(Reading time: 12 - 23 minutes)

“மாமா அவ என் பொண்ணு... அதனால அவளுக்கு எல்லா  உரிமையும் இருக்கு...என்னோட  அண்ணன் செஞ்சுதான் ஆகணும்...”என்று உறுதியாக அவர்களிடம் சொல்லிவிட்டு அனைத்து வேலைகளையும் செய்ய சொல்லிவிட்டு

வெளியில் வந்த அன்னம் அங்கிருந்த மதிவேந்தனை அழைத்துக் கொண்டு தனது இல்லம் நோக்கி சென்றாள்...

தேன்நிலா பூப்படைந்த விஷயம் மதிவேந்தனுக்கு  தெரிந்திருந்தது...பக்கத்தில் இருந்தவர்கள் பேசியதிலிருந்து...

தனது அத்தை சொன்னததும் வண்டியை எடுத்தவன் இப்பொழுது அவர்கள் வீட்டை நோக்கி சென்றான்...

அதற்குள் அந்த விஷயம் அனைவருக்கும் பரவியிருந்தது.தனது அண்ணன் வீட்டிற்கு  சென்றவள் திண்ணையில் இருந்த தனது அன்னையிடம் சென்றாள்.

“அம்மா...அண்ணா இருக்கா...”

“இருக்கான்...இருக்கான்...”என்றார் சலித்தக்குரலில்...

அவருக்கும் தேன்நிலா பெரியப்பெண்ணாகிய செய்தி வந்து சேர்ந்தது எப்பொழுதும் போல தனது பெண்ணின் வாழ்கையை நினைத்து அந்த தாய் மனம் வருந்திக் கொண்டிருந்தது...

அன்னம் உள்ளே சென்றப்போது சந்தனப்பாண்டியன் அமர்ந்து கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்..

மல்லி துணிமணிகளை மடித்துக் கொண்டிருந்தார்...

உள்ளே அன்னம் வரதைப் பார்த்த மல்லி,”வா அன்னம்...”என்று மல்லி அவரை வரவேற்க தனது தங்கையின் வருகையை உணர்ந்த சந்தானப்பாண்டியன்

“வாம்மா...”என்று தனது தங்கையை அழைத்தார்...

தனது அண்ணனுக்கும்,அண்ணிக்கும் தலைஅசைப்பில் பதில் அளித்தாள் அன்னம்.

“உட்காரு அன்னம்...” என்று சந்தானப்பாண்டியன் கூற அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள் அன்னம்.

அதற்குள் அவளுக்கு தண்ணீர் கொண்டு வந்துக் கொடுத்தார் மல்லி.அதை வாங்கி அன்னம் குடித்துக்கொண்டே இருக்கும் பொழுதே மதிவேந்தன் உள்ளே வந்தான்.அவனுக்கு தெரியும் தனது அத்தை தனது தந்தையிடம் எதுவோ பேச வந்துள்ளார் என்று,அது என்ன என்று தெரிந்துக் கொள்ளவே அவன் உள்ளே வந்தான்...

“அண்ணா நான் உங்க கிட்ட சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்...”என்று அன்னம் சொல்ல

“தெரியுமா உன் அண்ணி சொன்னா… நீ சொல்லணும்னு அவசியம் இல்லை...”என்றார் சந்தானப்பாண்டியன்.

“அண்ணா உங்களுக்கு விஷயம் தெரியும்னு எனக்கு தெரியும்... நான் அதை சொல்லிட்டு போக வரலை...அவளுக்கு தாய்மாமாங்குற முறையில உன்னை அவளுக்கு எல்லா சடங்கும் செய்ய கூப்பிடுறேன்...”என்று அன்னம் கூற

“அன்னம் என்ன சொல்லுற...யாருக்கு யாரு சீர் செய்யிறது...,அவ ஒன்னும் என்னோட தங்கச்சி பொண்ணு இல்லை...”என்று சந்தனப்பாண்டியன் கூற அன்னத்தின் கண்களில் நீர் வர தொடங்கியது....

 “அண்ணா என்னோட பொண்ணுனா அவ... அவளை நான் பத்து மாதம் சுமக்கல தான்...ஆனா அவ என்னோட பொண்ணு... நான் அவளோட அம்மா...என்னாலையும் சரி அவளாலையும் சரி இப்படி ஒரு வார்த்தையை யார் சொன்னாலும் தாங்கிக்க முடியாது...,இன்னைக்கி நீயே சொல்லிட்ட அண்ணா... உன்னோட மனசிலையும் நான் மலடிங்கற எண்ணம் இருக்குல...”என்று அன்னம் கூற

“அன்னம் இந்த அண்ணனை தப்பா நினைக்காத....நான் ஒன்னும் அப்படி சொல்லலை என்னோட தங்கச்சி ஒரு அனாதை குழந்தையை தத்து எடுத்து வளர்த்திருந்தா  கூட நான் செஞ்சிருப்பபேன்... ஆனா என்னால அவன் பொண்ணுக்கு செய்ய முடியாது..”என்று கூறினார் சந்தானபண்டியன்.

“அண்ணா அவ பிறந்தது மட்டும் தான் தேவிக்கு ஆனா அவளோட அம்மா நான் தான்.அதனால தனத்தோட பொண்ணுக்கு என்ன, என்ன உரிமை இருக்கோ அதுயெல்லாம் என்னோட பொண்ணுக்கும் இருக்கு... சீர் நீ இப்ப செய்யல நான் பஞ்சாயத்த கூட்டக் கூட தயங்க மாட்டேன்...”என்று கூறிவிட்டு அந்த இடத்தில் நிற்காமல் சரசரவென சென்றுவிட்டாள் அன்னம்.

போகும் தனது தங்கையை பார்த்துகொண்டிருந்தார் சந்தனபாண்டியன்.தனது குழந்தை,தனது கணவன் என்று வந்துவிட்டால், எப்போதும் பெண் அனைத்து உறவுகளுக்கும் அன்னியம் ஆனவள் தான்...அதற்கு அன்னம் மட்டும் விதிவிலக்கா என்ன...

தன் பெண் அவ்வாறு கூறியதும் ஒருமுறை மரகதம் புலம்பி தீர்க்க...

அடுத்த அடுத்த வேலைகளை முடக்கி விட்டார் சந்தனபாண்டியன்...இதை அனைத்தையும் அமைதியுடன் பார்திருந்தான் வேந்தன்.

அவன் தனது அத்தை மீது பயங்கர மனஸ்தாபத்தில் இருந்தான் வேந்தன். அன்னம் பேசிவிட்டு சென்ற பின் சந்தனபாண்டியனுக்கு மனது கஷ்டமாக இருந்தது...அது அவரது  முகத்தில் நன்றாகவே பிரதிபலித்தது... அதனால் தான் அவன் தனது அத்தை மீது  கோபத்தில் இருந்தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.