(Reading time: 10 - 19 minutes)

அம்மா... இன்னும் என் மேல் இருக்கும்  கோபம் உங்களுக்கு போகலையா????

 நான், செஞ்சது தப்புதான்மா.... இனி இந்த மாதிரி முட்டாள் தனமான காரியத்தை செய்யமாட்டேன்.... ப்ளஸ் மா... என்னை மன்னிச்சுடுங்க என்று கெஞ்சினாள்.

அவள் பிடித்து இருந்த கையை விலக்கியவார்.... உன்னை நான் மன்னிக்கிறேன்...

அதுக்கு முன்னாடி நான் சொல்றதா நீ கேட்கணும் கீதா... கேட்பியா.... என்று பொறுமையாகவும் நிதானமாகவும் பருவதம் அம்மாள் கேட்டார்.

கீதா, சரி என்பது போல தலை ஆட்டினாள்.

முதலா, போய் சாப்பிடுமா... நீ நைட் சாப்பிட்டது... உன் உடம்புல இருந்து வேற நெறைய இரத்தம் போய்டுச்சுன்னு டாக்டர் சொன்னாரு.... 

மருந்து சாப்பிடுறதுக்கு உன் உடம்புளையும் தெம்பு வேணும் அதான் சொல்றேன்... போய் first சாப்பிடு....

ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சுக்கோ... நான் உன் நல்லதுக்குதான் எப்பவும் சொல்வேன்.

போ... போய் ரெபிரெஸ் ஆகிட்டு வா... என்று கீதாவை விரட்டினார்.

கீதாவும் பருவதம் அம்மாவை மேலும் கஷ்டப்படுத்த கூடாது என்று நினைத்து அவர் சொல்வதை கேட்டாள்.

போதும் போதும் என்று கூறியும் பருவதம் அம்மாள் பிடிவாதமாக அவளை மூன்று இட்லி சாப்பிட வைத்தார்.

அவளுக்கு தேவையான மாத்திரையும் எடுத்து கொடுத்தார்.ஒரு குழந்தையை போல கீதாவை பார்த்து கொண்டார்.

பருவதம் அம்மாள் காட்டும் அன்பில் கீதாவிற்கு அவளது தாயின் நினைவு தான் வந்தது.

ஆனால், ஒரு போதும் இது போன்ற பாசத்தை கீதாவின் தாய் அவளுக்கு காட்டியது இல்லை.

தனக்கு நல்லது என்று ஏதும் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை... 

அவளுக்கு பெண்ணாக பிறந்ததால் இதோ இன்று யாரும் இல்லாத அனாதையாக இருக்கிறேன்.

என் மீது உயிரேயே வைத்து இருந்த  ரிஷியிடம் இருந்து கூட தன்னை பிரித்தது தனது தாய்தான் என்று நினைத்தாள்.

கீதாவிற்கு அவள் தாயின் மீது இருந்த  வெறுப்பு மேலும்  அதிகம் ஆனது.

கல்யாண பேச்சை எப்படி கீதாவிடம் ஆரம்பிப்பது என்ற யோசனையில் பருவதம் அம்மாள் இருந்தார்.

எல்லாம் நல்லபடியா நடக்கணும் கடவுளேயே... என்று மனதிற்குள் வேண்டியவர். கீதாவின் கட்டிலில் ஒரு ஓரமாக அவளை பார்த்து சிரித்தபடியே உட்கார்ந்தார்.

கீதாவும்  நடந்த எல்லாவற்றையும் கூறுவதற்கு இதுதான் சரியான நேரம் என்று நினைத்தாள்.

இதற்கு மேல் இருந்து,    ரிஷிக்கும் பருவதம் அம்மாளுக்கும் தொல்லை தரக்கூடாது என்று முடிவு எடுத்தாள்.

அம்மா.... ராஜகுட்டி நல்ல தூங்கிட்டு இருக்கானா??? நீங்க அவனை பார்த்திங்களா???? என்று கேட்டாள்.

ஆமா, கீதா அவன் நல்ல தூங்கிட்டு இருக்கான். நைட் எழுந்து பால் குடிச்சுட்டு தூங்கிட்டான்  ... இப்ப எழுந்து இருப்பான்னு நினைக்றேன்...

கவலைப்படாத அவனுக்கு சாப்பாடு டிரஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டு தான் வந்து இருக்கேன்.  நீ வீட்டுக்கு போகும் போது உனக்காக காத்துகிட்டு இருப்பான்.

இனி, நான் எங்க வீட்டுக்கு வரப்போகிறேன் என்று நினைத்தவள்... அம்மா, உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லனுனு கீதா ஆரம்பிக்கும் முன்...

பருவதம் அம்மாள் முந்திகொண்டார்... கீதா,  உனக்கும் ரிஷிக்கும் கல்யாணம் செய்து வைக்கலன்னு நானும் அண்ணாவும் முடிவு செஞ்சு இருக்கோம் என்று கூறியவாறு கீதாவை பார்த்தார்.

கீதாவிற்கு, ஒரு நிமிடம் ஒன்றுமேயே புரியவில்லை.... தனக்கும் ரிஷிக்கும் கல்யாணமா??? அதும், இந்த முடிவு எடுத்தவர் ரிஷியின் அப்பாவா???

நான் விரும்பிய வாழ்கை எனக்கு கிடைக்க போகிறது. ஆனால், ரிஷி மனதில் இப்பொழுது என்ன இருக்கிறது என்று அவளுக்கு தெரியவில்லை.

நைட், அவள் கையை அவன் பிரித்து எடுத்ததை நினைத்து பார்த்தாள். ஆனால், அதற்கு முன் ரிஷி அவளிடம் காதலுடன் நடந்து கொண்டதையும் யோசித்து பார்த்தாள்.

இதில், எது உண்மை ??? ரிஷியின் காதல் உண்மையானது. ஆனால், என் அம்மாவை பற்றிய உண்மை தெரிந்தலால் ரிஷியால் என்னை ஏற்றுக்கொள்ள முடியவில்லை போல....

இந்த உண்மை, ரிஷியின் அப்பா மற்றும் பருவதம் அம்மாளுக்கு தெரிந்தாலும் இதையேதான் செய்வார்கள்.

இல்லை... இந்த திருமணம் நடக்க கூடாது...  ரிஷியோட வாழ தனக்கு தகுதி இல்லை என்று முடிவு செய்தாள்.

கீதாவின், முகத்தில் தோன்றிய ஒவ்வொரு விதமான உணர்ச்சிகளை புரிந்து கொள்ள இயலாது பருவதம் அம்மாள் உட்கார்ந்தாள்.

அதேயே நேரத்தில், கீதாவை அதிகமாக யோசிக்க விடுவதும் அவர்க்கு நல்லது என்று படவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.