Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 17 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 17 - சசிரேகா

Kothaiyin vizhigalil jaalamidum kathal

விடிந்தது.

காலையில் பத்ரியை யாரோ பயங்கரமாக தன்னை உலுக்குவதால் பயந்து அவன் அடித்து பிடித்து எழுந்து பார்த்தான். எதிரில் செல்வாவோ பட்டுவேட்டி பட்டு சட்டை கையில் தட்டில் புடவை, வாழைப்பழம், பாக்கு, வெத்தலை, மல்லிப்பூ என ரெடியாக வைத்திருந்தான் செல்வா. முகத்தில் அதிகப்படியான புன்னகை அழகாக வேறு தயாராகியிருந்தான். பார்க்கவே மாப்பிள்ளை போல கெத்தாக இருந்தான், பலநாள் தாடியை கூட இன்று ஷேவ் செய்திருந்தான். அவனைப் பார்க்க பத்ரியின் தம்பியை போல இருந்தான், அப்படித்தான் அவன் தன்னை பத்ரி போல அலங்காரம் செய்திருந்தான் முடிவெட்டியது கூட அவனைப் போலவே வெட்டிவிட்டிருந்தான் மீசையை முறுக்கியிருந்தான். அவனைப்பார்த்து வியந்த பத்ரி அவனிடம்

”என்னடா இது வேஷம்” என கேட்க

“வேஷமா அண்ணா நீதானே சொன்ன எனக்கு கல்யாணம்னு அதான் ரெடியாயிட்டேன்”

“ரெடியாயிட்டியா ஆனா நேத்து நீ எதையும் சொல்லாம இருந்த இப்ப என்னடான்னா மாப்பிள்ளை மாதிரி ரெடியாயிருக்க”

”மாப்பிள்ளை மாதிரியில்லைன்னா, உன்னை மாதிரி ரெடியாயிருக்கேன் நல்லாப் பாரு இப்ப என்னைப் பார்த்தா உன்னோட தம்பின்னு சொல்வாங்கள்ல” என சொல்ல அதற்காக அவனை உற்றுப் பார்த்த பத்ரியும் வியப்புடன்

”ஆமாம்டா என்னை மாதிரிதான் தலைமுடி வெட்டி ஷேவ் பண்ணி மீசையை முறுக்கியிருக்க பார்க்க நல்ல களையாதான்டா இருக்க இத்தனை நாளும் இருந்தியே என்னை விட கேவலமா”

“பின்ன உன்கூட சேர்ந்தா வேற எப்படியிருப்பேன்”

“சரி அப்ப உனக்கு இந்த மஞ்சரியை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா”

“மஞ்சரி என்ன அந்த மாளவிகாவை கட்டிவைச்சா கூட எனக்கு சம்மதம்தான்” என சொல்ல பத்ரிக்கு திக்கென்றது

“வேணாம்டா அந்த மாளவிகா ஒரு பேய், அவளை விட மஞ்சரி எவ்ளவோ பரவாயில்லை ஆமா இது என்ன தட்டு” என அதைப்பார்த்து கேட்க உடனே செல்வாவோ

”பொண்ணு கேட்க போகனும்ல”

“இதையெல்லாம் எப்ப வாங்கின”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“காலையிலதான்”

“ஏது காசு”

“உன் பர்ஸ்ல எடுத்தேன் அண்ணா” என அவன் சொல்லி இளிக்கவும் பத்ரிக்கு கோபம் வராமல் சிரித்தான்.

”ம் உன்கிட்ட கல்யாண களை வந்துடுச்சி போல ஆனா செல்வா நாம போனா எப்படி பொண்ணு கொடுப்பாங்க நம்ம சார்பா பெரியவங்க போனாதானே தருவாங்க”

”அதான் உங்கம்மா இருக்காங்களே அப்புறம் என்ன சரி சரி வா நல்லநேரம் முடியபோகுது 12 மணிக்குள்ள பாக்கு, வெத்தலை மாத்திக்கலாம்”

“அப்ப பட்டறை” என ஆக்“க

“அது லீவு”

“இருடா நான் இன்னும் குளிக்கலை”

”எல்லாம் உன் பாட்டி வீட்ல குளிக்கலாம் வா வா” என அவனை எதிர்பார்க்காமல் காரிடம் சென்று நின்றுக்கொள்ள விதியே என்று பட்டறையை மூடி பூட்டு போட்டுவிட்டு நடந்து சென்று காருக்குள் ஏறியவன் அவனை அழைத்துக் கொண்டு சரண்யாவைப் பார்க்க பக்கத்து ஊருக்கு மஞ்சரியை பெண்கேட்டுச் சென்றான்.

போகும் வழியில் காரில் தேவாவிடம் பத்ரி

”ஆமா இப்படி நீ சம்மதம் சொல்வேன்னு தெரிஞ்சிருந்தா நான் வீட்டுக்கு தகவலாவது சொல்லியிருப்பேன்”

”அதனாலென்ன நேரா போய் சொல்லிக்கலாம்”

“நேத்து நான் கேட்ட உடனே நீ சரக்கடிச்சிட்டு படுத்துட்ட, எனக்கு ஒரு நிமிஷம் பயமே வந்துடுச்சிடா”

”சந்தோஷத்தில குடிச்சேன் அண்ணா, எனக்கு யார் பொண்ணு தருவாங்கன்னு கவலையா இருந்தேன், உன் புண்ணியத்தில என்னையும் ஒருத்தி கல்யாணம் பண்ணிக்கபோறா அதை நினைச்சேன் சந்தோஷத்தில குடிச்சேன்”

“எப்படியோ என்னோட பிரச்சனை தீர்ந்திச்சி”

”யாரைன்னா பிரச்சனைன்னு சொல்ற” என கோபமாக முறைக்க

”வேற யாரை அந்த மஞ்சரியைதான்” என பத்ரி சொல்லவும் செல்வாவுக்கு கோபம் வந்து அவனிடம் கத்தினான்

”அண்ணா என் பொண்டாட்டியை பத்தித் தப்பா பேசாத”

”இருடா ஏண்டா கத்தற இன்னும் கல்யாணமே ஆகல அதுக்குள்ள என்னடா”

”உனக்கு மட்டும் கல்யாணம் ஆச்சா நீ மட்டும் பொண்டாட்டின்னு சொல்லிக்கலாம் நான் சொல்லக்கூடாதா” என எகிற

“தாராளமா சொல்லிக்க நான் இனிமே எதையும் சொல்லமாட்டேன் போதுமா” என பத்ரி அமைதியாக வண்டியை ஓட்டினான்.

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • Katrin kanalKatrin kanal
  • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
  • Maayakkottai - MinnalMaayakkottai - Minnal
  • Theeradha KadhalTheeradha Kadhal
  • ThazhamPoove Vaasam VeesuThazhamPoove Vaasam Veesu
  • Kids Fun StoriesKids Fun Stories
  • Unnai ondru ketpenUnnai ondru ketpen
  • Yaar arivaarYaar arivaar

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 17 - சசிரேகாsaaru 2018-10-09 16:08
Super sasi
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 17 - சசிரேகாChillzee Team 2018-10-09 06:00
Interesting going Sasirekha ji :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 17 - சசிரேகாsasi 2018-10-08 23:51
இந்த கதை முடிய இன்னும் 3 வாரங்கள்தான் உள்ளன ஆதர்வ் அதுவரைக்கும் உங்க இதயத்தை பத்திரமா வைச்சிக்குங்க மறக்காம கோதை கதைக்கு கமெண்டுக்களை கொடுத்துடுங்க நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 17 - சசிரேகாsasi 2018-10-08 23:49
நன்றி ஆதர்வ் இதுக்கு மேலயா வில்லன்கள் வரப்போறாங்க அதான் இருக்காங்களே ஏற்கனவே கதையில இருக்கற முக்கியமான ஆளுதான் வில்லனே உங்களுக்கு ரொம்ப வேண்டப்பட்டவர்தான் இதுல பாவம் கோதைதான் கோதை பத்ரி கல்யாணம் நடக்கறப்ப செல்வா மஞ்சரியோட கல்யாணமும் நடக்கும்னு நினைக்கிறேன் பார்க்கலாம்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 17 - சசிரேகாAdharvJo 2018-10-08 15:32
Paaahhhhh :D :D Mr Good-ri ninga ivalo periya appatakara wow besh besh dhool kalakunga…. :dance: Kodhai ninga irundhalum ippadi over aga pugala kudadhu :lol: Because today's epi la hero Mr Selva thaan :D irundhalum ivalo question ketkva kudadhu paa ;-) Anni thangachi-aga mari….anna-n athanaga marita kadhai super :grin: Bad-ri inum oru vaati manjuri-a parthinga selva unga kanna nondidu varu :P cute and funny update sasi ma'am....sema jolly yaga ponnadhu :clap: :clap: Badri lucky thaan but indha villi malu ena pana poranga??? who is that unknown vilain?? :Q: eppo entry koduparu?

Dear god ivanga 3 perum London pora mood la irukanga eppadi yavdhu visa kuduthudunga illati enoda heart udaindhu vidum :D Kodhai sounds very innocent as always pavam ninga andha ponnoda humbleness ellam badri-n sollitingale :sad: .she was genuine and fair in watever she did. btw passport ena achi :P

Namba villi mali enga ponanga sasi ma'am :Q: waiting for next update. Thank you.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 17 - சசிரேகாmahinagaraj 2018-10-08 12:31
ரொம்ப ரொம்ப சூப்பராயிருக்கு மேம்... :clap: :clap:
பின்ன எங்க பத்ரின்னா சும்மாவா.. :lol: :yes: பத்ரியும் கொடுத்துவச்சவன் தான் எங்க கோதை போல மாகராசி கிடைக்க... :yes: :lol:
ரெண்டு பேருக்கும் சீக்கரம் கல்யாணம் நடக்கனும்.. :yes: எங்க இந்த பாட்டியும்,பேத்தியும் என்ன பன்ன திட்டவச்சுயிருக்காங்களோ.. :Q: :Q: :sad:
:thnkx:
ஆ... சொல்லமறந்துட்டேன்.. பத்ரி-கோதை கல்யாணத்து கண்டிப்பா கூப்பிடுங்க.. மறக்காம வந்தரேன்.... :grin: :lol: :P :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 17 - சசிரேகாsasi 2018-10-08 23:46
Quoting mahinagaraj:
ரொம்ப ரொம்ப சூப்பராயிருக்கு மேம்... :clap: :clap:
பின்ன எங்க பத்ரின்னா சும்மாவா.. :lol: :yes: பத்ரியும் கொடுத்துவச்சவன் தான் எங்க கோதை போல மாகராசி கிடைக்க... :yes: :lol:
ரெண்டு பேருக்கும் சீக்கரம் கல்யாணம் நடக்கனும்.. :yes: எங்க இந்த பாட்டியும்,பேத்தியும் என்ன பன்ன திட்டவச்சுயிருக்காங்களோ.. :Q: :Q: :sad:
:thnkx:
ஆ... சொல்லமறந்துட்டேன்.. பத்ரி-கோதை கல்யாணத்து கண்டிப்பா கூப்பிடுங்க.. மறக்காம வந்தரேன்.... :grin: :lol: :P :GL:

நன்றி மஹி தோழி, நீங்க இல்லாம கல்யாணமா நிச்சயமா கூப்பிடறேன் மறக்காம மொய் வைக்க மறந்துடாதீங்க நான் மொய்ன்னு சொன்னது உங்களோட எவர்க்ரீன் கமெண்ட்டுகளை :dance:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 17 - சசிரேகாmadhumathi9 2018-10-08 08:39
:clap: :clap: :grin: really nice epi. wow kothaiyin anbu viyakka vaikkuthu. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 17 - சசிரேகாsasi 2018-10-08 23:45
Quoting madhumathi9:
:clap: :clap: :grin: really nice epi. wow kothaiyin anbu viyakka vaikkuthu. :GL:

அப்படியா மது ஓகே ஒரு விசயம் சொல்லுங்க பத்ரி மற்றும் கோதை இவங்க ரெண்டு பேரோட அன்புல யாரோடது பெஸ்ட்?
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 17 - சசிரேகாmadhumathi9 2018-10-09 13:56
Kandippa bathriyoda anbuthaan best. (y)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top