(Reading time: 15 - 29 minutes)

அதன் பின்னும் எத்தனை சோர்வு இருப்பினும் அவளுக்கே அவளுக்கான நிமிடங்களை அவன் மறந்ததேயில்லை.தன்னோடு அமர்ந்து சிறு பிள்ளையாய் கதை பேசுபவளை ஆசை தீர பார்த்திருப்பான்.

“ஏன் திவா இந்த போலீஸ்காரங்க தான் எப்பவும் விரைப்பாவே இருப்பாங்கனு சொல்லுவாங்க..ஆனா சம் டைம்ஸ் டாக்டர்ஸ் கூட அப்டி ஆய்டுவாங்களோ?”

“அது அப்படியில்ல கண்ணம்மா..போலீஸ்காரங்க நாள் மொத்தமும் பாத்து பழக வேண்டியது க்ரிமில்ஸ்கிட்ட சோ அவங்க மேனரிசமே மாறிடுது..அதே மாதிரி நாங்க பாக்குற பேஷண்ட்ஸ் ஒவ்வொருத்தரும் ஒருவிதம்..அவங்க அவங்களுக்கு ஏத்தமாதிரி பேசி பக்குவபடுத்தி ஒரு ஸ்டேஜ்ல பேச்சுல ஒரு நிதானமும் பொறுமையும் அதுவாவே வந்துடும்.

அதிலும் என்ன மாதிரி நேச்சரே அமைதியா இருக்குறவங்க இன்னும் அமைதியாயிடுறோம்..என்ன டா பண்றது..”

“ம்ம் உண்மைதான் திவா..ஆனாலும் என் நல்ல நேரம் என்கிட்டயாவது இவ்ளோ பேசுறீங்களே..கல்யாணத்துக்கு முன்னாடி நா இங்க வந்தப்போவே அந்த கொஞ்ச நேரத்துலயே தோணும்..சிந்தாம்மாவும் நீங்களும் எவ்ளோ பொறுமையா மெதுவா பேசிக்கிறீங்கனு..

நானும் ரொம்ப அடாவடினு எல்லாம் சொல்லிட முடியாது தான் அதே நேரம் உங்க அளவு சாப்ட் நேச்சர் எல்லாம் நினைச்சுகூட பாக்க முடியாது..”

அழகாய் புன்னகைத்தவாறே தன் மேல் சாய்ந்திருப்பவளின் தலைகோதி கொண்டே அந்த நிமிடங்களை தனக்குள் பதித்துக் கொள்வான்.

மறுநாள் காலை திவ்யாந்த் எழுந்தபோதும் வெண்பா உறக்கத்தில் இருக்க அவளை எழுப்பாமல் குளிக்கச் சென்றவன் குளித்து முடித்து சிந்தாம்மாவிடம் சென்று காபி வாங்கி வந்தான்.

வெண்பாவோ கால் சுருக்கி ஒரு ஓரமாய் கட்டிலில் படுத்திருக்க சற்றே பதறியவனாய் அவளருகில் அமர்ந்து,”கண்ணம்மா..என்னாச்சு!!”,என்றவாறு காய்ச்சல் இருக்கிறதா என அவசரமாய் கழுத்து நெற்றியைத் தொட்டுப் பார்த்தான்.

“இல்ல திவா பீவர் எல்லாம் இல்ல..இது வேற..”

அவள் தயக்கத்தை உணர்ந்தவனாய் சட்டென விஷயத்தை புரிந்தவன்,“என்ன கண்ணம்மா..என்கிட்ட எதுக்கு தயக்கம்..எப்பவுமே இந்த டேஸ்ல இப்படிதான் இருக்குமா?”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவன் கேட்ட பிறகே அவன் மருத்துவர் என்பதை மறந்ததே வெண்பாவிற்கு உரைத்தது.சட்டென அவனின் இடையோடு கட்டிக் கொண்டு இன்னுமாய் கால் சுருக்கிப் படுக்க பதறிப் போனான்.

“திவா எப்பவுமே இப்படியெல்லாம் இருக்காது..என்னனே தெரில இப்போ ஒரு இரண்டு மாசமா தான் இவ்ளோ மோசமா இருக்கு..ஒரு மூணு மணி நேரத்துக்கு ஒண்ணுமே பண்ண முடில..”

“ரிலாக்ஸ் கண்ணம்மா..உடம்பு வீக் ஆய்ருக்கும்..நத்திங் டூ வொரி..கொஞ்சம் ஹெல்தி புட்ஸா இனி எடுத்துக்கனும்..சரி இரு நா போய் உனக்கு மோர் எடுத்துட்டு வரேன்.கொஞ்சம் பெட்டரா இருக்கும்..”,

என்றவன் சென்று மோரில் உப்பு காயம் போட்டு சிறிது வெந்தயத்தை கையில் எடுக்க சிந்தாம்மாவும் அவனோடு வந்து அவளை சாப்பிட வைத்து படுத்துக் கொள்ள உதவினார்.

அன்று அவளை விடுமுறை எடுத்துக் கொள்ள சொன்னவன் முக்கியமான கேஸ் இருப்பதால் முடிந்தளவு சீக்கிரம் சென்று வருவதாய் கூறிக் கிளம்பினான்.

அத்தனை நாட்கள் காதலனாய் கணவனாய் இருந்தவன் அந்த மூன்று நாட்களில் அவளுக்கு அன்னையுமாய் மாறிப் போனான்.

முடிந்தளவு வேலைகளைக் குறைத்து மனதை இலகுவாய் வைத்துக் கொள்ள உதவினான்.சிந்தாம்மாவும் அவளை தன் மகள் போலவே பார்த்துக் கொண்டார்.

அன்று வெண்பாவே பொறுக்கமாட்டாமல் அவனிடம்,”ஏன் திவா ஆனாலும் இப்படி லேடீஸ்க்கான சாதாரண ஒரு விஷயம் இதுக்கே என்னவோ ப்ரெக்ணெண்ட் லேடியை பாத்துக்குற மாதிரி பாத்துக்குறீங்க..பட் எப்பவும் விட இந்த டைம் நா ரொம்பவே ரிலாக்ஸ்டா பீல் பண்ணேன் தான் இருந்தாலும் இதை கேக்காம இருக்க முடில..”

“கண்ணம்மா..சாதாரண வழக்கமான விஷயமா இருக்கலாம் ஆனா அப்போ உங்களோட உடலும் மனமும் வழக்கத்தை விட ரிலாக்ஸ்டா இருக்குறது முக்கியம் டா..மேபி ஒரு டாக்டரா எனக்கு இது ரொம்பவே புரியுதோ என்னவோ..

பட் இதே இது நாம இப்போ ஒரு ஜாய்ண்ட் பேமிலில இருக்கோம்னு வை..இந்தளவு என்னால உன்னை கவனிச்சுக்க முடியாம போய்ருக்கலாம்.ஆனா சிந்தாம்மாவுக்கே நா இந்த நேரத்துல என்னால முடிஞ்ச உதவிகளை கண்டிப்பா பண்ணுவேன்.

அவங்க முக சோர்வே காட்டிக் கொடுத்துரும் பல நேரத்துல அதுக்கு மேல அவங்களை அநாவசியமா தொல்லை பண்ணமாட்டேன்.அதனால தான் நா இப்போ உன்னை கவனிச்சுக்குறதும் அவங்களுக்கு தப்பாவோ வித்யாசமாவோ தெரில..

இந்த ஆறுதலும் அரவணைப்பும் நிச்சயம் மனசு எதிர்பார்க்குற ஒரு விஷயம்தானடா..நிறைய கணவர்களுக்கு அது புரியாது.எனக்கு அது புரியும் போது அதை ஏன் வெளிக்கட்டாம இருக்கணும்..

என் கண்ணம்மாக்கு எல்லாமுமா நா இருக்கேன்னு சொன்னா மட்டும் போதாது செயல் படுத்தியும் காட்டணும்..சரி தான?”

இமைக்கவும் மறந்து திவ்யாந்தை பார்த்திருந்தவள் அவன் கேள்வியில் சம்மதமாய் தலையசைத்து அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.

தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:1221}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.