(Reading time: 8 - 15 minutes)

தொடர்கதை - காதல் இளவரசி – 13 - லதா சரவணன்

kadhal ilavarasi

170 டன் எடையுள்ள சிமெண்ட் தட்டுக்கள் 200 கொண்டுவந்து வைக்கப்பட்டு இருந்தது அங்கே, கடலுக்கு அடியில் அதை இறக்கிவைக்க தானியங்கி இயந்திரமும் அதை ரிமோட் மூலம் இயக்கும் வசதியோடு, சிமெண்ட் தட்டுகள் ஒன்றோடு ஒன்றாக இறக்கி வைக்கப்பட்டு இருந்தது. நீருக்குள் அந்த பாரம் அமிழ்வதும் அதனால் ஏற்படும் குமிழ்கள் ஒன்றாய் கலைவதும் பின் சேர்வதும் என ஒரு சுவாரஸ்யமான விளையாட்டைப் போல இருந்தது. 

நீந்த செல்வதாக சொல்லிவிட்டு நீண்ட நேரமாகியும் வராமல் இருந்த பரத் நினைவலைக்குள் வந்து வந்து போய்கொண்டு இருந்தான்..

இன்னும் கொஞ்ச நாளுக்குள்ளே இங்கே பவளப்பாறைகளின் தோற்றம் கிடைக்கும் அதை சுற்றிலும் மீன்களின் கூட்டமும் இந்த தடவையும் நம்ம முயற்சி வெற்றியடையப் போகுது ப்ரியன் உற்சாகமாய் சொல்லிக் கொண்டேபோக பத்மினி மீண்டும் ஸ்மிங்சூட்டோடு வந்து நின்றாள்

நான்போய் பவளத்திட்டுகளைப் பார்க்கணும் உத்ரா நீயும் வர்றீயா ?

ம்…..! உத்ராவிடம் சுரத்தேயில்லாமல் பதில் வந்தது

நானும் வர்றேன் உத்ராவும் உடைகளை மாற்றிடச் சென்றாள்

இப்போ ஏன் கடலுக்கு உள்ளே போகணும் உத்ராவையும் ஏன் கூப்பிடறே ?

சும்மா சைட் சீயிங் தான் முதன்முதலா ஒரு நல்ல வேலை பண்றோம் அதை லைவ்வா சூட் பண்ணப் போறேன் இப்போது சிமெண்ட் திட்டுகளை பதிப்பதை பார்வையிடப்போறேன் அது எல்லாத்தையும் ஒண்ணுவிடாம சேகரிப்போறேன் மீன்களின் வரத்து கூட இப்போது அங்கே கேமிரா பிக்ஸ் பண்ணப் போறேன்

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அம்மாதிரி விஷயங்களை கண்காணிப்பதற்காகத் தான் 9மீட்டர் நீளம் கொண்ட சேலன்ஞர் என்னும் நீர் மூழ்கிக் கப்பலை கடலுக்கு அடியில் செலுத்தியிருக்கிறேன் இந்நேரம் சில அதிர்வலைகள் அந்தப் பகுதியைச் சுற்றி ஏற்பட்டிருக்கிறது என்று ரேடார் கருவி தெரிவித்து இருக்கிறது அது என்ன என்று தெரியவிலை அதனால் ஏதும் ஆபத்து ஏற்படலாம் அதனால் நீங்கள் இப்போது நீந்த போக வேண்டாம் என்பது என் கருத்து தவிரவும் பரத்தும் அதை விரும்பமாட்டார் அந்த அதிர்வலைகளுக்கான காரணத்தை அறியத்தான் அவரும் சென்றிருக்கிறார் உத்ராவும் கொஞ்சம் பயந்த சுபாவம் உடைய பெண் வீண் ரிஸ்க் வேண்டாம் பத்மினி

எல்லாம் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் வெளித்தோற்றத்தில் வேண்டுமானால் உத்ரா பயப்படுபவளாக இருக்கலாம் ஆனால் அவள் மனதளவில் தைரியசாலி ரொம்ப நேரம் எடுத்துக் கொள்ளமாட்டோம் அப்படியும் நீங்கள் கடல் மட்டத்தை கண்காணிக்கும் போது எங்களையும் கண்காணியுங்களேன் சாதாரணமாகவே பெண்களைப் பார்க்கும் போது இருக்கும் திரில்லை விடவும், இப்படி நனைந்த உடைகளோடு மீன்களோடு மீன்களாய் விளையாடும் பெண்களைப் பார் ப்ரியன் நேரம் போவதே தெரியாது என்று கிண்டலாய் பத்மினி பேசிக்கொண்டு இருக்கும் போதே உத்ராவும் தயாராகி வெளியே வந்தாள்

கவனிக்க வேண்டிய பணிகள் அதிகம் இருப்பதால் அவர்களிடம் பேச்சை விடுத்து உத்ராவிடம் மட்டும் வெகுதூரம் சென்று விட வேண்டாம் பத்திரம் என்று சொல்லி விட்டு பரத் வருவதற்குள் அந்த நீர்மூர்கிக் கப்பலை சோதனை செய்து விட்டு இறக்க வேண்டுமே என்ற கவலையோடு நகர்ந்தான் ப்ரியன்

வெகு உயரத்தில் இருந்து பந்து எம்பிக் குதிப்பதைப் போல இருபெண்களும் தண்ணீருக்குள் நுழைந்தார்கள்

சூட்டையும் மீறிய குளிர் மனதைத் தாக்கியது உத்ராவும் ராஸ்கடலைப் பற்றிப் படித்திருக்கிறாள் பிரிட்டிஷ் ஜப்பானியபோராட்டத்தின் போது ஜப்பானியர்கள் ஆயிரம்பேர் ப்ரிட்டிஷ்ஷாரிடம் சிக்கி தவித்தது அருகில் உள்ள குட்டித்தீவில் முதலைக்கு இரையாகி மொத்தமே 20பேர் தான் தப்பித்தார்கள் அவர்களும் தீவில் இருந்து வெளியே வரமுடியாமல் இறந்துபோயிருக்கிறார்கள் என்று அவளுமே படித்திருக்கிறாள் அப்படிப்பட்ட அபாயகரமான கடலில் தான் தானும் இப்போது நீந்தப் போகிறோம் என்பது திகைப்போடு கூடிய சுவாரஸ்யத்தைத் தந்தது.

பத்மினியும் உத்ராவும் வெகு லாவகமாகவே நீந்தினார்கள் நீச்சல் உடலுக்கும் உள்ளத்திற்கும் இதமாகவே இருந்தது கண்ணுக்கு முன்னால் நீந்தும் மீனிற்கு இணையாகவே நகரும்போதும் மிக அருகில் பலவகையான மீன்களைப் பார்த்ததும்வெகு திகைப்பாக இருந்தது இத்தனை வண்ணங்கள் இருக்கிறதா என்று பிரமிப்புடனே உத்ராவும் பத்மினியும் நகர்ந்து கொண்டே இருக்கும் போது பெரும் இரைச்சலோடுசீரான வேகத்தில் நீரைக்கிழித்துக்கொண்டு அந்த நீர்முழ்கிக்கப்பல் அவர்களின் இருப்பிடத்தை வந்தடைந்தது சமநிலையான கடலின்நீரை அது கலக்கி விட்டதில் சில மீன்கள் கலவரத்தில் ஓடும் மக்கள் கூட்டத்தினரைப் போல கலைந்துபோயின

பெண்களிருவருக்கும் அதுபெரும் வியப்பாய் இருந்தது இன்னும் எத்தனை அதிசயங்களை உள்ளடக்கி வைத்திருக்கிறதோ இந்த ஆழ்கடல் என்று நீர்முழ்கிக் கப்பலின் அருகில் செல்ல முற்படும் போது அருகில் இருந்து சிறு சமிக்கைகள் மூலம் அவர்கள் ஈர்க்கப்பட்டார்கள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.