(Reading time: 8 - 16 minutes)

தொடர்கதை - காதல் இளவரசி – 12 - லதா சரவணன்

kadhal ilavarasi

ருஞ்சிவப்பு நிறத்தில் வெண்ணிற பூக்கள் தெளித்த பருத்தி புடவையும் அதற்கேற்றாப் போல் சிகப்புநிற சோளியும் அணிந்திருந்தாள் உத்ரா. அலைகடலுக்கு சவால் விடும் வகையில் அவளின் கூந்தல் ஒன்றோடு ஒன்று கன்னங்களுடன் கொஞ்சி விளையாடிக்கொண்டு இருந்தது. ராஸ்தீவை இன்னும் பத்துநிமிடங்களில் அடைந்துவிடுவோம் என்று கப்பலின் பொதுவான அறிவிப்பு வெளியே வந்ததும், சற்றே தள்ளி இந்தியப் பெருங்கடல் மறந்துவிட்ட ஒரு பகுதியாய், மனிதர்கள் ஓரிடத்தைவிட்டு நீண்டகாலம் இல்லாமல் இருந்தால் அவர்களின் உலகம் எப்படியிருக்கும் என்பதை கண்கூடாக காணப்போகிறோம் என்ற ஆவல் அவளிடம் தோன்றியது. 

யாரை அப்படி முறைச்சிப் பார்த்துக்கிட்டு இருக்கிறே ? 

என்னடா தனியா நிக்கிறோமே இன்னமும் வரலையேன்னு பார்த்தேன்.

உத்ரா கிண்டல் தொனியில் பரத்தைப் பார்த்து பேசிவிட்டு, அதான் உங்க பிரண்டு பத்மினி வந்தாச்சு மறுபடியும் என்னையே சுற்றுவானேன். 

வந்து நின்று இரண்டு முழுநிமிடங்கள் முடிந்துவிட்டதே இன்னும் என்னையும் பத்மினியையும் குறைபேச காணுமேன்னு பார்த்தேன் கரெக்டா ஆரம்பிச்சிட்டே வரவர நீ சண்டைக் கோழியாயிட்டே ? 

ஆமாம் ! நான் சண்டைக்கோழிதான், இப்போ என்ன வேணும் உங்களுக்கு ?!

ஒண்ணும் வேண்டாம் தாயே ?! உனக்கு இந்த பேய்பிசாசு மேல நம்பிக்கையிருக்கா உத்ரா.

எதுக்கு இப்போ இந்த சம்பந்தமில்லாத கேள்வி, நானென்ன தமிழ்பட ஹீரோயின்னு நினைச்சீங்களா கரப்பான் பூச்சிக்கும் பேய்ன்னு சொன்னதும் பயந்து உடனே உங்களைக் கட்டிப்பேன்னு நான் தைரியமான பொண்ணு, பொண்ணுன்னா பேயும் இறங்குன்னு ஒரு பழமொழி இருக்கு உங்களுக்குத் தெரியாதா ?

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ம்..நல்லாய் தெரியும் நானே ஒரு மோகினி பின்னாலேதானே அலையறேன்

பரத் தன்னைத்தான் மோகினி என்று சொல்கிறான் என்று உணர்ந்தாலும் மீண்டும் வம்பைத் துவக்காமல் கடலுக்கு வெகு அருகில் தெரியும் தீவினைக் கண்இமைக்காமல் பார்த்தாள்.

நானொருத்தன் உன்னையே பார்க்குறேன் நீயென்ன என்ன அப்படிப்பாக்குறே ? 

வந்ததில் இருந்து உங்களையே பார்த்து போரடிச்சுப் போச்சு அதான் யாராவது வேற்று மனிதர்கள் தென்படறாங்களான்னு பார்த்தேன். ஆனா பாருங்க என் கெட்ட நேரம் எல்லாம் அப்படியாரும் இல்லை. 

ராஸ்தீவில் பிரிட்டிஷ் காலத்தில் மாளிகைகளும், தேவாலயன்னு ஒரே கூத்தும் கும்மாளமும் இருக்குமாம். அந்தமானில் இருக்கும் அநேக தீவுகளிலேயே ராஸ் தீவுதான் தண்ணீரும் காற்றும் மனிதர்கள் வாழ ஏதுவானது. கால்பட்ட இடமெல்லாம் காடா இருந்தது, அதையெல்லாம் சரிசெய்தது நம்முடைய இந்தியர்கள். 

ம்.....நான் போய் மற்றவர்களை இறங்கத் தாயாராக சொல்லுகிறேன்

அதற்கெல்லாம் ஆட்கள் இருக்கிறார்கள். நான் உன்னிடம் இன்னமும் நிறைய பேசவேண்டியது இருக்கிறது. நீ பேசாமல் என் பக்கத்திலேயே இரு

பரத் நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் நான் வந்தது 

வேலை செய்ய ? உன் குடும்பத்தின் பொருளாதார நிலைமைக்காக நீ இங்கே பணிபுரிய வந்திருக்கிறாய் வேறு எதற்கும் இல்லை எனக்கும் இதெல்லாம் தெரியும் 

அதுமட்டுமில்லை என்னைப் பற்றிய தவறான பேச்சு எழும்படி நான் நடந்து கொண்டது இல்லை, 

ம்...கள்ளக்காதலுக்காக ஒருத்தி பெத்த பிள்ளைகளையே கொல்லுறா ? முறைதவறிய உறவு தவறில்லை சட்டம் வருது, நீயென்னடான்னா பேசினாலே ஒழுக்கம் கெட்டுப்போகுது பேர் கெட்டுப் போகுதுன்னு பேசுறே ?

சுயகட்டுப்பாடு எல்லாத்துக்கும் முக்கியம் பரத், ஒழுக்கம் என்பது மனித இனத்திற்குள் மட்டும்தானே இருக்கு, புன்னகை அழுகை இதைப்போல ஒழுக்கமும் ஒரு உணர்வு அதை விலங்குகளுக்கு கடவுள் கொடுக்கலை, அப்படியிருந்தும் தன் குட்டியைக் காப்பாற்ற அது எத்தனை கஷ்டப்படுது. சின்ன கூடு வெளியே வராத குஞ்சுக்காக அந்த மரத்துப் பக்கம் போனாக் கூட காக்கா நம்மை குத்துவது இல்லை, தாய்மையையும் தாய் பாசத்தையும் இன்னும் எவ்வளவோ உதாரணம் தரலாம். வெறும் உடல் சுகத்திற்காக பெற்ற பிள்ளைகளே கொன்ற அவளை பற்றியெல்லாம் பேசுவது கூட பாவம், ஒருமுறை தான் கலந்து கொடுத்த பாலில் சக்கரையில்லைன்னு எங்கம்மா சுவையாய் இல்லையே சொல்லலாமேடா என் தம்பியைக் கேட்டாங்க அவன் என்ன சொன்னான் தெரியுமா ?

அம்மா கையால விஷத்தைக் கொடுத்தாலும் அமிர்தம்தான் இது சக்கரையில்லா காப்பிதானே ?! அவள் கொடுத்த பாலைக் குடிக்கும் போது அதே நம்பிக்கையில்தானே அந்த பிஞ்சுகளும் குடித்திருக்கும். சுயகட்டுப்பாடு முக்கியம்ன்னு சொல்லும் போதே நாட்டில் இத்தனை சிக்கல்கள் நடக்குது. இதிலே தகாத உறவுகள் திருமணத்திற்குப் பிறகும் தவறு இல்லைன்னு சட்டம் சொன்னா என்ன அபத்தம் இது. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.