(Reading time: 10 - 19 minutes)

கீதா, இந்த கல்யாணத்திற்கு அண்ணா சம்மதிப்பாங்கனு நான் நினைச்சு கூட பார்க்கலை  ....

ரிஷி, உன்ன தப்பான பொண்ணுன்னு சொன்னது தப்புத்தன்மா... அதுக்கு நான், உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்.....

அம்மா, உங்களுக்கு நானும் ரிஷியும்  பேசுனது எப்படி தெரியும் ??? தன் தாயை பற்றிய உண்மையை ரிஷி பருவதம் அம்மாளிடம் கூறிவிட்டானோ என்ற பயத்தில் கேட்டாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ரிஷி, உன்ன ஹாஸ்பிடல்லா சேர்த்துக்கு அப்புறம், எனக்கு தகவல் கொடுத்தான். நான் இங்க வரும்போது ரிஷி பைத்தியம் பிடிச்ச மாதிரி உட்கார்ந்து இருந்தன்மா...

அது மட்டும் இல்லடா... உன்மேல அவன் உயிரேயே வச்சுருக்கான்... நீ கஷ்டப்பட்ட அவனால தாங்கிக்க முடியாது.

உன்ன கஷ்டப்படுத்துனாதா நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டான். 

இதுக்கு அப்புறம், அவனால உனக்கு கஷ்டம் வரக்கூடாதுன்னு நினைச்சு ரிஷி உன்ன விட்டு விலகிட கூட நினைச்சான்.

கீதா, ரிஷி என்கிட்ட சொல்லிட்டு இருந்த எல்லாத்தையும் அண்ணா கேட்டுட்டாருமா.... ரிஷி உன்ன தப்பா பேசுனது அவர்க்கும் சுத்தமா பிடிக்கல...  அவன் மேல ரொம்ப கோபமா கூட இருக்காரு.

ஆனா, கெட்டதிலும் ஒரு நல்லது மாதிரி உன்னோட குணம் அண்ணாக்கு இப்பதான் தெரிஞ்சுருக்கு. .

நீ ஒரு நல்ல பண்பு உள்ள குடும்பத்து பொண்ணுன்னு அவர் புரிஞ்சுடுச்சு

தயவு செஞ்சு இனி மேலாவது சின்ன குழந்தைங்க மாதிரி பண்ணாம இந்த கல்யாணத்திற்கு ரெண்டு பெரும் சம்மதம் சொல்லுங்க...

நம்ம குடும்பத்தோட சந்தோஷமும் இதுல தான் அடங்கி இருக்கு. என்று கூறியவர் கீதாவின் கைகளை பிடித்து கொண்டார்.

பருவதம் அம்மாள் கூறுவதை எல்லாம் கேட்டு... கீதாவின் கண்களில் கண்ணீர் பெருகியது.

ரிஷி, என்னை வெறுக்கவில்லை... என்னை மேலும் கஷ்டப்படுத்த கூடாது என்று எண்ணி என்னை விட்டு விலகி செல்ல நினைக்கிறான்.

ஏனோ, ரிஷியை இப்பொழுதையே பார்க்க வேண்டும் போல கீதாவிற்கு தோன்றியது.

தனக்கும் ரிஷிக்கும் திருமணம் என்று பருவதம் அம்மாள் கூறியதை கேட்டு அவள் மனம் ஒரு நொடி துள்ளி குதித்தது.

ஆனால்,  ரிஷியின் அப்பா தன்னை ஒரு நல்ல குடும்பத்து பெண் என்று நினைத்து தான் இந்த கல்யாணத்திற்கு சம்மதித்து இருக்கிறார்.

என்னை பற்றி தெரிந்தால் இந்த கல்யாணம்  நடக்குமா????? பருவதம் அம்மாள் தனது பதிலுக்காக காத்திருப்பதை உணர்ந்தாள்.

ரிஷி, தன்னை தவறாக நினைக்கவில்லை என்பதேயே அவளுக்கு தைரியத்தை கொடுத்தது.

தனது கண்களை அழுத்தி துடைத்து கொண்டவள்.

அம்மா, என் குடும்பத்தை பற்றி உங்ககிட்ட கொஞ்ச பேசணும்... என்று இழுத்து கூறினாள்.

சொல்லுமா.... நானேயே கேட்கணுன்னு இருந்தேன்... நீ உன் அம்மா அப்பாவை நினைச்சு ஏதும் பயப்படாத... நான் அவங்ககிட்ட பேசுறேன். என்று சிரித்த முகத்துடன் பருவதம் அம்மாள் கேட்டார்.

அம்மா உங்ககிட்ட இவ்ளோ நாள் என்ன பற்றி   சொல்லாம இருந்தது தப்பு தான் .... அது  வந்து... என்று எச்சிலை விழுங்கி கொண்டாள்.... 

கீதா, எவ்வளவு கட்டுப்படுத்தியும் அவளால் கண்ணீரை அடக்க முடியவில்லை....

என்னோட அம்மா.... நீங்க நினைக்குற மாதிரி இல்ல... அவங்க ஒரு ...

கீதாவின் தாயை பற்றி பருவதம் அம்மாள் அறிவாரா??  அறிந்த பின் கீதாவை ஏற்றுக்கொள்வாரா ???ரிஷி கீதாவின் திருமணம் நடக்குமா???

தொடரும்

Episode # 14

Episode # 16

Go to Ennavale story main page

{kunena_discuss:1184}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.