(Reading time: 13 - 25 minutes)

நிமிர்ந்து இருவரையும் பார்க்கும் துணிவில்லாமல் தன் அறைக்குள் முடங்கியிருந்தான்..

“என்னங்க ஆச்சு இவனுக்கு..?? ஏன் இப்படி நடந்துக்கறான்..??”

“எனக்கும் என்னன்னு தெரியலை கீதா.. ஆனால் ஏதோ பிரச்சனைன்னு மட்டும் புரியுது..”, கலக்கம் ஒட்டியதுபோல்..

“என்ன பிரச்சனைனாலும் அவன் உங்க கையைத் தட்டிவிட்டது எனக்கு என்னவோ சரியாவே படலைங்க..”

அவருக்கும் அவன் செயல்கள் அதிர்ச்சிதான்.. இருந்தும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை அதை.. கீதாஞ்சலியின் மனம் நோகுமென..

“ஏதோ ஒரு மனக்குழப்பம் அவனுக்கு.. எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியாம செஞ்சிருக்கான்.. விடு.. இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை..”

“எனக்கு என்னவோ பயமாயிருக்கு..”, பயம் மட்டுமே நிரம்பிவழிந்தது கீதாஞ்சலியிடம்..

இதுவரை இப்படியொரு பயம் எழுந்ததில்லை அவருக்கு..

“ஒன்னுமில்லை கீதா.. நீ பயப்படற மாதிரி ஒன்னும் இருக்காது..”, அவரை சமாதனப்படுத்திய பரத்வாஜிற்கும் அதே பயம்..

மிகவும் அமைதியாகவே விடிந்தது அடுத்த நாள்..

நேற்றைய சுவடுகள் எதுவும் மிச்சமில்லாமல் எழுந்தான் தரண்யன்..

எல்லாம் தாயின் தோளில் சாய்ந்து அழுததின் மாயம்..

“தரண்.. இன்னைக்கு ஸ்கூலுக்குப் போறியாடா..??”, தயக்கமாகத்தான் கேட்டார் கீதாஞ்சலி..

“ஆமாம்மா.. இன்னைக்கு கொஞ்சம் வேலையிருக்கு.. சீக்கிரம் போகனும்..”, வழக்கம்போலவே இருந்தது அவனது செயல்களும் பதில்களும்..

எல்லாம் சரியாகிவிட்டதென்றே நம்பினர் பெற்றோர்கள் இருவரும்..

நேற்று நடந்தவைகள் இருவரின் மனதிற்குள்ளும் அடிக்கட்டி வலம் வந்ததுதான்.. இருந்தும் அவனிடம் அதைக் காட்டிக்கொள்ளவில்லை இருவரும்..

தெரிந்திருக்கவில்லை இருவருக்கும்.. அவன் பிரச்சனை வேறென்று..

“ம்மா.. லன்ச்.. லேட்டாகுது..”, தரண் குரல் கொடுக்க..

சிந்தனைகள் தடைப்பட்டது பெற்றோருக்கு..

“இதோ எடுத்துட்டு வரேன்டா..”, கிட்சனில் இருந்து கீதா குரல் கொடுக்க..

தனது வாட்சைப் பார்த்தவன், “ம்மா.. லேட்டாகுது..”, கொஞ்சம் உயர்ந்த குரலில்..

“கத்தாத தரண்.. எல்லாம் ரெடி.. வாட்டர் பாட்டில் எடுத்தாச்சா..??”, பரத்வாஜ் கேட்க..

“அதெல்லாம் ஆச்சுப்பா.. உங்க வைப்தான் வழக்கம்போல லேட் பண்றாங்க.. சீக்கிரம் கொண்டுவரச்சொல்லுங்க.. லேட்டாகுது எனக்கு..”

“உங்கம்மா எப்பவும் அப்படித்தான்.. தெரியாதா உனக்கு..?? கொஞ்சம் வெயிட் பண்ணு.. வந்திடுவா..”, என்றவர் அவன் ஷூவிற்கு பாலிஷ் போடத்துவங்க..

“அப்பா.. நெறையா போடாதீங்க.. கொஞ்சம் அழுக்கா இருந்தாத்தான் கெத்து..”, இயல்பாகவே நடந்தது உரையாடல்..

“அழுக்கா போட்டுட்டுப்போனா கெத்தா..?? யாருடா உனக்கு இப்படி எல்லாம் சொல்லிக்கொடுக்கறது..??”, சிரிப்புடன்..

“யாரும் சொல்லிக்கொடுக்கல எனக்கு.. எனக்கேத் தெரியும்..”, என்றவன் ஷூவையும் சாக்ஸையும் அணிந்து முடிக்க.. லஞ்சை எடுத்து வந்திருந்தார் கீதாஞ்சலி..

“அப்பாடா.. லஞ்ச் வந்தாச்சு.. அதிசயம்.. இரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடியே கொண்டுவந்துட்டீங்க..”, தாயைக் கிண்டல் செய்தவன்.. கிளம்பியிருந்தான்..

சைக்கிள் நிறுத்தும் இடத்தில் கதிர் தரணுக்காகக் காத்துக்கிடக்க..

அவனை ஏமாற்றாமல் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தான் தரண்..

“தரண்.. நாளைக்கு எங்க ஏரியாவுல க்ரிக்கெட் மேட்ச்டா..”

“நாளைக்கா..?? நாளைக்கு ஸ்கூல் இருக்கே..??”

“ஈவெனிங்க் தான்டா மேட்ச்.. ஸ்கூல் முடிச்சிட்டு அப்படியே போயிடலாம் என்ன..??”

“இல்லடா.. நான் வரல..”, ஏனோ தயக்கம் தரணுக்கு..

“என்னடா ஆச்சு உனக்கு..?? இப்பவெல்லாம் நீ என்னோட ஒழுங்கா பேசறதுகூட இல்லை.. என்னதான் பிரச்சனை உனக்கு..?? நெஜமா புரியல எனக்கு..”

“அதெல்லாம் ஒன்னுமில்லைடா.. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.. இப்பவெல்லாம் டைம் கிடைக்கறதில்லை.. அதனாலதான் உங்கக்கூட எல்லாம் டைம் ஸ்பென்ட் பண்ண முடியலை.. வேறொன்னுமில்லடா..”, சமாதானமாக..

“நீ ஏதோ மறைக்கற மாதிரியே இருக்கு..”

“மறைக்கறே..ன்னா நா..ன்..?? என்ன மறைக்கிறேன்..?? ஒன்னுமில்லையே..”, தடுமாறிப்போய் நின்றான் தரண்..

நிச்சயமாகத் தெரிந்தது கதிருக்கு.. தன்னிடம் அவன் எதையோ மறைக்கிறான் என்று..

“உன் தடுமாற்றமே காட்டிக்கொடுக்குது உன்னை..”, அழுத்தம் திருத்தமாக கதிர் சொல்ல..

“கண்டதையும் உளறாதேடா.. நான் அப்படியேதான் இருக்கேன்..”, சமாளிப்பாய்..

மறுப்பாய் தலையசைத்த கதிர்.. மேலும் அவனிடம் எதுவும் கேட்காமல், “சரி க்ளாசுக்குப் போகலாம் வா.. இன்னைக்கு டெஸ்ட் இருக்கு..”, என்க..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.