(Reading time: 15 - 30 minutes)

அந்தத் தூணை சூழ்ந்துகொண்டனர் அனைவரும்..

“ஒருவேலை இந்தத்தூணிற்கு அடியில் ஏதாவது இருக்குமோ..??”, என்ற வ்ருதுஷ் லேசாக அந்தத் தூணைத்தொட..

வெகு அமைதி அந்தத்தூணில்..

“நான் தோட்டா சத்தம் வரல..”, கொஞ்சம் குழப்பமான குரலில் வ்ருதுஷ் சொல்ல..

தனது கையை அந்தத்தூணின் மீது வைத்திருந்தாள் தியா..

மயா அந்தத்தூணைத் தொட்டபோது என்ன சத்தம் வந்ததோ.. அதே சத்தம் இப்பொழுதும்..

நெற்றி சுருங்க யோசித்தவள் அந்த மண்டபத்திலிருக்கும் வேறொரு தூணைத்தொட.. இப்பொழுதும் அதே சத்தம்..

அருகிலிருந்த வேறுறொரு தூணைத்தொட.. அதிலும் அதேபோல்..

“ப்ச்.. தியா காது வலிக்குது.. தூண்களைத் தொடுவதை நிறுத்து..”, எழில் கத்த.. அதைக் காதில் வாங்காமல் வேறொரு தூணைத்தொட.. அத்தனை அமைதி..

“இப்போ சத்தம் வரல எழில்..”, என்றவளைப் பார்த்து ஆச்சர்யம்..

“எப்படி இது..??”, கொஞ்சம் யோசனை ரிக்கியின் குரலில்..

“இந்த மண்டபத்தில் இருக்கும் தூணோட எண்ணிக்கையைப் பார்த்தீர்களா..??”

“இதுல என்ன இருக்கு..??”, காதுபோன எரிச்சலில் எழில் கொஞ்சம் எரிந்து விழ..

அதை சட்டைசெய்யாது, “பார்த்தீங்களா..?? இல்லையா..??”, மீண்டும் அதே கேள்வி தியாவிடமிருந்து..

“ஏழு தியா.. அதுக்கு என்ன இப்போ..??”, இது ரியா..

“நம்ம ஏழு பேர் இருக்கோம்.. இங்கிருக்கும் தூண்களும் ஏழு.. அதாவது ஒருவருக்கு ஒரு தூண்.. உங்களின் தூணை கண்டுபிடியுங்கள்..”, என்ற தியா சொல்ல அப்பொழுதுதான் புரிந்தது அனைவருக்கும்..

தமக்கென்று நிர்ணயிக்கப்பட்டத் தூணை தேடிப்பிடித்து அனைவரும் ஒன்றாய் அதன் அருகில் நிற்க..

அந்த மண்டபத்தில் மட்டும் நிலவொளி..

பயங்கர வெளிச்சமாய்..

கொஞ்சம் அதிர்வும்.. அது அந்தக் கல்மண்டபத்தை ஒரு குலுக்கு குலுக்கிட..

மண்டபத்தின் நடுவில் சிறு குழி.. பறவையைப்போல்..

“ச..ர்..வதோ..பத்..ர கி..ரௌ..ஞ்..ச வி..யூக..ம்..”, அழகாய் முணுமுணுத்தன தியாவின் இதழ்கள்..

“என்ன தியா சொல்ற நீ..??”, விக்கி கேட்டிட..

“சர்வதோபாத்ர கிரௌஞ்ச வியூகம்..”, அழுத்தம் திருத்தமாக வெளிவந்தது தியாவின் குரல்..

“அப்படீன்னா..??”

“இது மகாபாரதப் போர் நடந்தப்போ யூஸ் பண்ண வியூகங்கள்.. ஒன்னு சர்வதோபத்ர வியுகம்.. சுற்றியும் பாதுகாப்பு பலமாய் இருக்கும் வியூகம்.. இங்க இப்போ பாதுகாப்பாய் ஒரு வட்ட வடிவுல நாம நிர்கறோம் பாருங்க..”, என்று தங்களை அவள் சுட்டிக்காட்ட.. அத்தனை ஆச்சர்யம் அனைவருக்கும்..

“அடுத்து..??”, இது வ்ருதுஷ்..

“அடுத்து கிரௌஞ்ச வியூகம்.. கிரௌஞ்சப் பறவையைப் போல்.. அங்க பார்ம் ஆயிருக்க குழியப்பாருங்க.. கிரௌஞ்சப் பறவை.. இரெண்டும் சேர்த்து சர்வதோபாத்ர கிரௌஞ்ச வியூகம்”, என்றாள் விளக்கமாக.. 

அவளது பேச்சில் அனைவரும் கட்டுண்டு நிற்க, “அடுத்த என்ன..??”, கேட்டிருந்தான் எழில்..

“தெரியலை..”, இயல்பாய் வந்து விழுந்தது தியாவின் குரல்..

“தியா அந்தக்கல்லு.. ஒரு வேலை அதை நம்ம எதுக்காவது யூஸ் பண்ணனுமோ..?? சாவி சாவின்னு அதைப் பற்றி நரீசனும் அகிலனும் பேசிட்டு இருந்தாங்க இல்லையா..??”, யோசனையுடன் விக்கி சொல்ல..

விழுந்திருந்த குழியையே உறுப்பார்த்துக்கொண்டிருந்த ரிக்கி, “தியா.. அந்தக் கல்லை.. இந்த பேர்ட்டோட ஐஸ்ல வை..”, என்றிருந்தான்..

“என்ன ரிக்கி சொல்ற..??”, இது ரியா..

“நான் தியாட்ட இருக்க கல்லைப் பார்த்தேன்.. அது நல்லா என் மனசுல பதிந்திருச்சு.. இந்தப் பறவையோட கண்ணும் அந்தக்கல்லும் ஒரே மாதிரி.. சோ.. அந்தக் கல்லை இங்க வெச்சா ஏதாவது பாத் மாதிரி.. இந்த சினிமால எல்லாம் வருமே.. அது மாதிரி ஓபனாகலாம்..”, தன் கற்பனைக் கதையையும் சேர்த்து அவன் சொல்ல..

ரிக்கி சொன்னதுபோல் கல்லை அங்கு வைத்திருந்தாள் தியா..

அங்கே மீண்டுமொரு நில அதிர்வு..

கல்லை பறவையின் கண்ணில் வைத்தவுடன் அந்தக்குழி இன்னும் ஆழமாக.. மண்டபத்தில் சிறு சிறு கற்கள் விழத்துவங்கியது..

“வாங்க எல்லாரும்.. என்னமோ சரியில்லை.. மண்டபம் விழுந்தாலும் ஆச்சர்யப்படரதுக்கில்லை..”, அவசரமாய் மொழிந்த வ்ருதுஷ் அனைவரையும் அழைத்துக்கொண்டு அந்த மண்டபத்தைவிட்டு வெளியே வர..

நிலையத்தின் மேல் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்துகொண்டிருந்தது பிரம்மனின் சிலை..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.