(Reading time: 13 - 26 minutes)

இதில், இன்னும் தூங்காமல் இருந்தால் என்ன செய்வது????? வேகமாக, அவளை நெருங்கியவன்.... அவளுக்கு போர்வையை கழுத்து வரை போத்தி விட்டான்....

கீதாவிற்கு, அவனது செய்கையிலேயே ரிஷி தன்னை தூங்க சொல்கிறான் என்பது  புரிந்தது..... கீதாவும் அவனை பார்த்தவரேயே படுத்துகொண்டாள்.

கீதாவிற்கு  போத்தி விட்டவன் அவளது பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அறையில் இருந்து வெளியில் செல்ல ஒரு அடி எடுத்து வைத்தான்.

ஆனால், ரிஷியின் கைகளை  கீதா பிடித்து இழுத்தாள். ரிஷி, திரும்பி அவளை பார்த்தான்.

ரிஷி, நான் உன் கையை பிடிச்சுட்டு தூங்கட்டுமா?????? இங்கேயே, என்கூடவேயே என் பக்கத்துலயே இருக்கிறியா?????? என்று சிறுபிள்ளை போல கேட்டாள்.

அவளது கண்களில் இருப்பது காதலா???? தவிப்பா???? இல்லை வெட்கமா????? என்று புரியாமல் ரிஷி நின்றான்.

அவளை தவறாக பேசிய என்னிடம்  எப்படி கீதாவால் இப்படி கேட்க முடிகிறது.

ரிஷியால் ஏதும் கூற முடியவில்லை.... குற்ற உணர்ச்சியில் தவித்து கொண்டு இருந்தான்.... கீதாவோ, அவனது முகத்தையே பார்த்த வண்ணம் ரிஷியின் பதிலுக்காக காத்துகொண்டு இருந்தாள்.

இரண்டு நிமிடம் அப்படியே இரும்பென நின்றவன்.... அவனது கைகளில் இருந்து கீதாவின் கையை பிரித்து எடுக்க முயற்சித்தான். 

ஆனால், கீதாவோ ரிஷியின் கையை கெட்டியாக பிடித்து கொண்டாள். நிமிர்ந்து, அவளை பார்த்தான்.

இம்முறை, கீதாவின் கண்கள் இரண்டிலும் கண்ணீர் நிறைந்து இருந்தது..... தவிப்புடன் ரிஷியை பார்த்து கொண்டு இருந்தாள்.

இல்லை... இது கூடாது..... கீதா, என்னை மன்னிச்சுடு என்று மனதில் நினைத்தவன் அவளது கையை வலுக்கட்டாயமாக தனது கையில் இருந்து பிரித்து எடுத்தவன் அந்த அறையை விட்டு வேகமாக வெளியேறினான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ரிஷியின் குற்ற உணர்ச்சியை கீதா தவறாக புரிந்து கொண்டாள். இதுவரை, நான்தான் ரிஷியை  விட்டு பிரிந்து செல்ல நினைத்தேன்....

ஆனால் இன்று என்று நினைத்தவள் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள். ரிஷி உன் மீது எந்த தப்பும் இல்லை....

என்னை போல தவறான முறையில் பிறந்த பெண்ணை யார்தான் திருமணம் செய்து கொள்ள முடியும்....

கண்களை முடிகொண்டவாள் விடிந்ததும் ராஜகுட்டியை பற்றிய உண்மையை பருவதம் அம்மாவிடம் கூறிவிட்டு இங்கு இருந்து சென்று விட வேண்டும் என்று முடிவு எடுத்தாள்.

மருந்தின் உதவியில் தன்னையும் அறியாமல் உறங்கியும்  போனாள்.

அறையில் இருந்து வேகமாக வெளியில் வந்த ரிஷி, வெளியில்  நின்ற கொண்டு இருந்த பாட்டியின் மீது மோதி கொண்டான்.

ரிஷியின், கண்களை கண்ணீர் மறைத்து இருந்தலால் அவன் ஏதிரியில் வந்தவரை பார்க்க இயலவில்லை.

தன் கண்களை துடைத்து கொண்டவன் அப்போதுதான் அந்த பாட்டியை பார்த்தான்....

தலை எல்லாம் நரைத்து உடல் மெலிந்து காணப்பட்டார். வயது அறுபதுக்கு மேல் இருக்கும்.

அந்த பாட்டி அணிந்து இருந்த உடை அவர் அங்கேயே வேலை செய்பவர் என்பதை  உணர்த்தியது.

மன்னிச்சுடுங்க பாட்டி.... நான் ஏதோ கவனத்துல வந்துட்டேன்... நீங்க இருக்கறதா பார்க்கல...சாரி என்றான்.

ஆனால், அந்த பாட்டியோ இவனது முகத்தையே பார்த்து கொண்டு எதோ கேட்க தயங்குவது போல நின்றார்.

அந்த பாட்டியின் மனதில் இருப்பது புரியாமல் ரிஷி, தனது பர்ஸ் யில் இருந்து சில நூறு ரூபாய் தாள்களை  எடுத்து அவரிடம் நீட்டினான்.

அதை வாங்காமல் அந்த பாட்டி ரிஷியை வித்தியாசமாக பார்த்தார் ...

தம்பி, நீ அந்த ரூம்ல இருந்து தான்யா வர என்று தயங்கிபடி கேட்டார்... ஆம் என்பது போல ரிஷி தலை ஆட்டினான்.

அந்த ரூம்ல  இருக்கிற பொண்ணுக்கு ஒன்னும் அகலையே ???? அவ நல்ல இருக்காளா என்று தவிப்புடன் கேட்டார்.

ரிஷிக்கு ஒன்றும் புரியவில்லை யார் இந்த பாட்டி எதற்காக கீதாவை பற்றி கேட்கிறார்.

பாட்டி, முதல்ல நீங்க யாருனு சொல்லுங்க  ??? எதுக்கு கீதாவை பற்றி கேட்குறீங்க????? கீதாவா உங்களுக்கு தெரியுமா??? என்று கேள்விகளை அடுக்கினான்.

தனது கண்களில் வழிந்த கண்ணீரை  துடைத்து கொண்டவர், அவ என்னோட பேத்தி தான்பா.... ஆன நான் உன்கிட்டஅவளை பற்றி விசாரிக்குறதா அவகிட்ட சொல்லிடாதபா....

மூணு வருஷத்துக்கு முன்னாடி எங்க எல்லார்கிட்டயும் சண்டை போட்டுட்டு போய்ட்டா.... நைட் நீங்க அவளை ஹாஸ்பிடலுக்கு  தூக்கிட்டு வரும்போது தான் நான் பார்த்தேன்.

அவளுக்கு என்ன ஆச்சு பா??? என்று கண்ணீருடன் கேட்டார்.

தொடரும்

Episode # 13

Episode # 15

Go to Ennavale story main page

{kunena_discuss:1184}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.