(Reading time: 13 - 26 minutes)

தொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம்

ennavale

கார் மிதமான வேகத்தில் சென்று கொண்டு இருந்தது.

சதாசிவம் அமைதியாக கார் ஒட்டி கொண்டு இருந்தார்... பருவதம் அம்மாள் தான் பேச ஆரம்பித்தார்....

அண்ணா.... வீட்டிற்கு போனதும் சிவகாமி எங்க போய்ட்டு வரிங்கனு கேட்ட என்ன சொல்றது??? என்று தயங்கியபடியே கேட்டார்.

தனது தங்கையை திரும்பி பார்த்தவர்.... சேகர்யின் நினைவால் கீதா  தனது கையை கிழித்துக்கொண்டாள் என்று கூறு.....

இனிமேல், அவளை தனியாக விடமால் பார்த்துக்கொள்ள சொல்லு.... என்று கூறிவிட்டு மீண்டும் கார் ஓட்டுவதில் கவனத்தை செலுத்தினார்.

சிவகாமியிடம் என்ன கூறுவது என்று புரியாமல் பருவதம் அம்மாள் இவ்வளவு நேரம் யோசித்து கொண்டு இருந்தார்.

ஆனால், தனது அண்ணன் ஒரேயே நொடியில் இந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்லிவிட்டாரேயெ என்று ஆச்சரியப்பட்டார்.

ஆனால், இது சரியா வருமா என்ற சந்தேகமும் அவரிடம் ஏற்பட்டது.

அண்ணா!!! சிவகாமி இதை நம்புவாளா??? நாம யாரும் அவகிட்ட சொல்லாமலேயே ஹாஸ்பிடல் எல்லாம் போய்ட்டு வந்துட்டோம்.... அவளுக்கு சந்தேகம் வராதா ????

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இல்ல வேற ஏதாவது காரணம் சொல்லுவோமா??  என்று கேட்டவரை முறைத்து பார்த்தவர்.

இப்ப என்ன செய்ய சொல்ற பருவதம் .... என் பையன்தான் இதுக்கு எல்லாம் காரணமான்னு சொல்லவா???? சொல்லு???

அப்படி சொன்னா.... அத்தோட சிவகாமி விட்டுடுவாளா???? இன்னும் ரிஷியையும் கீதாவையும் அசிங்க படுத்துவா....

இந்த பசங்களும் என்னமோ இப்பதான் ஸ்கூல் படிக்குற பசங்க மாதிரி சண்டை போட்டு கையா கிழிச்சுக்குறாங்க....

கொஞ்சம் கூட பொறுப்பையே இல்ல.... என்று கோபப்பட்டவார்.... தங்கையின் பயந்த முகத்தை பார்த்து அமைதி ஆனார்.

இப்போதைக்கு, சிவகாமியிடம் இதையே சொல்லுவோம்.... நம்புவதும் நம்பாததும் அவள் விருப்பம்....

நடந்து முடிந்ததை பற்றி இனி பேசவேண்டாம்...  நடக்க போறதை பற்றி பேசுவோம்.... என்று கூறியவரை ஆவலுடன் பார்த்தார் பருவதம் அம்மாள்.

முதலில், ரிஷியை என்கிட்ட வந்து பேச சொல்லு.... என்று கோபத்துடன் கூறினார்....

நடக்க போறது என்று கூறியதும் ரிஷியின் கல்யாண பேச்சு எடுப்பார் என்று நினைத்தவர்க்கு அவரது அண்ணனின் கோப முகம் பயத்தை ஏற்படுத்தியது....

எல்லாம் இந்த ரிஷி கீதாவால் வந்தது.... தேவையில்லாமல், சண்டை போட்டு கையை கிழிச்சுகிட்டு ...  இப்ப அண்ணாவையும் கோபப்படவச்சுட்டாங்க.

கோபத்துல அண்ணா அவங்களுக்கு கல்யாணம் பண்ணி  வைக்கமாட்டேன்னு சொல்லிட்டா என்ன பண்றது....

முதலில், அண்ணனின் கோபத்தை குறைக்க வேண்டும் என்று நினைத்தவர்... ரிஷிக்காக பரிந்து பேசினார்.

அண்ணா, ரிஷி செஞ்சது தப்புதான்.... ஆனா அவனுக்கு வேற வழி இல்லை.... கீதாவை உண்மையா சொல்லவைக்க தான் எதோ சொல்ல போக அது கீதாவை இப்படி ஒரு முடிவு எடுக்க வச்சுடுச்சு....

சதாசிவம், ஓட்டி கொண்டு இருந்த கார் யை பெட்ரோல் பங்கயிடம் நிறுத்தினார்....  பின்னர், திரும்பி தனது தங்கையை பார்த்தவர்...

எதோ சொல்ல போக இல்லை பருவதம்.... ரிஷி, கீதாவை தப்பான பொண்ணுன்னு சொல்லிருக்கான்... அதை கேட்டு தான் கீதா இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்க....

ஒழுக்கமா இருக்குற பொண்ணு யார்யா இருந்தாலும் இதை தான் செய்வாங்க.... அதும் தன்னை காதலிக்குறவன் கேட்ட சும்மா இருப்பாங்களா....

பருவதம், இந்த விஷயத்தில் முழு தப்பும் ரிஷியோடதுதான்.... கீதா மேல எந்த தப்பும் இல்ல... என்று உறுதியுடன் கூறினார்.

பருவதம் அம்மாவிற்கு ஒரு புறம் சந்தோசமாகவும் மறுபுறம் கஷ்டமாகவும் இருந்தது.....

கீதாவை பற்றிய தப்பான எண்ணம் தனது அண்ணாவிற்கு மாறிவிட்டது...

ஆனால், ரிஷியின் மீதோ அவரது கோபம் அதிகம் ஆகிவிட்டது.... 

நானும் ரிஷியும் மருத்துவமனையில் பேசிய அனைத்தையும் அண்ணன் கேட்டு இருக்கிறார்....

இப்போது, ரிஷிக்காக அண்னனிடம் பேசுவது சரியில்லை... அது மேலும் ரிஷியின் மீது கோபத்தை தான் அதிகப்படுத்தும்.

இப்பொழுது, இந்த பேச்சை எடுக்க வேண்டாம் என்று நினைத்தவர்....

அண்ணா, நீங்க எப்படி ஹாஸ்பிடல்க்கு வந்திங்க???? உங்களுக்கு எப்படி கீதா அடிப்பட்டு இருக்கிறது தெரியும்...

பருவதம் கேட்கும் இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது.... உனது அண்ணி தான் என்னை அனுப்பி வைத்தாள் என்று சொன்னால் அவள் அதை நம்புவாளா???

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.