(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 05 - அனிதா சங்கர்

Kathal kathalitha kathaliyai kathalikkum

ன்பாதம் வகுப்பு ஆண்டு பரீட்சைகள் ஆரம்பமாகி இருக்க சில நாட்கள் விடுமுறை இடைவெளியில் நடந்த பரீட்சைக்கு தயாராகி எழுதிக்கொண்டிருந்தனர் மாணவர்கள்...

கதிரேசன்,தேவி,அன்னம் என அனைவரும் பக்கத்து ஊருக்கு விஷேஷம் என்று போய் இருக்க...

வீட்டில் தனியாக இருக்க பிடிக்காமல் கயல் வீட்டிற்கு சென்றிருந்தால் தேன்நிலா...

அன்று அவளுக்கு  உடம்பு ஒரு மாதிரியாக இருந்தது... காலையில் இருந்து வயிறு வேறு ஒரு மாதிரி வலித்துக் கொண்டிருக்க... மாலை ஆறு மணி அளவில் கயலது வீட்டிலிருந்து கிளம்பினாள் தேன்நிலா...

கயல் வீடு ஊரிலிருந்து கொஞ்சம் ஒதுக்கு புறமாக இருக்கும்,அதனால் அவள் தனது சைக்களில் வந்திருந்தாள்... சிறிதுதூரம் ஓட்டிச்சென்றவளால் அதற்கு மேல் ஓட்டி செல்ல முடியவில்லை...

என்ன செய்வது  என்று தெரியாமல் அருகில் இருந்த மரத்தடி நிழலில் சைக்கிளை நிறுத்தியவள்...,யாராவது வருகிறார்களா என்று பார்த்தாள்...

அந்த வழியில் யாரும் வருவதாய் தெரியவில்லை...

 “ தாயாரும் அறியாமல் ஊராரும் காணாமல்

மொட்டொன்று பட்டென்று மலரும்

என்னென்று தெரியாமல் ஏதென்று  புரியாமல்

பெண்நெஞ்சில் பேரச்சம் பரவும்...”

வயிற்றுவலி இன்னும் அதிகரிக்க வயிற்றை பிடித்துக் கொண்டு நின்றவளுக்கு ஏதோ வித்தியாசம் போல் தெரிய தனது ட்ரசைப் பார்த்தவள் அதிர்ந்து தான் போனாள்...

அன்னம் சில நாட்களாக சொல்லி தந்தவை நியாபகம் வந்தது...

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவர் வேல்விழி பூபெய்தியே பொழுதே தேன்நிலாவிடம் அதைப்பற்றி பக்குவமாக எடுத்து கூறி இருந்தார் அன்னம்...

அதனால் அவளுக்கு தன்னோட நிலைப்புரிந்தது...இப்பொழுது அவள் வீட்டுக்கு சென்றாக வேண்டும் என்ற நினைவே அவளை பயம்கொள்ள செய்தது...

வயிற்றுவலியுடன்,முதுகுவலியும் சேர்ந்துக் கொள்ள... அவள் கண்களில் கண்ணீர் வழிய தொடங்கியது...

அவளது கண்ணீர் அவளது பார்வையை மறைக்கும் நேரம்,அவளது கண்களுக்கு ஒரு பைக் வருவது மங்கலாய் தெரிந்தது  அவளது கண்களில் இருந்த கண்ணீரால்...கொஞ்சம் பைக் கிட்ட வரும்பொழுது தான் தெரிந்தது அதில் வருவது மதிவேந்தன் என்று...

அவனை பார்த்ததும் மனதில் ஒரு நிம்மதி தோன்றினாலும்...அவளுள் ஒரு சந்தேகமும் எழுந்தது...இந்த நிலையில் அவள்அவனுடன் செல்லலாமா என்று... அவளை தாண்டி அந்த பைக் சீறிப்பாய்ந்துச் சென்றது...

யோசனையில் இருந்தவள் அவனை அழைக்கவும் மறந்து விட்டாள்...அதனால் அவன் அவளை கடந்து சென்றுவிட்டான்... அவனது பைக் அவளை கடந்துச் சென்றப்பின்பு தான் அவள் அதை உணர்ந்தாள்...

வந்தவனும் சென்று விட அவளது கண்களில்  திரும்பவும் கண்ணீர் வர ஆரம்பித்தது... கண்களில் வந்த கண்ணீரை துடைத்து விட்டு நிமிரும்பொழுது அவளது அருகில் வந்து நின்றிருந்தான் மதிவேந்தன்...

அவளை தூரத்தில் வரும்பொழுதே பார்த்துவிட்டான் மதிவேந்தன்...எதற்காக அவள் இங்கு நிற்கிறாள் என்று யோசித்தவனுக்கு கயலைப் பார்க்க வந்திருப்பாள் என்று விடைக் கிடைக்க தனது வண்டியை நிறுத்தாமல்  சென்றவன் அவளை தாண்டிப்போகும் பொழுதுதான் அவளது அழுத கண்களைப் பார்த்தான்...

அவள் தன்னை அழைப்பாள் என்று நினைத்தவன் அவளிடம் வரும்பொழுது தனது பைக்கை அவளது அருகில் செல்லும் பொழுது தனது  வண்டியை ஸ்லோ செய்ய அவள் அவனை கவனிக்காமல் யோசனையில் இருப்பதை பார்த்தவன் அவள் அழைக்காமல்  அவளிடம் தனது வண்டியை நிறுத்தப் பிடிக்காமல் சென்றவன்...

சிறிதுதூரம் சென்றப்பின்பு அவளை திரும்பிப் பார்க்க அவள் அழுதுக்கொண்டிருப்பது தெரிந்தப் பின்பு மேலே செல்லாமல் அவளிடம் வந்து சேர்ந்தான்..

அவள் அருகில் பைக்குடன் வந்து நின்ற மதிவேந்தனை பார்த்தவளது கண்களில் ஒரு நிம்மதி பரவியது...

அவனை நிமிர்ந்து அவள் பார்க்க,”இங்க என்ன பண்ணிட்டு இருக்க...”என்று அவன் கேட்க

அவனிடம் இப்பொழுது எப்படி போவது என்று யோசித்துக் கொண்டிருந்தவள் அவனது கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க...

அவனுக்கு எரிச்சல் வர,”நிலா உன்னை தான் கேக்குறேன்...,கயலைப் பார்க்க வந்தியா... எதுக்கு இங்க நிக்குற...”என்று அவன் மீண்டும் அடக்கப்பட்டக் கோபத்துடன் கேட்க

அவனது கோபத்தை அவனது குரலில் கண்டுக்கொண்டவள்

“அது வந்து... அது...வந்து...,என்ன வீட்டு வரைக்கும் கொண்ட விடுறியா...”என்று தையிரியமாகக் கேட்டுவிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.