(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - தாரிகை - 14 - மதி நிலா

series1/thaarigai

வருடம் : 2004..

ஸ்போர்ட்ஸ் டே முடிந்து இரெண்டு நாட்கள் கடந்திருந்தது..

“நீ மயங்கி விழுந்ததும் ஒரு நிமிஷம் என்ன செய்யறதுனே தெரியலடா.. அப்படியே ஃப்ரீஸாயிட்டேன்.. கதிரும் நிர்மலும் தான் உன்னைத் தூக்கிட்டு first எய்ட் ரூமுக்குப் போனாங்க..”, லன்ச் ப்ரேக்கின் பொழுது அன்று நடந்ததை தரணிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் லாவண்யா..

“ஹ்ம்.. அம்மா சொன்னாங்க லாவி.. நீ ரொம்ப பயந்துட்டியாமே..”

“ஆமாடா.. இதுவரைக்கும் இப்படி யாரும் மயங்கி விழுந்து பார்த்ததில்லை நான்.. சோ ரொம்ப பயந்துட்டேன்..”, என்றவளின் குரலில் இன்னும் நடுக்கம் மிச்சமாக..

“விடு லாவி.. ரிலாக்ஸ்..”, என்றவனுக்கு என்ன தோன்றிதோ திடீரென்று, “நீ போட்டிருக்க கம்மல் அழகா இருக்கு..”, என்றான்..

கண்கள் விரிய அவனைப் பார்த்தவள், “டேய்.. என்ன சொன்ன..?? இன்னொரு தடவை சொல்லு..”, அவனைக் கட்டாயப்படுத்த..

“கம்மல் அழகா இருக்கு லாவி..”, என்றான் அழுத்தம் திருத்தமாக..

இதுவரை அவன் இவளிடம் இதுபோல் கமெட்டுக்களை பாஸ் செய்ததில்லை..

அவனுக்கு இவள் புதிதாக கம்மல் அணிந்திருந்தாலும்.. அது நேற்று அணிந்துகொண்டு வந்தது போலவே தோன்றும்.. அவளே சொல்லும் வரை அவள் புதுக்கம்மல் அணிந்திருப்பது அவனுக்குத் தெரியாது..

பலமுறை கேட்டிருக்கிறாள்.. கம்மல் நல்லா இருக்காடா புதுசு இது என்று..

அவனிடமிருந்து ஹ்ம்.. நல்லா இருக்கு லாவி என்று பதில் வரும்.. ஆனால் எல்லாம் வாய் வார்த்தைகள்தான்.. அவள் மனம் நோகக்கூடாதென்று வரும் வார்த்தைகள் அவை..

அவனுக்குத்தான் புது கம்மலுக்கும் பழைய கம்மலுக்கும் வித்யாசம் தெரியாதே..

ஆனால் இன்று வித்யாசமாய்..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

தான் அணிந்திருந்த புதுக்கம்மலை இவன் எப்படிக்கண்டுபிடித்தான் என்பதில் பெறும் ஆச்சர்யமே லாவிக்கு..

“எனக்கு என்னவோ மயக்கம் வரமாதிரி இருக்கு தரண்..”, தலையைப்பிடித்துக்கொண்டு அவள் சொல்ல..

“எ..ன்னா..ச்சு.. லா...”, என்று தொடங்கியவன் அவள் முகத்திலிருந்த கள்ளத்தனம் புரிந்து, “ஹே என்ன என்னைக் கிண்டல் பண்றியா..??”, என்று கேட்க..

“ஹப்பா.. புரிஞ்சிருச்சு போல..”, கண்களில் சிரிப்புடன்..

“போடி..”, இதழசைப்பு மட்டும் அவனிடம்..

ஏனோ லாவண்யாவின் நட்பு அவனுக்கு மிகவும் பிடித்ததாய்.. அவளுடம் இருப்பது ஏதோ பாதுகாப்புணர்வைக் கொடுப்பது போல்..

அவ்வளவு சந்தோஷம் அவனுக்குள்..

அதன் பொருட்டாய் இப்பொழுதெல்லாம் அவளுடன் அதிக நேரம் செலவிடத்துவங்கியிருந்தான் தரண்யன்..

“என்னடா இப்பவெல்லாம் எங்களோட சேரவே மாட்டேங்கற..?? எப்பவும் லாவண்யா கூடவே டைம் ஸ்பென்ட் பண்ற..”, கதிர் கூட ஒருமுறை கேட்டிட..

“அப்படி எல்லாம் ஒன்னுமில்லைடா.. எனக்கு எல்லாருமே ஒரே மாதிரிதான்..”, என்றான் சமாளிப்பாய்..

“ஆஹான்.. நம்பிட்டேன்..”, என்பதுபோல் கதிர் அவனைப் பார்க்க.. கொஞ்சம் தர்மசங்கடமான மனநிலை தரணுக்கு..

“கதிர் சொல்றமாதிரி நான் அவக்கூட ரொம்ப டைம் ஸ்பென்ட் பண்றேனோ..??”, மனதிடம் கேள்வி எழுப்பிட..

இன்ஸ்டென்டாக ஆமென்று பதில் சொல்லியது அது..

மனசாட்சி சொல்லிய பதிலில் இதிலென்ன இருக்கிறது.. உன் பிரென்ட் கூட டைம் ஸ்பென்ட் பண்ற நீ.. ஒன்னும் தப்பில்லை.. என்பதுபோல் இருக்க..

கதிரைப் போன்று யார் கேள்வி எழுப்பினாலும் சட்டை செய்யவில்லை தரண்..

அவன் போக்கிலே போய்க்கொண்டிருந்தான்..

மிஸ் வேர்ல்ட் 2004 போட்டியின் இறுதிச்சுற்று அன்று..

வெறுமனே சானல்களை மாற்றிக்கொண்டிருந்த தரண்யன் எதேர்ச்சையாக அந்தப் போட்டி லைவில் டெலிகாஸ்ட் செய்துகொண்டிருக்கும் அந்தச் சேனலை வைத்திட..

பூனை நடையிட்டு நடந்துவந்தனர் அழகிகள்..

அனைவரின் நடையிலும் உடையிலும் பேச்சிலும் அத்தனை நேர்த்தி..

டிவியை விட்டு கண்களை நகர்த்த முடியவில்லை அவனால்..

நம்மளும் இதுபோல ஒரு ட்ரெஸ் போட்டுப்பார்க்கணும்.. விசித்திரமான ஆசையொன்று மனதில் தோன்ற..

தாயின் கப்போர்டை குடையத்துவங்கியிருந்தான் தரண்..

அவரது பழைய பட்டுப்பாவாடை ஒன்று அழகாய் வீற்றிருந்தது அங்கே..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.