(Reading time: 12 - 23 minutes)

அவள் அப்படிக் கேட்டதும் அவளுக்கு பின்னிருந்த சைக்கிளை அவன் பார்க்க,அவனது பார்வைப்போன திசையைப் பார்த்தவள்,”அ..அது.. கீழ விழுந்துட்டேன்... முட்டில காயம்...”என்று அவள் அவசரமாக சொல்ல

அடிப்பட்டதால் தான் அவள் அழுதுக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்தவன்... அவள் இந்த நிலையில் கேட்டப் பின்  மறுக்க முடியாமல்,”சரி ஏறு...” என்றுக் கூறியவன்,ஊரில் இருக்கும்  தனது நண்பன் இளமாறனிற்கு அழைத்தவன் சைக்கிளை நாளை காலை  கௌதம் வீட்டில் விட்டு விடுமாறு கூறிவிட்டு  தனது பைக்கிள் அவளை அழைத்துக் கொண்டு  அவளது வீட்டிற்கு அழைத்து சென்றான்.இருவரும் அமைதியாக தான் இருந்தனர்...

கதிரேசன்,தேவி,அன்னம்  என அனைவரும் வந்திருந்தனர்... தேன்நிலா இன்னமும் வராமல் இருக்கவே அவளை அழைத்து வருமாறு கதிரேசனிடம் அன்னம் கூற... அவர் தனது வண்டியை எடுக்கவும் மதி வேந்தன்  வண்டி   வந்து சேரவும் சரியாக இருந்தது...

அவனது வண்டியில் தேன்நிலா வரவும்..., அவளது  சைக்கிள் வீட்டில் இல்லாததால் அவள் சைக்கிளில் தான்  கயல் வீட்டிற்கு சென்றிருப்பாள் என்று நினைத்த அன்னம்... அவள் மதிவேந்தனுடன் பைக்கிள் வர அவள் ஏங்கோ விழுந்துவிட்டாள் என்று நினைத்த அன்னம்

அவர்களிடம் விறுவிறுவென்று ஓடி,”என்னாச்சு மதி...,தேனு எங்காவது விழுந்துட்டாள...” என்று

பதட்டத்துடன் கேட்க

பைக்கிள் இருந்து இறங்கிய தேன்நிலா அன்னத்திடம் செல்லாமல்...,தனது பாவாடையை பிடித்துக் கொண்டே...  தனது வீட்டிற்கு பக்கத்தில் இருந்த அக்காவை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல அவர்கள் பின்னால் தேவி சென்றார்.

தனது அத்தையிடம் பதட்டத்தை பார்த்தவன், நிலா இறங்கியதும் பைக்கிள் இருந்து இறங்கி அவரிடம் சிறிய அடி தான் என்று ஆரம்பித்து அவளை பார்த்ததிலிருந்து சொல்லி முடித்தான்...

அதற்குள் உள்ளேயிருந்து வந்த நிலாவின் பக்கத்து வீட்டு பெண் எதுவோ அன்னத்தின் காதில் சொல்ல அவரது முகம் ஆயிரம் வாட்ஸ் பல்ப்  போட்டதுபோல் பிரகாசிக்க... அந்த பெண் எதுவோ சொல்ல அவரது பார்வை அவனது பைக்கிடம் செல்ல

மதியை அங்கு உட்கார சொல்ல தனது அத்தையின் பேச்சை மீற முடியாமல் நிலா வீட்டு திண்ணையில் அமராமல் பக்கத்து வீட்டு திண்ணையில் அமர  அவனது செயலை கண்ட அன்னத்திற்கு வருத்தம் இருந்தாலும் அவன் அப்படி தான் என்பதை உணர்ந்தவர் பக்கத்து வீட்டு பொண்ணை  அவனுக்கு தண்ணீர் கொடுக்க சொல்லிவிட்டு உள்ளே சென்றார் தனது அன்பு மகளை பார்க்க...

கதிரேசனுக்கு  மதிவேந்தனை பற்றி தெரியும் அவனிடம் வந்த மாற்றங்கள் பற்றியும் தெரியும்... இருமுறை அவனிடம் பேச நினைத்து அவர் பேச அவன் அவரை மதிக்காமல் கடந்து சென்று விட... அதன் பிறகு அவர் அவனிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டார்...

வெளியில் வந்த தேவி தனது கணவர் கதிரேசனை உள்ளே அழைக்க அவரும் உள்ளே சென்றார்... அதற்குள் வெளியில் வந்த தேவி அவனின் பைக்கை துடைத்துவிட்டு சென்று விட்டார்...

என்ன செய்வது என்று தெரியாமல் பக்கத்து திண்ணையில் அமர்ந்திருந்தான் மதிவேந்தன்...

உள்ளே என்ன நடக்குது..(பாவம் பய புள்ள... உள்ள என்ன நடக்குதுனு தெரியாமலே...வெளிய உட்கார்ந்திருக்கு...)

உள்ளே அன்னம் தனது செல்ல மகளை கொஞ்சிக் கொண்டிருந்தார்...

“என்னோட தங்கம்... எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா...”என்று தனது மகளுக்கு  திருஷ்டி கழித்தார்...

“பயம்போக சீராட்டி பாலூட்டி

இருமேணி மருதாணி இடுக..

உளுந்தாலே களிசெய்து வெள்ளங்கள் தாநீட்டு

நல்லெண்ணெய் தான் விட்டு தருக...”

கதிரேசனுக்கு இப்பொழுது யாரை சடங்குகள் செய்ய கூப்பிடுவது என்று தெரியவில்லை... பெண்ணை அன்னத்திற்கு என்று தனது விட்டு அவளது எண்ணம் என்ன என்று தெரியாமல்...தேவியின் சொந்தங்களை எப்படி அழைப்பது என்ற எண்ணம் அவரை அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை...

அமைதியாக அவர் இருக்க இவருக்கு தோன்றிய எண்ணம் இப்பொழுது தேவிக்கு  தோன்ற தனது  அண்ணனிற்கு சொல்லுமாறு  கதிரேசனிடம் அவரது நிலைமையை புரியாமல் சொன்னார்...

அவர் சொன்னவுடன் தான் அன்னதிற்கும் தனது அண்ணனிடம் சொல்லவேண்டும் என்ற எண்ணமே அவளுக்கு வந்தது...

உடனே தேவி மற்றும் கதிரேசனிடம் வந்தவர், ” மாமா நான் போய் அண்ணாக்கிட்ட சொல்லிட்டு வந்துடுறேன்...நீங்க தேவி வீட்டுக்கும் சொல்லுங்க..ஆனா என்னோட பொண்ணுங்குறதால  அவர் கண்டிப்பா மாமா முறையில இருந்து எல்லா முறையும் செய்யனும்...”என்று அன்னம் கூற

“அன்னம் எதுவும் வேணாம் அவனை பத்தி தெரியாதா... அவன் வர மாட்டான்...வீணா எதுக்கு நாம இப்ப போய் அவன்கிட்ட பேசிக்கிட்டு  பிரச்சனை ஆக்கிட்டு... வேணாம் அன்னம்....”என்று அவர் சொல்ல

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.