(Reading time: 14 - 27 minutes)

உயர்ந்தவர் தாழ்ந்தவர் பாகுபாடின்றி யாரையும் பார்த்து எழுந்து மரியாதை கொடுத்து ஒதுங்கி நிற்க வேண்டிய அவசியம் இல்லாமல் சகஜமாய் இருக்க முடிந்தது.

சற்று நேரத்தில் ஆட்டம் பாட்டம் என களைகட்ட அழகிய மஞ்சள் வண்ண லெஹெண்காவில் ஆரணங்கள் அனைத்துமே பூவால் செய்ப்ட்டிருக்க எந்த ஒப்பனையுமின்றி கண்ணுக்கு மையிட்டு வந்தமர்ந்தாள் வெண்பா.

Vizhi vazhi uyir kalanthavale

அவளுக்கு சற்றும் குறையாது சாதாரண சந்தன நிற பைஜாமா ஜிப்பாவில் அத்தனை கம்பீரமாய் தன் அறையிலிருந்து வெளிந்தான் திவ்யாந்த்.

வந்தவன் நேராய் விருந்தினர்களிடம் வந்து அவர்களை மனதார வரவேற்று குழந்தைகளிடம் பேசிவிட்டு மெதுவாய் மேடையேறினான். மேடையேறியவன் சிந்தாம்மாவை தேட முதல் வரிசையில் அமர்ந்து கண்கொள்ளா மகிழ்ச்சியோடு அவர்களையே பார்த்திருந்தார்.

சரியாய் அந்நேரம் வெண்பாவும் அவரை அழைக்க திவ்யாந்த் கீழே சென்று அவரை தன்னோடு வருமாறு அழைத்தான்.

“என்ன சிந்தாம்மா சின்னபுள்ள மாதிரி பிடிவாதம் பண்றீங்க.ஒழுங்கா வாங்க மேடைக்கு..”

“தம்பி சொன்னா கேளு நல்ல காரியம் நடக்குற இடத்துல நா எதுக்கு நா அங்க எல்லாம் வரக் கூடாதுப்பா..நீ போய் பாப்பா பக்கத்துல நில்லு..”

அதற்குள் வெண்பாவே இறங்கி வந்து அவரை கைப்பிடித்து அழைத்துச் சென்று தன்னருகில் நாற்காலியைப் போட்டு அமர வைத்துக் கொண்டாள்.

“நாளைக்கு தாலி கட்டி முடியுற வர என் பக்கத்துலயே தான் இருக்கணும் சொல்லிட்டேன்.திவா நீங்க போய் வந்தவங்களை கவனிங்க..நா பாத்துக்குறேன்.”,என்றவளைப் பார்த்து விழி நிரம்பிய காதலோடு புன்னகைத்துச் சென்றான்.

ஒவ்வொருவராய் கவனித்து அவர்களை உணவருந்த அனுப்பிவிட்டு குழந்தைகளிடம் வேண்டியதை கேட்டு அவர்களுக்கு அதை வாங்கிக் கொடுத்து என முகத்தில் ஒட்டிய புன்னகை மாறாது வலம் வந்தான்.

சிந்தாம்மா மெதுவாய் வெண்பாவிடம்,”கண்ணு அப்பா அம்மா வந்துருவாங்கனு சொன்ன இன்னும் காணுமே போன் பண்ணியா?”

“ம்ம் ப்ளைட் எதுவும் மிஸ் பண்ணிட்டாங்களோ என்னவோ வருவாங்க சிந்தாம்மா..”,என்றவளுக்கு இரு தினங்களுக்கு முன் திவாவிடம் இதுப் பற்றி பேசியது நினைவிற்கு வந்தது.

“திவா ஐ அம் சாரி..”

“என்னாச்சு கண்ணம்மா..எதுக்கு சாரி?”

“இல்ல உங்காகிட்ட ஒரு விஷயத்தை மறைச்சுட்டேன்..அதான்..”

“என்னடா எதுவாயிருந்தாலும் சொல்லு..”

“நா நம்ம கல்யாணத்தை பத்தி அப்பா அம்மாகிட்ட சொல்லல திவா..”

ஏன் கண்ணம்மா..உன் கல்யாணத்தை பத்தி அவங்களுக்கு எத்தனை கனவு இருக்கும்..இப்படி பண்ணலாமா?”

“இல்ல திவா கண்டிப்பா அவங்க வந்தா என் நிம்மதி நம்ம நிம்மதி போய்டும்.ப்ளீஸ் திவா..இந்த ஒரு விஷயம் மட்டும் என்னை கட்டாயப் படுத்தாதீங்களேன்..நீங்க வேற என்ன சொன்னாலும் நா கேக்குறேன்.இது மட்டும் வேணாம் ப்ளீஸ்..”

“சரி கண்ணம்மா உன் இஷ்டம்..எதுக்காகவும் நா உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன் எப்பவுமே..ஆனா கல்யாணம் முடிஞ்சவுடனே கண்டிப்பா அவங்ககிட்ட சொல்லிடணும் சரியா..”

“ம்ம் அதானே எத்தனை பேஷண்டை வழிக்கு கொண்டு வர்றரு என்ன சமாளிக்கத் தெரியாதா நல்லா பேசுறீங்க..சரி சொல்லிட்றேன்.போதுமா..”

“என்ன பண்றது கண்ணம்மா கல்யாணம்னு சொன்னவுடனே பொண்டாட்டியை சமாளிப்பது எப்படினு அதுவா தெரிய வந்துடுது..”என்று இலகுவாய் பேச்சை முடித்துக் கொண்டான்.

அந்த நினைவுகளில் இருந்தவளை திவ்யாந்த்தின் அழைப்பு மீட்டுக் கொண்டுவர என்னவென்பதாய் விழியால் கேட்டவனுக்கு ஒன்றுமில்லையென தலையசைத்தவள் புன்னகையோடு மெஹந்தியை கவனிக்க ஆரம்பித்தாள்.

பங்கஷன் ஒரு வழியாய் முடிந்து அனைவரையும் வழினுப்பிவிட்டு திவ்யாந்த் உள்ளே நுழைய சிந்தாம்மா கையில் உணவோடு வெண்பா அறைக்கு அருகில் நின்றார்.

“நீங்க சாப்டீங்களா சிந்தாம்மா?”

“இல்ல கண்ணு பாப்பாக்கு கொடுத்துட்டு அப்பறம் சாப்ட்டுக்குறேன்.”

தட்டை அவரிடமிருந்து வாங்கியவன்,”நா அவளுக்கு கொடுக்குறேன் முதல்ல நீங்க போய் சாப்டுங்க..”

“உனக்கும் எடுத்துட்டு வந்து தரட்டுமாப்பா..”

“வேண்டாம்மா நா அங்க வந்து சாப்ட்டுக்குறேன்..நீங்க போய் சாப்டுங்க..”,என்றவன் அவளறைக்குச் சென்றான்.

சுவரில் சாய்ந்தவாறு கால் நீட்டி கட்டிலில் அபர்ந்திருந்தவள் அவனைக் கண்டதும் முகம் சிவக்க புன்னகைத்தாள்.

அவளருகில் அமர்ந்தவன் அவளையே பார்த்திருக்க மெதுவாய் தலை குனிந்தவள்,

“என்ன திவா அப்படி பாக்குறீங்க?”

“என் கண்ணம்மா இன்னைக்கு அத்தனை ரம்மியமா இருக்காளே..உன்னை இப்படி பார்க்கும் போது ஒண்ணு சொல்ல தோணுது சொல்வா கண்ணம்மா?”

“ம்ம்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.