(Reading time: 12 - 23 minutes)

அனைத்தும் பாஸிங்க் க்ளௌட்ஸ் என்று..

திடமானது மனது..

இனி எங்கும் எதிலும் அலைப்பாயாதென்று உறுதியாக..

தன் இலக்கை இதுவல்ல என்று தெரிந்தபிறகு.. தனது இலக்கை நோக்கி பயனிக்கத் துவங்கியிருந்தாள் அவள்..

படிப்பது என்றும் அவளுக்குப் பிடித்த ஒன்றுதான்.. இப்பொழுது கொஞ்சம் தீவிரமாகவே படிக்கத்துவங்கியிருந்தாள்..

வெறித்தனமாக என்றே சொல்லவேண்டும்..

அனைத்தையும் மறக்க அவள் தேர்ந்தெடுத்த வழி அது..

இரவு பகல் ஓயாமால் புத்தகத்திற்குள் அவள் மூழ்க.. அவளைக் காண்பதற்கே கொஞ்சம் பயமாய் அவள் தாய்க்கு..

இந்த மாற்றம் நல்லதிற்குதான் என்றாலும் அவள் வெறிகொண்டு படிப்பதுபோல் இருக்க.. அவள் உடல்நிலை பாதிக்குமோ என்ற கவலை கொண்டது தாயின் உள்ளம்..

தாயிடம் இப்பொழுதெல்லாம் சகஜமாக பழகத்துவங்கியிருந்தவளுக்கு அவரது எண்ணங்கள் புரிவதாய்..

ஆனால் அவரது எண்ணங்களை மாற்ற முயற்சிக்கவில்லை அவள்..

முயலவே தோன்றவில்லை அவளுக்கு..

அவரது தனிமை அவரை கண்டமேனிக்கு சிந்திக்க வைக்கிறது என்று புரிந்தது சமுவிற்கு..

ஏதாவது தொழிலில் இறக்கிவிட எண்ணம் வலுவாக மாற..

ஒருநாள் அதை அவரிடம் சொல்ல..

“நானும் அதையேத் தான் நினைத்தேன் சமூ.. ஏதேதோ எண்ணங்கள் மனதில்.. எனக்கு இதிலிருந்து தூரம் செல்ல வேண்டும்.. ஏதாவது மெஸ் மாதிரி ஆரம்பிச்சா என்ன..?? கொஞ்ச நாளுக்கு முன்னமே இந்த எண்ணம் இருந்துச்சு.. அப்போ இருந்த சூழ்நிலையில் ரொம்ப யோசிக்கல.. ஆனால் இப்போ ஆரம்பிக்கலாம்னு தோனுது..”, தாயின் விளக்கமே அவரின் தனிமையின் ஆழத்தை உணர்த்த..

அவரின் அந்த உணர்வை அப்பொழுதே போக்கவேண்டும் என்று மனம் உந்த..

அடுத்து என்ன செய்வதென்று தீர்மானித்திருந்தாள்..

அன்று மதியமே அவளது அன்னையை அழைத்துக்கொண்டு சென்ற இடம் ஒதுக்குப்புற இடம்..

பாட்டும் சிரிப்பும் சந்தோஷமும் நிறம்பி வழிந்தது அங்கே..

“இது என்ன இடம் சமு..??”, சங்கோஜமாக தாய் கேட்க..

“என்னைப் போல் திருனங்கைகள் வாழும் இடம்..”, தெளிவாகச் சொன்ன மகளிடம்..

இங்கே எதற்கு என்னை அழைத்துவந்தாய் என்பதுபோல் தாய் பார்க்க.. பதில் சொல்லாது ஒரு வீட்டின் முன்பு நின்றவள் கல்யாணி அக்கா என்று சத்தமாக அழைக்க..

கொஞ்சம் சதைபோட்ட ஒரு திருனங்கை அதிலிருந்து வெளிவர..

“அக்கா.. நான் சமுத்திரா.. நியாபகம் இருக்கா உங்களுக்கு..??”

“அட உன்னை நியாபகம் இல்லாமல் இருக்குமா சமுத்திரா..”, என்ற கல்யாணி அருகில் இருந்த சமுவின் அன்னையை நோக்கி கைக்கூப்பியவர், “அம்மாவா சமுத்திரா இவங்க..??”, என்று கேட்க..

“ஆமாக்கா.. அம்மாதான்..”, என்று சிறு இடைவேளி விட்டவள், “எனக்கு உங்க்ககிட்ட ஒரு உதவி வேணும்..”, தயக்கமாக..

“உதவியா..?? என்கிட்டயா..??”, கொஞ்சம் ஆச்சர்யமாகக் கேட்க..

“ஆமாக்கா.. கொஞ்சம் பெரிய உதவி..”, என்றிருந்தாள் சமூ..

“நான் என்ன உதவி செய்ய உனக்கு..?? உதவி செய்ய மனசிருக்கு.. ஆனால் கையில் ஒன்னும் இல்லையே..”, கொஞ்சம் விரக்தி கலந்திருந்ததோ அவர் குரலில்..

“ஐயோ காசெல்லாம் இல்லக்கா.. அது வந்து..”, என்றவள்..

தாங்கள் சிறிதொரு மெஸ் தொடங்க இருப்பதாகவும்.. அதற்கு உதவியாய் இங்கிருப்பவர்களிடம் உதவி கேட்டுவந்திருப்பதாகவும் அவள் கூற..

கல்யாணியுடன் சேர்ந்து திகைத்துப்போனார் சமுவின் தாய்.. இதை தான் எதிர்ப்பார்க்கவில்லை என்பதுபோல் அவர் முகம் காட்டிட..

“சமூ..”, என்றிருந்தனர் இருவரும் ஒன்றுபோலவே..

தாயிடம் முதலில் திரும்பியவள், “உங்களுக்கு ஓகேதானேமா..??”, என்று கேட்டிட..

சம்மதமாய் தலையசைந்தது அவரது தலை..

“அம்மாக்கு ஓகேக்கா.. உங்களுக்கு ஓகேவா..??”, கல்யாணியிடம் கேட்க..

“எனக்கு என்ன சொல்றதுனே தெரியல சமுத்திரா.. கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.. இங்கிருக்கறவங்க நிறைய பேர் ரொம்ப நல்லா சமைப்பாங்க.. ஆனால் கடையிலயோ ஹோட்டலையோ போய்க் கேட்டால் வேலை கொடுக்கமுடியாதுன்னு பதில் வரும்.. கையில் காசு யார்க்கிட்டையும் இங்க இல்லை.. பிச்சை எடுப்பாங்க கடைசியில..”, கண்கள் கலங்க அவர் சொல்ல..

மற்றவர்களுக்கும் அதே நிலை..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.