(Reading time: 15 - 29 minutes)

தொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 08 - ஸ்ரீ

Vizhi vazhi uyir kalanthavale

கண்ணோடு கண் சேரும் போது

வார்த்தைகள் எங்கே போகும்

கண்ணே உன் முன்னே வந்தால்

என் நெஞ்சம் குழந்தை ஆகும்

 

விழியில் உன் விழியில்

வந்து விழுந்தேன் அந்த நொடியில்

என் எதிர்காலம் நீ தான் என்று உயிர் சொன்னதே

 

வழியில் உன் வழியில்

வந்து நடந்தேன் அந்த நொடியில்

என் வழித்துணை நீ தான் என்று நிழல் சொன்னதே

உன்னோடு வாழ்ந்திடதானே நான் வாழ்கிறேன்

 

உன் கையில் என்னை தந்து தோள் சாய்கிறேன்

தோள் சாய்கிறேன்

கடிகாரம் இருந்தாலும்

காலடி சத்தத்தில் மணி பார்த்தேன்

 

என் தனிமைக்கு தனிமைகள் நீ வந்து கொடுத்தாய்

அலைப்பேசி அழைப்பில் இருவருமே கண்விழித்தனர்.”சாரி சிந்தாம்மா ரொம்ப நேரம் தூங்கிட்டேனா எழுப்பியிருக்கலாம் தான?”

“பரவால்ல கண்ணு போ நீ போய் ரூம்ல படுத்துக்கோ”,என்றவர் மொபைலைப் பார்க்க திவ்யாந்த் தான் அழைத்திருந்தான்.

“சொல்லுப்பா..”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“சாரிம்மா தூங்கிட்டீங்களா டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல.கேஸ் முடிச்சுட்டியாப்பா?”

“ம் முடிஞ்சுது..வெண்பா இப்போ எப்படியிருக்கா சாப்டாளா?”

“ம்ம் ஒரே அழுகை பாவம்யா அந்த பொண்ணு நீ வேற ஏன் அவளை கஷ்டப்படுத்துற..பொறுத்தது பொறுத்துட்ட இன்னும் கொஞ்ச நாள் அவளே முழு மனசோட நம்ம வீட்டுக்கு வந்துரப் போறா..புரிஞ்சுக்கோப்பா..”

“நா அவளை கஷ்டப்படுத்தணும்னு சொல்லல சிந்தாம்மா..நிஜமாவே வேலை விஷயமா பாரின் போக வேண்டியிருக்கும்.ஆனா போகவா வேண்டாமானு நா இன்னும் முடிவு பண்ணல. அத தான் அவகிட்ட சொன்னேன்..எனக்கும் அவளை இப்படி தவிக்க விட்டு இருக்க முடில சிந்தாம்மா..”குரலடைத்தது அவனுக்கும்.

“கடவுளே என் பிள்ளைங்க ரெண்டுமே இப்படி தவிக்குதே கொஞ்சமாவது கருணை காட்ட கூடாதா..கூடவே இருந்தும் ஒண்ணும் பண்ண முடியாம இருக்கனே..”,என்று அவர் அழ ஆரம்பித்தார்.

சட்டென தன்னை மீட்டெடுத்தவன் அவரை சமாதானப்படுத்தி தூங்க அனுப்பிவிட்டு அழைப்பை கட் செய்தான்.எப்படியான திருமண வாழ்க்கை எத்தனை எத்தனை அழகான நாட்கள் கட்டிலில் விழுந்தவனின் கண்கள் பக்கவாட்டில் இருந்த தன் திருமண புகைப்படத்திற்குச் சென்றது.

திருமணம் முடிந்த அன்று மாலை வேளையில் அக்கம் பக்கத்தினர் வந்து வெண்பாவை பார்த்து பேசிச் செல்ல சிந்தாம்மா இருவருக்குமாய் இரவு உணவை பரிமாறியபடி தானும் உண்ண ஆரம்பித்தார்.

அதன்பின் திவ்யாந்த் அலைப்பேசி அழைப்பை ஏற்று பேசியவாறே உள்ளே செல்ல எத்தனிக்க அவனை நிறுத்தியவர் சற்று நேரம் மொட்டைமாடிக்கு சென்று வருமாறு கூறி அனுப்பி வைத்தார். வெண்பாவை மற்றொரு அறையிலிருந்த குளியலறையில் குளித்து தயாராகச் சொன்னவர் அவள் வருவதற்குள் அவர்கள் அறையை ஓரளவு தயார் செய்து முடித்தார்.

சமையலறைக்குச் சென்று பாலை சூடு செய்தவரை பார்த்தவளுக்கு அவர் தனியே கஷ்டப்படுவது புரிந்தாலும் எதையும் கேட்க தயக்கமாக இருந்தது.கையை பிசைந்தவாறே அவள் அறையில் அமர்ந்திருக்க அவரே வேலைகளை முடித்துவிட்டு வந்தார்.அதற்குள் திவ்யாந்தையும் கீழே  வருமாறு அழைத்தவர் அவனுக்கு வேண்டியதை எடுத்து கொடுத்துவிட்டு வெண்பாவிடம் வந்தார்.

“இங்க பாரு கண்ணு எல்லா கஷ்டத்தையும் மறந்து சந்தோஷமா வாழ்க்கையை ஆரம்பிங்க ரெண்டு பேரும்.இதுக்கு மேல நா முன்னுக்கு நிக்க கூடாது.நீயே கிச்சன்ல இருந்து பாலை எடுத்துட்டு உங்க ரூம்க்கு போடா..நல்லாயிருக்கணும் ரெண்டு பேரும்..”தலையில் கைவைத்து ஆசீர்வதித்தவரை பார்த்தவளுக்கு கண்கள் கலங்கிவிட்டது.

“சிந்தாம்மா எல்லா உறவும் இருந்து அநாதை மாதிரி கல்யாணம் பண்ணிக்கனுமேனு எவ்ளோ கவலைபட்டேன் தெரியுமா ஆனா உங்களால தான் அந்த குறை இல்லாம போச்சு..இப்படி மனசார ஆசீர்வாதம் பண்றதுக்கும் தனி மனசு வேணும்.நீங்களே பால் சொம்பை கொண்டு வந்து என் கைல கொடுத்து வாசல் வர வந்தாதான் நா உள்ளே போவேன்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.