(Reading time: 15 - 30 minutes)

31. சர்வதோபத்ர... வியூகம்...!!! - வசுமதி

Savathopathra... Viyoogam

கிலா.. நீ என்ன முயன்றாலும் புதைத்துகிடக்கும் எதையும் உன்னால் வெளியே மீட்டிட முடியாது..”, ஆக்ரோஷமாக சீறியது நரீசன்..

“என்னால் அவற்றை என்ன முயன்றாலும் எடுத்துவிட முடியாதுதான்.. அதை ஒத்துக்கொள்கிறேன் நான்.. ஆனால் மறைந்துகிடப்பவைகள் வெளியே வரும் நேரம் நெருங்கிவிட்டது நரீசா.. அதை உன்னால் என்ன நினைத்தாலும் தடுக்கவும் முடியாது அபகரிக்கவும் முடியாது..”, நரீசனுக்குமேல் குரலை உயர்த்தி சொன்னது அகிலன்..

“இந்த மனிதர்கள் உனக்கு எடுதுக்கொடுப்பார்கள் என்று நினைக்கிறாயா..??”, நக்கலாக..

“கண்டிப்பாக.. அனைத்தையும் வெளியே கொண்டுவருவார்கள் அவர்கள்.. எனக்காக அல்ல.. மனிதர்களுக்காக.. அவர்களின் நலனுக்காக..”, திடமாக..

“அந்த இடத்தின் சாவி என்னிடம் இருக்கும்பொழுது உங்களால் எப்படி அதைத் திறக்கமுடியும்..”

“இந்நிமிடம் வரை உன்னிடம் இருக்கிறது.. அடுத்த நிமிடம் அது யாரிடம் செல்லுமோ யாருக்கும் தெரியாது..”, என்றது அகிலன்..

“யாரிடமும் செல்லாது அகிலா.. புதைக்கப்பட்டிருப்பவை எனக்கென்றிருக்கும்பொழுது அது எப்படி என்னைவிட்டுச் செல்லும்..??”

“உன்னுடையது என்றோ என்னுடையது என்றோ இப்பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை நரீசா.. எல்லாமும் எல்லாருடையது.. அது ஓரறிவு புழுவோ ஆரறிவு மனிதனோ எதுவாக இருந்தாலும் யாராகவும் இருந்தாலும் அதுதான் நியதி.. அப்படித்தான் நடக்கும்.. சாவி இருப்பதாய் இப்பொழுது இந்த நிமிடம் நீ மகிழ்ச்சியின் உச்சியில் திளைத்திருக்கலாம்.. ஆனால் அது நிரந்தரமல்ல.. யாரிடம் அது சேர வேண்டுமோ அது அவரிடம் தான் சேரவேண்டும்..”

“உன்னைவிட்டால் பேசிக்கொண்டே நேரத்தைக் கடதுவாய் அகிலா.. எனக்கு அந்த வரைபடம் வேண்டும்.. என்னிடம் அதைக்கொடுதுவிடு..”

“அந்த வரைபடத்தை வரைந்தவன் நீதானே..?? வரைந்தவனுக்கே அது நினைவில்லையா..??”, கேலியாகக் கேட்ட அகிலனை ஒருவித ஆங்காரத்துடன் பார்த்தது நரீசன்..

“வெந்தபுண்ணில் வேல் பாய்ச்ச நினைக்கிறாயா அகிலா..”, என்ற நரீசன் குரலில் என்னயிருந்தது என்று புரியவில்லை யாருக்கும்..

“நான் வேலும் பாய்ச்சவில்லை வில்லும் எரியவில்லை.. நீ அன்று செய்த தவறை சுட்டிக்காட்டுகிறேன்..”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“நரீசா.. இந்த அணிலிடம் என்ன பேச்சு உனக்கு..?? நீ நினைத்தால் அந்த மேப்பை ஒருநிமிடத்தில் உன்னிடம் வரவழைக்கமுடியாதா..??”, இது சுபலராஜா..

“என்னால் முடியாது என்று ஒன்று இல்லை ராஜா.. ஆனால் அப்படி கட்டாயமாக அந்த வரைபடத்தை நான் எடுத்தால் அதிலிருக்கும் அனைத்தும் அனைத்தும் அழிந்துவிடும்..”, எரிச்சலுடன் ராஜாவிடம் மொழிந்தவன், “இங்கு பார் அகிலா.. இரண்டு பேரும் ஒரு உடன்படிக்கைப் போட்டுக்கொள்ளலாம்..”, சமாதானமாக..

அதில் சிக்குவானா நம் அகிலன்..

“என்ன உடன்படிக்கை..??”, எச்சரிக்கையுடன்..

“பெரிதாக ஒன்றுமில்லை.. அந்த வரைபடத்தை உபயோகித்து அனைவரும் புதையல் இருக்கும் இடைத்தை அடைவோம்.. நான் சாவியைத் தருகிறேன்.. நீங்கள் புதையலில் பாதியை எனக்குத் தரவேண்டும்..”

அதைக்கேட்டு உரக்க சிரிக்கத் துவங்கினான் அகிலன்..

“உன்னைப்பற்றி நன்கு தெரிந்த என்னிடமே விளையாடப் பார்க்கிறாயா நரீசா..??”, நக்கலாகக் கேட்ட அகிலன், “புதைந்துகிடக்கும் இடத்தை அடைந்தபிறகு நீ இவர்களை அந்தப் புதையலுக்கு பலியிட்டுவிடுவாய் அப்படித்தானே..??”, இப்பொழுது கூர்மையாக..

“அகிலா இவன் எங்களை பலியிட்டுவிடுவானா..??”, இது தியா..

“இவனது திட்டம் அதுதான் தியா..”, மேலும் எதுவோ கூறவந்தவனுக்கு உடலிலுள்ள உயிர் தன்னைவிட்டுப் பிரிவதுபோல் உணர்வு..

புரிந்துவிட்டது அகிலனுக்கு..

நேரம் குறைந்துகொண்டே வருகிறதென்று..

கருடனிடம் சைகைக் காட்டியது அவசரமாக..

மற்றவர்களின் கவனம் தன்மீது படாத தருணத்தில் தனது வலது இறகால் நரீசனை வளைத்துப்பிடிதது கருடன்..

அதைக்கண்டு ராஜா சுஷாஷன் சுயோதன் மூவரும் திகைத்துப்போயினர்..

கருடனின் இச்செயலை எதிர்பார்க்காது திமிரத்துவங்கியது நரீசன்..

நரீசனின் திமிறல் அதிகமாக கருடனின் இறுக்கமும் அதிகமானது..

ஒரு கட்டத்தில் தனது திமிரலை குறைத்தது நரீசன்..

அதுதான் சமயமென நரீசனை உலுக்கியது கருடன்..

வயிற்றில் மறைந்திருந்த சிறியதொரு மினுமினுப்பான கல் தியாவின் கையில் சரணடைந்தது..

தனது முழு சக்தியையும் பயன்படுத்தி நரீசனை ஒருபக்கம் தூக்கி எறிந்தது கருடன்..

பெரியதொரு ஊளையுடன் சருகுக்காட்டை விட்டுத் தள்ளிப்போய் விழுந்தது நரீசன்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.