(Reading time: 15 - 30 minutes)

மண்டபம் மண்ணுக்குள் அடங்கி மண்ணோடு மண்ணாக முழுதாக மண்ணைத் தொட்டிருந்தது பிரம்மனின் சிலை..

சிலையைச் சுற்றி பெரியதொரு ஏடு மாலை..

நடந்துகொண்டிருந்தது எதையும் நம்பமுடியவில்லை அனைவராலும்..

அத்தனை ஆச்சர்யங்கள்.. ஒரே நாளில்..

கண்கள் விரிய அனைவரும் அந்த சிலையையே உற்றுப்பார்த்துக்கொண்டிருக்க..

தியாவும் ரியாவும் ஒருவரை ஒருவர் இறுக்கமாய் கட்டிப்பிடித்திருன்தனர்..

இருவருக்கும் சாதித்துவிட்ட உணர்வு..

தந்தையின் கனவை நிறைவேற்றிவிட்ட கர்வம்..

இருவரின் செயலைக்கண்டு நெகிழ்ச்சியே அனைவருக்கும்..

“ஹே.. இரண்டு பேரும் கொஞ்சுனது போதும்.. இந்த சிலையை இப்படி எடுத்துட்டுப்போறது..??”, இது மயா..

தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே

நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியில் தானே வாழ்கிறேன்

நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன்

நீ சூரியன் நான் வான்முகில் நீ நடந்திடும் பாதையாகிரேன்

நீ சூரியன் நான் ஆழ்கடல் என் மடியில் உன்னை ஏந்தினேன்

தவமின்றி கிடைத்த வரமே ஒ ...இனி வாழ்வில் எல்லாம் சுகமே

மறைத்துவைத்திருந்த போனை ரியா எடுக்க.. மறுமுனையின் அவளது தந்தை..

“பத்திரம்மா இருக்கொம்ப்பா”, அவர் கேட்டிடும் முன்னே பதில் சொல்லியிருந்தாள் ரியா..

பெருமூச்சொன்று அவரிடம்..

தாங்கள் இருக்கும் இடத்தை அவள் விளக்கிட..

அவர்களை அங்கேயே காத்திருக்கும்படி பணிந்தவர் போனை அணைத்திருந்தார்..

“உனக்கு மட்டும் எப்படி போன் கெடச்சுது..??”, கேள்வி பிறந்தது வ்ருதுஷிடம்..

“என் பெர்சனல் போன் வ்ருதுஷ்.. இது என்கிட்ட இருக்கறது பெருசா யாருக்கும் தெரியாது..”, என்றவள் தியாவைப்பார்த்து, “இங்கேயே நம்மளை வெயிட் பண்ண சொன்னாங்க..”, என்றவள் ஒரு மரத்தில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்..

று மாதத்திற்கு பிறகு..

தியா செழுவூரை நோக்கி சென்றுகொண்டிருந்தாள்..

வருடங்கள் கழித்து சொந்தங்கள் கிடைத்திருக்க.. கொஞ்சம் உறுத்தல் அவள் மனதில்..

விடை தேடி செழுவூருக்குப் பயணம்..

கேள்விகள் பல அவள் மனதில் இன்னும் ஓடிக்கொண்டிருக்க.. அதைக் கலைப்பதுபோல் தொலைபேசி இசை மீட்டியது..

“சொல்லுங்க ரிக்கி..”

“டிரைவிங்கா தியா..”

“ஆமா.. அகிலனைப் பார்க்க செழுவூர்.. ஏதாவது முக்கியமான விஷயமாப்பா..??”

“ஹ்ம்.. செகன்ட் ஹியரிங் வருது தியா.. இந்த தடவை எல்லாரும் போகனும் போல..”

“வில் பி தேர் ரிக்கி..”

“அவங்க அநேகமா ரிலீஸ் ஆகிடுவாங்க தியா..”, கசந்த குரலில்..

“அப்பா சொன்னார் ரிக்கி.. அவங்க யாருக்கும் எதிரா எந்த எவிடென்ஸும் பெருசா கிடைக்கலாம்.. அவ்வளவு ஓட்டைகள்.. ஒன்னும் பண்ண முடியாது.. பெரிய இடத்திலிருந்து ப்ரஷர்ஸ் வேற போல..”

“பணம் படுத்தும்பாடு தியா.. இங்க.. அப்பாங்க இரண்டு பேரும் விட்டுடலாம்னு சொல்றாங்க.. ஆனால் எனக்குத்தான் மனசு கேட்கமாட்டேங்குது.. நமக்கு சாதகமா வரலன்னா அப்பீல் பண்ணலாம்னு இருக்கேன்.. விக்கியும் அதான் சொல்றான்.. நீங்க இரண்டு பேரும் என்ன சொல்றீங்க..?? பார்வார்ட் பண்ணலாமா..??”

“இங்கயும் பேரெண்ட்ஸ் அப்படித்தான் சொல்றாங்க.. இனி இருக்க லைப்பாவது பீஸ்புல்லா இருக்கனும்னு நினைக்கிறாங்க ரிக்கி.. பார்வேர்ட் பன்றதைப்பற்றி கொஞ்சம் கழிச்சு யோசிக்கலாம்.. இப்போ அவங்க மன நிம்மதிதான் முக்கியம்..”

“நீ சொல்றதும் சரிதான் தியா.. பார்க்கலாம்.. அப்போ என்ன சிட்டுவேஷனோ.. அது மாதிரி முடிவு பண்ணிக்கலாம்..”

“அதேதான்.. ஹ்ம்.. அப்புறம் செழுவூர் பிரம்மன் கோவிலோட கும்பாபிஷேகத்துக்கு டேட் குறிச்சாச்சு.. இன்னும் டூ மந்த்ஸ்ல.. மீட் பண்ணுவோம்..”

“எஸ் எஸ் தியா.. நானும் கேள்விப்பட்டேன்.. கங்க்ராட்ஸ் பார் யூ.. அந்த ஓலைச்சுவடி எல்லாம் ஆர் அன்ட் டீக்கு பாஸ் ஆகிருக்குபோல.. சோ ஹாப்பிடா..”

“தாங்க்ஸ் ரிக்கி.. நீங்க எல்லாம் இல்லைன்னா இவ்ளோ ரீச் பண்ணிருக்க முடியாது.. ஒன்ஸ் எகைன் தாங்க்ஸ் ரிக்கி..”

“நியாயப்படி நாங்கதான் உனக்கு தாங்க்ஸ் சொல்லனும்.. உன்னாலதான் எங்க பேரெண்ட்ஸ் எங்களுக்குத் திருப்பி கெடச்சிருக்காங்க..”, இடையிட்டது விக்கியின் குரல்.. அதில் அத்தனை நெகிழ்வு..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.