(Reading time: 14 - 27 minutes)

தொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 07 - ஸ்ரீ

Vizhi vazhi uyir kalanthavale

அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்

அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்

என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே

என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே

வேறென்ன வேண்டும் உலகத்திலே

இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே

ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

 

நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன்

அன்பே ஓர் அகராதி

நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன்

தினம் உன் தலைகோதி

காதோரத்தில் எப்போதுமே உன்

மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்

கையோடு தான் கைகோர்த்து நான்

உன் மார்புச்சூட்டில் முகம் புதைப்பேன்

வேறென்ன வேண்டும் உலகத்திலே

இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே

ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

ழைய நினைவுகளோடே உறங்கியிருந்தவளின் அலைப்பேசி அலறிய சத்தத்தில் வேகமாய் எழுந்து அமர எங்கிருக்கிறோம் என்று உணரவே சில நொடிகள் பிடித்தது வெண்பாவிற்கு.

சற்றே நிதானமடைந்தவள் அலைப்பேசியை எடுத்து காதில் வைக்க சிந்தாம்மா தான் அழைத்திருந்தார்.

“சொல்லுங்க சிந்தாம்மா”

“என்ன கண்ணு இன்னும் கிளம்பலையா லேட் ஆகுமா?”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ம்ம் கிளம்பிட்டேன் இப்போ வந்துருவேன் சிந்தாம்மா..”என்றவள் எழுந்து வாஷ் ரூம் சென்று முகம் கழுவி வெளியே கிளம்பினாள்.

வீட்டிற்கு வந்தவளின் முகத்தை கண்டு பயந்தவர் அவள் உடைமாற்றச் சென்ற இடைவெளியில் திவ்யாந்திற்கு அழைத்தார்.

“தம்பி என்னனே தெரில நேத்துல இருந்து பாப்பா சரியே இல்ல இத்தனை சோர்வா அவளை பார்த்ததே இல்ல நீ வேணா கிளம்பி வரியா..”

“சிந்தாம்மா கொஞ்சம் மூச்சு வாங்கிகோங்க.ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க.ஒண்ணுமில்ல எல்லாமே சீக்கிரம் சரி ஆய்டும்.நேத்து அவளை பார்த்து பேசினேன் அந்த யோசனைல தான் இருப்பா..கவலபடாம இருங்க சீக்கிரமே நாம மூணு பேரும் பழைய வாழ்க்கையை வாழ தான் போறோம்.சரி ஒரு எமர்ஜென்சி கேஸ் இருக்கு நா கிளம்புறேன்.”

என்ன தான் அவன் சமாதானப் படுத்தினாலும் சிந்தாம்மாக்கு தான் மனது ஆறவேயில்லை.உடைமாற்றி வெளியே வந்தவள்,

“சிந்தாம்மா எனக்கு பசியே இல்லை.நீங்க சாப்ட்டு படுத்துக்கோங்க.நா போய் படுத்துக்குறேன்.”

“பாப்பா ஒரு நிமிஷம் உன்கூட பேசனும் இங்க வரியா?”

தரையில் அமர்ந்திருந்தவரின் அருகில் வந்து அமர்ந்தவள் அவர் முகம் பார்க்க தவிர்த்து தலை குனிந்தே அமர்ந்திருந்தாள்.

“ஏன் கண்ணு என்னவோ போல இருக்க.மனசுகுள்ள எதையோ போட்டு குழப்பி கஷ்டப்படுற என்னனு சொல்லு.தம்பி என்ன சொன்னான்?”

அவர் முடித்ததுதான் தாமதம் அவர் மடியில் விழுந்து புடவையை இறுக்கிப் பிடித்தவள் அழுத்தம் தீர அழுது தீர்த்தாள்.

சில நிமிடங்கள் ஆதரவாய் தலை வருடிக் கொடுத்தவர் மென்மையாய் முதுகை தடவிக் கொடுத்தார்.

“ஏன் கண்ணு போதும் எவ்வளவோ அழுதாச்சு ஏன்டா உன்னை நீயே கஷ்டப்ப டுத்திக்குற.”

“ஏன் சிந்தாம்மா நீங்க இவ்ளோ நல்லவங்களா இருக்கீங்க..என் அம்மா ஏன் உங்களை மாதிரி இல்லாம போனாங்க...எத்தனை அழகா நடந்த கல்யாணம் எங்களோடது.எத்தனை நிம்மதியா நாம வாழ்ந்தோம் ஏன்ம்மா எல்லாமே மாறிப் போச்சு..என் விதி எல்லா உறவுகளும் இருந்தும் இப்படி தனியா துடிக்கணும்னு எழுதிருக்கு..”

“வெண்பா கண்ணு இப்போ ஏன் பழசையெல்லாம் போட்டு நினைச்சுட்டு இருக்க..இப்பவும் தம்பி உனக்காக தான் காத்துட்டு இருக்கு.அந்த வீட்டு ராணி டா நீ..”

“அதான் இன்னமும் கஷ்டமா இருக்கு சிந்தாம்மா..உங்களுக்கும் திவாக்கும் அன்பு காட்றத தவிர எதுவுமே தெரில.அதுதான் என் குற்றவுணர்ச்சியை இன்னும் இன்னும் அதிகமாக்குது.

திவா இன்னும் பதினைஞ்சு நாள்குள்ள என்ன வீட்டுக்கு வர சொல்லிருக்காரு இல்லனா இந்த நாட்டை விட்டு என்னைவிட்டு உங்களைவிட்டு கொஞ்ச நாள் தள்ளியிருக்க போறாராம்.”

“இது அவனால முடியும்னு நினைக்குறியா வெண்பாம்மா..அவனோட உயிரும் உலகமும் நீதான் அதை விட்டு அவன் எங்க போவான்.!?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.