(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - என்னவளே - 15 - கோமதி சிதம்பரம்

ennavale

ருவதம் அம்மாள் மனதிற்குள் தனது குல தெய்வத்தை வேண்டிகொண்டயே ஹாஸ்பிடல் வந்தடைந்தார்.

எப்படியாவது ரிஷியையும் கீதாவையும் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டும்.....

அதற்கு, அவர்களை கெஞ்சி கொண்டு இருந்தால் வேளைக்கு ஆகாது.

எனது கோபம் மற்றும் என் அழுகையை காட்டி  தான் அவர்களை சம்மதிக்க வைக்க வேண்டும்.

முதலளில், ரிஷியிடம் தான் பேச வேண்டும் என்று நினைத்து கொண்டேயே கீதாவின் அறைக்குள் நுழைந்தார்.

ஆனால், ரிஷியை அங்கே  இல்லை ..... ஒரு நர்ஸ் மட்டும் ஓரமாக உட்கார்ந்து இருந்தாள்....

மருந்தின் வீரியத்தில் கீதா நன்றாக அசந்து தூங்கிகொண்டுருந்தாள்.

பருவதம் அம்மாளை பார்த்ததும் அந்த நர்ஸ் அருகில் வந்தாள்.

என்னமா.... இப்படியா patientya தனியா விட்டுட்டு போவீங்க??? டாக்டர், ரவுண்ட்ஸ் வர நேரம் பார்த்த எங்களைத்தான் திட்டுவாங்க என்று கோபத்துடன் கூறினாள்...

கீதாவை, தனியா விட்டுட்டு.... இந்த ரிஷி எங்க போய் தொலைஞ்சான்.... இந்த நர்ஸ் வேற என்ன திட்டுது....

நான் பதில் சொல்லாம இந்த நர்ஸ் நவுறாது போல.... என்று நினைத்தவர்.

நான் என் பையனை துணைக்கு இருக்க சொல்லிட்டு தான் போனேன்மா ... ஆன, இப்ப எங்க போனான்னு தெரில... என்று கையை பிசைந்து கொண்டு நின்றார்.

அம்மா, உங்க பையன் நைட் இங்க தான் இருந்தார்.  மூணு மணி இருக்கும்,  என்கிட்ட வந்து இவங்கள கொஞ்சம் பார்த்துக்கோங்க... இதோ வந்துடுறேன்னு சொல்லிட்டு போனார்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இப்ப மணி என்ன ஆறு ஆகுது. இன்னும் வரலை... நான் இந்த ரூம்க்கு மட்டும் நர்ஸ் இல்லை...

இந்த ஹாஸ்பிடல் லா  நிறைய patient இருக்காங்க ... இவங்கள மட்டும் பார்த்துட்டு இருக்க முடியுமா.....

இவங்க, வேற கையா கிழிச்சுட்டு அட்மிட் ஆகியிருக்காங்க.... இவங்களா, மறுபடியும் தனியா விட்டு எதாவது பண்ணிக்கிட்டா....

யாரு chief டாக்டர்க்கு பதில் சொல்லறது.... சொல்லுங்க என்று சற்று கோபத்துடன் கத்தினாள் .

பருவதம் அம்மாளுக்கும் ரிஷி மீது கோபம் தான். இருவரும், தனியாக இருந்தால் எதாவது பேசி முடிவெடுப்பார்கள் என்று நினைத்தால்....

இங்கே,கீதாவை தனியாக விட்டுவிட்டு அவன் எங்கு போனான்....

பற்றாததுக்கு இந்த நர்ஸ்யிடம் வேற திட்டு வாங்க வேண்டியிருக்கிறது....  இவளிடம் இபோது மன்னிப்பு கேட்பதை தவிர வேற வழி இல்லை என்று நினைத்தார் ..

ஆனால் பருவதம் அம்மாள்  மன்னிப்பு கேட்கும் முன் கீதா விழித்து விட்டாள்.  அங்கு நடந்து கொண்டு இருந்த உரையாடலையும் அவள் கேட்டு இருந்தாள்.

இரவு ரிஷிக்கும் எனக்கும் இடையில் நடந்த எதுவும் பருவதம் அம்மாவிற்கு தெரியாது... ரிஷி, தன் மீது தான் கோபம் கொண்டுதான் இன்னும் வரவில்லை என்று கீதா நினைத்து கொண்டாள்.

சாரி சிஸ்டர்... அவர்க்கு கொஞ்சம் அவசர வேலை இருந்துச்சு.  அதான், அவரை நான் போக சொன்னேன்....

நீங்க, உள்ள வந்தது எனக்கு தெரியாது... இல்ல... உங்கள கூட உங்க வேலையை பார்க்க சொல்லியிருப்பேன்...

என்ன இவ்ளோ நேரம் பார்த்துக்கிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர்... என்று கனிவுடன் கூறினாள்.

கீதாவின், கனிவான பார்வை  மற்றும் தெளிவான பேச்சு அந்த நர்ஸ்க்கும்  பிடித்து இருந்தது.

பருவதம் அம்மாளிடம் பத்திரமா கூட இருந்து பார்த்துகோங்கமா என்று கூறிவிட்டு  சென்று விட்டாள்.

இப்பொழுது, ரிஷி எங்கு போனான் என்று பருவதம் அம்மாள் கேட்டாள் என்ன சொல்வது??? என்று புரியாமல் கீதா யோசித்து கொண்டு இருந்தாள்.

கீதா, சீக்கிரம் எழுந்து வந்து சாப்பிடுமா... சூடு ஆறிட போகுது... சாப்பிட்டுட்டு மாத்திரை வேற போடணும். நீ....

பருவதம் அம்மாள் ரிஷி பற்றி கேட்காதது கீதாவிற்கு நிம்மதியாக இருந்தது.

ஆனால், கீதாவிற்கு சுத்தமாக பசிக்கவில்லை... 

மனதில் இருக்கும் கஷ்டத்தில் இப்பொழுது சாப்பாடு ஒன்று தான் கொறைச்சல் என்று நினைத்து கொண்டாள்.

அம்மா... எனக்கு இப்ப பசிக்கல... நான் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுறேன்...

திரும்பி கீதாவை பார்த்தார் பருவதம் அம்மாள்... எதும், சொல்லாமல் சாப்பாட்டை அங்கையே வைத்துவிட்டு வெளியில் கோபத்துடன் செல்ல முற்பட்டார்.

அவரது கோபத்தை புரிந்து கொண்ட கீதா, வேகமாக தான் போர்த்தி இருந்த போர்வையை விலக்கி கட்டிலில் இருந்து இறங்கி ஓடி போய் பருவதம் அம்மாள் கையை பிடித்து கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.