(Reading time: 15 - 29 minutes)

“குட்மார்னிங் கண்ணம்மா ஹவ் அ குட் டே..”

குட்மார்னிங் திவா..நீங்களும் ஏன் இவ்ளோ சீக்கிரம் எழுந்துட்டீங்க லீவ்ல ரெஸ்ட் எடுத்தாதான் உண்டு..”

“அதெல்லாம் பரவால்ல என் கண்ணம்மாவோட ஒவ்வொரு செகண்டும் நா என் நேரத்தை செலவழிக்கணும்.அதுவே எனக்கு யானை பலம் கொடுக்கும்..ரொம்ப சில்லியா இருக்கு இல்ல..பட் நிஜமா இனி உன்னை டார்ச்சர் பண்ணுவேன்..உண்மையை சொல்லணும்னா நேத்துல இருந்து நா ஒரு ஸ்கூல் கோயிங் பையன் மாதிரி அவ்ளோ என்த்துவா பீல் பண்றேன் கண்ணம்மா..

அதனால ரெஸ்ட் எல்லாம் எனக்கு தேவையில்ல..உன்கூட உன் பக்கத்துலயே இருக்கனும்..”

வெட்கமும் பூரிப்புமாய் அவனை விட்டு நகர்ந்தவள் குளித்து தயாராகி வெளியே வர சிந்தாம்மா கிட்சனில் வேலை செய்து கொண்டிருந்தார்.

“குட்மார்னிங் சிந்தாம்மா சீக்கிரமே எழுந்துடுவீங்களா?நாளையில் இருந்து நானும் சீக்கிரம் எழுந்துக்குறேன்..”

“அட என்ன கண்ணு அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.இந்தா காபி சாப்ட்டு தம்பிக்கும் எடுத்துட்டு போ..”

இருவருக்குமாய் காபியை எடுத்துக் கொண்டு அறைக்குச் சென்றவள்,”திவா இந்தாங்க காபி..”

“தேங்க் யூ கண்ணம்மா..சிந்தாம்மா கிளம்பிட்டாங்களா?”

“எங்க?என்கிட்ட ஒண்ணுமே சொல்லலியே?”

“ம்ம் அவங்க ஒரு வாரம் ஏதோ யாத்திரை போறதா சொன்னாங்க..இங்க அப்பார்ட்மெண்ட்ல இருக்குறவங்க எல்லாம் சேர்ந்து ஆர்கனைஸ் பண்ணி போறாங்க போல..”

“ஓ..அப்போ நா போய் எதாவது ஹெல்ப் பண்ணணுமானு கேட்குறேன் திவா..நீங்க ரெடி ஆய்ட்டு வாங்க..”

“சிந்தாம்மா என்கிட்ட சொல்லவேயில்ல நீங்க ஊருக்கு போறத..எதாவது பேக் பண்ணணுமா?”

“அதெல்லாம் நானே பண்ணிட்டேன் கண்ணு..தம்பி உன்கிட்ட சொல்லிருக்கும்னு நினைச்சேன்..வழக்கம் போல மறந்துட்டான் போல..”

“ம்ம் டாக்டர்க்கு கொஞ்சமும் பொறுப்பேயில்ல..நீங்க ஸ்ட்ரிக்டா இல்லாம போய்ட்டீங்க சிந்தாம்மா..அதான் இப்படி..”,என்று கூறி சிரிக்க சிந்தாம்மா அவளுக்கு பின்னால் வந்த திவ்யாந்தை பார்த்து மென்னகைத்தப் படியே அங்கிருந்து நகர்ந்தார்.

“ம்ம் எனக்கு எவ்ளோ பொறுப்பு இருக்குனு இப்போ சிந்தாம்மா கிளம்பினவுடனே காட்றேன் என் கண்ணம்மாவுக்கு..”,என மெல்லியதாய் அவள் காதில் உரைக்க அவனது மூச்சுக் காற்றிலும் மீசையின் குறுகுறுப்பிலும் சட்டென குழைந்தவள் தடுமாறி அவன் மீதே சாய இடைப்பற்றி அவளை நிறுத்தியவன் அவள் எதிர்பாரா நொடி இடுப்பில் குறுகுறுப்பு மூட்டி அங்கிருந்து மறைந்து விட்டான்.

சில நிமிடங்களில் சிந்தாம்மா கிளம்பத் தயாராக இருவருமாய் வாசல் வரை சென்று மற்றவர்களோடு வழியனுப்பி வைத்துவிட்டு வந்தனர்.

அவர்களுக்கு தேவையான காலை உணவை அவரே தயார்செய்து வைத்துச் சென்றிருக்க இருவருமாய் சேர்ந்து அமர்ந்து உண்டு முடித்தனர்.அதன்பின் வெண்பா மதிய உணவிற்கு சமைக்க ஆரம்பிக்க அவளுக்கு உதவி செய்தவாறே ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ ஆரம்பித்திருந்தான்.

சமையலை முடித்து பாத்திரங்களை அவள் தேய்த்து கொடுக்க அனைத்தையும் கழுவி சுத்தம் செய்து அடுக்கி வைத்தான்.

“திவா ஆனாலும் நீங்க என்னை இப்படி பேம்பெர் பண்ண கூடாது..உங்களை கவுக்குறது எனக்கு ரொம்ப சுலபம் போலயே..”

“ம்ம் என்ன பண்றது கண்ணம்மா எனக்கு இப்படி இருக்குறதுக்கு தான் பிடிச்சுருக்கு..”

அடுத்து வந்த ஒரு வார காலமும் அவர்கள் வாழ்வின் மறக்க முடியா நாட்களாய் மாறிப் போனது.வீட்டை விட்டு எங்கும் நகரவில்லை.நான்கு சுவர்களுக்குள்ளேயே உலகின் அத்தனை அழகையும் காதலையும் தேடித்தேடி கண்டுபிடித்து களைத்தனர்.

திவாவோ தன் கண்ணம்மாவிடம் மொத்தமாய் சரணடைந்திருந்தான்.தன் மொத்த காதலையும் அவளுக்கு திகட்ட திகட்ட பகிர்ந்து கொண்டே இருந்தான்.வெண்பாவிற்கோ தான் ஏதோ நாட்டு ராணி என்றே உணர்வே இருந்தது.திவா அவளை ஒவ்வொரு சிறு சிறு விஷயங்களிலும் அத்தனை அக்கறையாய் அத்தனை பாசமாய் தன் வாழ்வின் தேவதையாகவே பாவித்தான்.

பயணம் முடிந்து சிந்தாம்மா வருவதற்கும் இவர்கள் இருவரும் வேலையில் சேர்வதற்கும் சரியாய் இருந்தது.

காலை முதல் மாலை வரையிலான தன் பிரிவை அதன் பிறகான நேரங்களில் அப்படியே ஈடு கட்டிவிடுவான் தன் கண்ணாம்மாவிடம்.அன்றைய நாளின் விஷயங்களை அவள் காலை மென்மையாய் அழுத்தியபடியே கதையாய் கேட்டு கூறி முடிப்பான்.

அதே நேரம் சிந்தாம்மாவுடனான பொழுதுகளையும் தவிர்க்காமல் மூவருமாய் பேசி சிரித்தவாறு இரவு உணவை சமைத்து முடித்து சாப்பிட்டு சமையலறையை சுத்தம் செய்யும் வரை உதவி பின் தங்களறைக்கு வருவர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.