(Reading time: 15 - 30 minutes)

அடுத்ததாக ராஜா சுஷாஷன் சுயோதன் என மூவரையும் காட்டைவிட்டு வெளியே துரத்திய கருடனை அனைவரும் ஒரு பிரம்மிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர்..

“கருடா.. நீ இதை ஏன் முதலிலேயே செய்யவில்லை..??”, என்று கேட்டான் எழில்..

“எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் வரும்பொழுதுதான் அனைத்தும் நடக்கும் எழில்.. அதுவுமில்லாமல் எல்லாம் வெகு சுலபாக கிடைத்துவிட்டால் அதற்கு மதிப்பென்பது இருக்காதல்லவ்வா..??”

எதுவோ மேலே கேட்கவந்த எழிலைத் தடுத்த அகிலன், “எழில்.. இது பேசுவதற்கான நேரமில்லை..”, அழுத்தமாக..

“சரி அகிலா.. அப்படியென்றால் நாம் அந்த புதையல் இருக்கும் இடத்தைத் தேடலாம்.. நீ அந்த மேப்பைக்கொடு..”, என்றான் எழில்..

“நீங்கள் மட்டும் தான் அந்த புதையல் எடுக்கப்போகிறீர்கள்.. நாங்கள் யாரும் அங்கு வரமாட்டோம்.. எங்களால் இனி உங்களுடன் வரவும் முடியாது.. நரீசன் இங்கு திரும்பி வருவதற்குள் நீங்கள் புதைந்துகிடப்பவைகளை எடுத்திடவேண்டும்..”

“நீங்கள் வரப்போவதில்லையா..?? ஏன்..??”, இது தியா..

“நாங்கள் வருவதற்கு நாங்கள் உயிருள்ளவர்களாக இருக்கவேண்டும் தியா..”, இது அன்னம்..

“என்ன அன்னம் சொல்ற..??”, அதிர்ந்தவண்ணம் கேட்டாள் க்ரியா..

“ஆமாம் க்ரியா.. நாங்கள் நால்வரும் கொஞ்சம் கொஞ்சமாக கல்லாக மாறிக்கொண்டிருக்கிறோம்..”, என்றது சிவசிஷ்யன்..

“ஏன்..?? ஏன் இப்படி..??”, இது மயா..

“ஏனென்றால் எங்களின் வேலை முடியும் தருணம் வந்துவிட்டது..”, என்ற அகிலன், “நீங்கள் தேடும் புதையல் என்ன தெரியுமா..?? உலகின் குணப்படுத்த இயலாத நோய்களுக்கான மருத்துவக்குறிப்புகள்.. கூடவே மிதிப்பில்லாக பிரமண்ணின் கோவில் சிலை..”, என்றது..

“உங்களுக்கும் புதைந்துகிடப்பதற்கும் என்ன சம்மந்தம் அகிலா..??”, இது வ்ருதுஷ்..

“எங்களுக்கும் அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை வ்ருதுஷ்.. உங்களுக்கும் அதற்கும் தான் சம்மந்தம்.. தேடிச்செல்லுங்கள் அதனிடம்..”, அவசரப்படுத்தியது அகிலன்..

“நீ எங்களுடன் வரப்போவதில்லைய அகிலா..??”, இது தியா..

“இதற்குமேல் உங்களுடன் வருவதற்கு எங்களால் இயலாது..”, என்ற அகிலன், “புதைந்துகிடப்பவைகளை எடுத்துக்கொண்டு இதே இடம் வாருங்கள்.. உங்களுக்காக காத்திருப்பேன் நான்..”, அங்கேயே அகிலன் நின்றுகொள்ள..

வேறு வழியில்லாமல் மற்றவர்கள் முன்னேறிச் செல்லத் துவங்கினர்..

“தியா.. இன்னும் எவ்ளோ நேரம் நடக்கறதாம்..??”, கால்கள் செயலிழந்து போக.. கேட்டிருந்தாள் மயா..

“கிட்டத்தட்ட வந்துட்டோம் தியா.. இன்னும் கொஞ்சம் தூரம்தான்.. ஏதோ ஆறுமாதிரி வரைஞ்சிருக்காங்க இதுல..”, மேப்பை உற்றுப்பார்த்துக்கொண்டு தியா சொல்ல..

காற்றில் மிதந்துவந்தது நீரின் சலசலப்பு..

“வந்துட்டோம்னு நினைக்கிறேன்..”, விக்கியிடம் கொஞ்சம் வேக நடை..

அத்தனை அழகான காட்டாறு..

மிதமான வேகத்துடன்.. பார்ப்போரை மனமயிக்கிக்கொண்டிருந்தது..

“புல்லா தண்ணி மட்டும்தான் தான் தெரியுது.. ரொம்ப பாஸ்ட்டா வேற ஓடுது.. இப்படிக் கடக்கறது..??”, யோசனையுடன் அனைவரும் அங்கேயே நின்றிட..

எங்கிருந்து அடித்துக்கொண்டுவந்ததொரு பெரிய மரம்..

அவர்களுக்கென அனுப்பப்பட்டதுபோல் இக்கறையையும் அக்கறையையும் தொட்டுக்கொண்டு பாலம் அமைத்துக்கொடுக்க.. அழகாக அந்த ஆற்றைக் கடந்தனர் அனைவரும்..

அடர்ந்த காட்டுப்பகுதி அது..

உள்ளே செல்லச் செல்ல ஒன்றும் கண்ணுக்குப் புலப்படவில்லை யாருக்கும்..

ஒருவரையொருவர் கைப்பிடித்துக்கொண்டு நடக்கத்துவங்க..

வழிகாட்டியாய் மின்மினிப்பூச்சிகள்..

மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்துச்செல்ல.. அழகானதொரு கல்மண்டபம் கண்களுக்குக் காட்சியாய்..

“வந்துட்டமா..??”, ரிக்கி ரகசியம் பேச..

“அப்படித்தான் நினைக்கிறேன்..”, என்றான் எழில்..

“ரொம்ப அழகா இருக்குல மண்டபம்.. பெரிய பெரிய தூணோட..”, அத்தனை சிலாகிப்பு ரியாவின் குரலில்..

“ஆமா ரியா.. ஆனா இங்க அகிலன் சொன்ன மாதிரி ஒன்னுமேயில்லையே..”

“என்ன இல்லை..??”

“புதஞ்சுகிடக்குதுன்னு சொன்னான்.. பட்.. அப்படி எந்த அறிகுறியும் காணாம்.. நீயே பாரு.. சுற்றியும் வெறும் மொட்டைப்பாறைகள்..”, என்றபடி அந்த கல்மண்டபத்தின் ஒரு தூணில் கைவைக்க..

காதைப்பிளக்கும் சத்தம்.. பயத்தில் கையை அதிலிருந்து மயா எடுக்க.. அடுத்தநொடி நின்றுபோனது அது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.