிடுவ போல, மச்சி நாம இங்க ஒரு மாசம் இண்டர்ண்ட்ஷிப்க்காக வந்திருக்கோம்.. அதுக்குள்ளேயே அமுதன் லண்டன் போக வாய்ப்பிருக்கு.. நாமளும் அதுக்குப்பிறகு எக்ஸாம் ப்ராஜக்ட்னு பிஸியாகிடுவோம்..

அப்புறம் அவர் யாரோ, நாம யாரோ அதனால தேவையில்லாத நினைப்பெல்லாம் வீட்டுட்டு வேலையைப் பாரு.. நம்ம குடும்ப சூழ்நிலைக்கு அதான் நல்லதும் கூட, அதனால இதோட இந்த பேச்சை விடு.. திரும்ப இப்படி பேசாத..” என்று கண்டித்தாள். ஆனால் அவள் சொல்வது போல் அப்படியே முடிந்துவிடக் கூடுமா இந்த உறவு?

உறவு வளரும்...

Episode # 29

Episode # 31

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.