(Reading time: 14 - 27 minutes)

நீயென தின்னுயிர் கண்ணம்மா -- எந்த

 நேரமும் நின்றனைப் போற்றுவேன் -- துயர்

 போயின, போயின துன்பங்கள் -- நினைப்

 பொன்னெனக் கொண்ட பொழுதிலே -- என்றன்

 வாயினி லேயமு தூறுதே -- கண்ணம்

 மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே -- உயிர்த்

 தீயினி லேவளர் சோதியே -- என்றன்

 சிந்தனையே என்றன் சித்தமே!”

“என் எல்லாமுமாய் வாழ்வு முழுவதுக்கும் நீ தான் கண்ணம்மா..அதே மாதிரி என்னோட கடைசி மூச்சு வரையுமே என் சிந்தனையும் செயலும் உனக்காக உன்னை முன்னிருத்தியே தான் இருக்கும் டா..இது உனக்கான என் சத்தியம்.”

“திவா..”

“சொல்லுடா..”

“நிஜமாவே வாழ்க்கையையே ஜெயிச்சுட்ட ஒரு உணர்வு இப்போ இந்த நொடி இருக்கு திவா..என் வாழ்க்கையில இதுக்கு மேல இதைவிட ப்ரஷியஸ் மொமெண்ட் இருக்க போறதேயில்ல..லவ் யூ ஆல்வேஸ்..”

லேசாய் அவள் முன் தலையில் முத்தம் பதித்தவன் கொண்டு வந்த உணவை ஊட்ட ஆரம்பித்தான்.அவனையும் சாப்பிடுமாறு அவள் கூற இருவருமாய் உணவை உண்ண ஆரம்பித்தனர் காதல் கதை பேசும் விழிகளோடு..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

மறுநாள் காலை சீக்கிரமே முகூர்த்தம் என்பதால் மண்டபமே களைகட்ட ஆரம்பித்திருந்தது.மருத்துவர்கள் கல்லூரி கால நண்பர்கள் தன் பேஷண்ட்ஸாய் அறிமுகமான சில பல பெரிய புள்ளிகள் என மிதமான கூட்டம் எனினும் பெரிய புள்ளிகளுக்கே உரிய ஆடம்பரமும் வாசனைகளும் மண்டபத்தை நிறைத்தது.

மணமகன் பட்டு வேட்டிச் சட்டையில் மேடைக்கு வந்து அமர சில நிமிடங்களில் அழகிய பேல் பிங்க் வண்ண புடவையில் கடல் நீல நிற பார்டரோடு கூடிய பட்டுப் புடவை சரசரக்க அமைதியாய் வந்தமர்ந்தாள் வெண்பா.

இருவருமாய் சிந்தாம்மாவை தங்களுக்கு நடுவிலேயே நிற்குமாறு கூறி பின்னாடி நிறுத்திக் கொண்டனர்.குறித்த சுப முகூர்த்தத்தில் மந்திரங்கள் முழங்க மஞ்சள் சரடு கட்டி திவ்யாந்த் தன் கண்ணம்மாவை தனதாக்கிக் கொண்டான்.

அனைவரின் ஆசிகள் பரிசுகள் பெற்று வந்தவர்களை கவனித்து அனுப்பிவிட்டு பதினோரு மணியளவில் இருவருமாய் திவ்யாந்தின் வீட்டை அடைந்தனர்.சிந்தாமணி அம்மாவே ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்தார்.

அவர்கள் மூவரை தவிர யாரும் இருக்கவில்லை திருமண ஆட்டபாட்டங்கள் அனைத்தும் முடிந்து இப்போது பார்த்தால் சாதாரண ஒரு நாள் போன்றே தோன்றியது.

ஹால் சோபாவில் இருவருமாய் அமர திவ்யாந்த் தன் அலைப்பேசியை எடுத்து அவளிடம் நீட்டினான்.

கேள்வியாய் பார்த்தவள் விஷயம் புரிந்து விருப்பம் இல்லையெனினும் உதட்டில் ஒட்டிய புன்னகையோடு அவனிடமிருந்து அதைப் பெற்று தன் தந்தையை அழைத்தாள்.

“ஹலோ”

“அப்பா நா வெண்பா பேசுறேன்..”

“ஓ..ரு நிமிஷம் டா அம்மாட்ட கொடுக்குறேன்.முக்கியமான வேலை இருக்கு..”

“ம்ம் சொல்லு எப்போ இங்க வர்ற?இப்போவாவது பணம் வாழ்க்கைகக்கு எவ்வளவு முக்கியம்னு புரிஞ்சுதா?”

“இல்லை அன்பும் காதலும் எவ்ளோ முக்கியம்னு புரிஞ்சுது.எனக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் கல்யாணம் முடிஞ்சுது.அவரு பேரு திவ்யாந்த் டாக்டரா இருக்காரு.”

“ஓ..உங்கப்பா நினைச்சா ஹாஸ்பிட்டல் ஓனரையே கல்யாணம் பண்ணி வைப்பாரு நீ என்னடானா கையேந்தி சம்பளம் வாங்குற ஒருத்தர கல்யாணம் பண்ணிருக்க..வாட் எவர்..இட்ஸ் யுவர் லைப்..டேக் கேர்..பை.”

போனை வைத்தவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.இருந்தும் திவ்யாந்திற்காக தன்னை கட்டுப்படுத்த முயன்றாள்.ஆனால் அவனுக்கா அவள் நிலைமை புரியாது மெதுவாய் தனதறைக்கு அழைத்துச் சென்றவன் தன்மேல் ஆதரவாய் அவளை சாய்த்துக் கொள்ள அடுத்த நொடி அவன் சட்டையை கண்ணீரால் நனைத்திருந்தாள்.

“கண்ணம்மா..சாரி நா தான் உன்னை பேச சொன்னேன்..இப்படி ஆகும்னு நினைக்கல..”

“நா நினைச்சேன் திவா அதனால தான் அம்மா அப்பாக்காக மனசு எவ்ளோ ஏங்கினாலும் அதை மறைச்சு கல்யாணத்தை பத்தி சொல்லாம இருந்தேன்.விடுங்க இனி நா அழமாட்டேன்.இனி வாழ்க்கை மொத்தமும் நீங்க போதும் எனக்கு..”,என்றவளை இன்னுமாய் தன்னோடு சேர்த்து தாயுமானவனாய் மாறிப் போனான் அந்த அன்புக் கணவன்.

தொடரும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:1221}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.