(Reading time: 13 - 25 minutes)

அதை அவசரமாக எடுத்து அணிந்துகொண்டவன்.. டிவியில் வந்த அந்த அழகிகள் போல் நடந்துபார்த்திட.. அத்தனை மகிழ்ச்சி மனதிற்குள்..

“சூப்பரா நடக்கற நீ..”, தன்னைத் தானே பாராட்டிக்கொண்டவன், “இந்த ட்ரெஸ் அம்மாவை விட எனக்குத்தான் நல்லா இருக்கு.. அவங்க ஊருல இருந்து வந்தவுடனேயே இதைச் சொல்லிச் சொல்லி வெறுப்பேத்தனும்.. சித்தி மாதிரி..”, தனது போக்கில் தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தவனிடம் சில நொடிகள் அமைதி..

அவசரமாக ஓடியிருந்தான் தனது அறைக்கு..

கண்ணாடி முன் நின்றுகொண்டு தனது தோற்றத்தைப் பார்க்க..

அப்பட்டமான அதிர்ச்சி இதயத்திற்குள் இறங்குவதுபோல்..

தான் செய்துகொண்டிருக்கும் செயல்கள் அனைத்தும் முகத்தில் அறைவதாய்..

“என்ன பண்றேன் நான்..??”, தனக்குத் தானே கேள்வி எழுப்பிக்கொண்டவன் பரபரப்பாக தான் அணிந்திருந்த உடையை அவிழ்த்து அதை அதன் இடத்தில் வைத்திருந்தான்..

மனமோ அதன் போக்கில் அதிரத்துவங்கியிருந்தது..

“எனக்கு திடீருன்னு என்ன ஆச்சு..?? ஏன் ரொம்ப ஆடா (odd) நடந்துக்கறேன்..??”, மீண்டும் மீண்டும் இதே கேள்வி ஊர்வலமாக..

நேரம் அதன் போக்கில் விரைந்துகொண்டிருக்க.. மூலையில் அமர்ந்திருந்தான் தரண்..

ஒருநிலையில் இல்லை அவன்..

மனம் முழுவதும் அத்தனை குழப்பங்கள்..

ஒன்றும்.. ஒன்றுமே புரியவில்லை அவனுக்கு..

தான் என்னவாகிப்போய்க்கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி மட்டும் பூதாகரமாக..

நினைக்காதே மனமே.. எதைப்பற்றியும் நீ நினைக்காதே..

கட்டளைகள் இட்டுக்கொண்டான் அதனிடத்தில்.. தொடர்ச்சியாக..

ஸ்ரீராமஜெயம் சொல்வதுபோல்..

இடைவேளி என்பதே முற்றிலும் இல்லாமல்..

ருள் சூழ்ந்திருந்த வீடு கீதாஞ்சலிக்கும் பரத்வாஜுக்கும் மிகவும் புதிதாய்.. புதிராய்..

“சித்தி வீட்டுக்குப் போயிட்டானா அவன்..??”, இது கீதாஞ்சலி..

“அங்க போறதுனா சொல்லிட்டுத்தானே போவான் அவன்.. இங்க எங்கையாவது கடைக்குப் போயிருப்பான்..”, என்ற பரத்வாஜ் சாய்வாக வீட்டுக்கதவின் மீது சாய..

தானாய் திறந்துகொண்டது அது..

“வீட்டைத் திறந்து போட்டுட்டு எங்க போயிருப்பான் இவன்..”, யோசனையுடன் உள்ளே சென்றவர்கள் லைட்டை ஆன் செய்ய..

அவர்களை வரவேற்றது ஹாலின் மூலையில் கால்களை குறுக்கிக்கொண்டு அதில் முகத்தை புதைத்துக்கொண்டு அமர்ந்திருந்த தரணே..

ஒன்றும் புரியவில்லை இருவருக்கும்..

“தரண்..??”

“…………..”

“தரண் கண்ணா..??”

சுத்தமாக அசைவில்லை அவனிடம்..

“தரண்..?? என்னடா ஆச்சு..??”, அவனது தோளின் கைவைத்து பரத்வாஜ் சத்தமாகக் கேட்க..

அவரை நிமிர்ந்து பார்த்தவன்.. அவரது கைகள் தன் தோளில் பதிந்திருப்பது கண்டு அதைத்தட்டிவிட..

வித்யாசமாக இருந்தது அவன் செய்கை..

“தரண்.. என்னாச்சுடா..??”, அவன் அருகில் அமர்ந்து கீதாஞ்சலி கேட்க..

அவர் தோளில் சாய்ந்து அழத்துவங்கினான் அவன்..

இந்த அழுகை எதற்கென்று புரியவில்லை..

தரணுக்கும் புரியவில்லை.. அவன் பெற்றோர்களுக்கும் புரியவில்லை..

அத்தனை அழுகை..

“ஒன்னுமில்லை கண்ணா.. அழாதீங்க.. ஒன்னுமில்லை..”, முதுகைத் தடவிக்கொடுத்தபடி அவனை கீதாஞ்சலி சமாதனப்படுத்த..

கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அடங்கியது அவனது அழுகை..

பரத்வாஜ் அவனுக்குக் குடிக்க தண்ணீர் எடுத்துக்கொடுத்த.. அதை மடமடவெனக் குடித்திருந்தான் தரண்..

“கண்..ணா.. என்னடாம்...”, கேட்கவந்த கேள்வியை முடிக்க விடாமல் கீதாஞ்சலியின் கையை இறுகப்பிடித்துக்கொண்டார் பரத்வாஜ்..

கேள்வியாய் என்னவென்பதுபோல் பரத்வாஜை கீதாஞ்சலி பார்த்திட..

எதுவும் கேட்டுவிடாதே என்பதாய் சைகை செய்தவர்.. தரணின் முகத்தைப் பார்க்கச் சொல்ல..

அதில் என்னிடம் ஒன்றும் கேட்காதே என்ற செய்தி..

உடல்மொழியில் அத்தனை இறுக்கம் வேறு புதிதாய் முளைத்திருந்தது..

“சாதம் எடுத்துட்டுவரவாடா..??”, பரத்வாஜ் அவன் கண்களைப் பார்த்துக்கேட்க..

வேண்டாமென்று தலையசைத்தவன்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.