(Reading time: 13 - 25 minutes)

மௌனமாய் அவனுடன் நடக்கத்துவங்கினான் தரண்..

“நீ லாவண்யாக்கூட பேசறது எனக்குப் பிடிக்கல தரண்..”, மௌனத்தை உடைத்துக்கொண்டு விழுந்தது கதிரின் குரல்..

“அதுக்கு..?? அவக்கூட பேசக்கூடாதுன்னு சொல்றியா நீ..??”

“உன்னைப் பேசக்கூடான்னு சொல்லல்ல நான்.. பேசறதும் பேசாததும் உன் விருப்பம்.. நீ என்னவோ செஞ்சுக்கோ.. ஆனால் உன் மாற்றத்துக்கு காரணம் அவளோன்னு தோனுது..”, என்ற கதிர் அவனைவிட்டு விலகிச்சென்றிருந்தான் விரைந்து..

“உன் மாற்றத்துக்கு காரணம் அவளோன்னு தோனுது..”, கதிரின் இந்த வார்த்தைகள் தரணின் மனதில் பல ஏதேதோ தோன்றவைத்தது..

“ஒருவேளை அவன் சொல்றமாதிரி அவக்கூட சேர்ந்ததுக்கப்புறம் தான் நான் இப்படி மாறிப்போனேன்னோ..??”, தன்னுள்ளே அவன் கேட்டுக்கொண்டிருக்க..

“தரண்.. எவ்ளோ நேரம்தான் உன்னைக் கூப்பிடுவதாம் நான்..??”, மூச்சுவாங்க அருகில் வந்து நின்றாள் லாவண்யா..

“கவணிக்கல லாவண்யா உன்னை..”

“என்னது கவணிக்கலையா.. எருமை எருமை.. எவ்ளோ தடவை உன்னைக் கூப்பிட்டேன் தெரியுமா..??”, தன் கையிலிருந்த புக்கால் அவனை அடிக்க..

சட்டென கொஞ்சம் ஆக்ரோஷமாகவே தள்ளிவிட்டிருந்தான் அவளை..

“தர..ண்..”, திகைப்பாய் வார்த்தைகள் வெளியேற..

அப்பொழுதுதான் தனது செய்கை புரிந்தது அவனுக்கு..

“சா..ரி லா..வி.. நா..ன் ஏதோ யோ..சைனை..யில்.. ஐ ஆம் ரிய..லி சாரி..”, திரும்பத் திரும்ப அவன் சொல்ல..

“தட்ஸ ஓகேடா.. ஆர் யூ ஆல் ரைட் தரண்..??”, அவன் முகம் பார்த்து இவள் கேட்க..

“யா.. ஐ ஆம் ஆல் ரைட்..”, என்றிருந்தான் இவன் அவள் முகம் பாராமல்..

“எதுவோ சரியில்லை இவனிடம்.. என்னவென்று கேட்டிடலாமா..?? வேண்டாம்.. கேட்டு ரொம்ப ஹர்ட் ஆகிடப்போறான்..”, தன்னுளே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிக்கொண்டவள்.. அவனிடம் வேறு பேச்சுக்கள் வளர்க்கத்துவங்க..

அவனிம் பதில் ம்ம்.. ஆமாம்.. இல்லை.. மட்டுமே..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஷா லா லா ஷா லா லா..

ரெட்டை வால் வெண்ணிலா

என்னைப்போல் சுட்டிப்பெண் இந்த பூமியிலா

செ செ செ செவ்வந்தி

என் தோழி சாமந்தி

வெற்றிக்கு எப்போதும் நான் தானே முந்தி..”

ஸ்பீக்கரை ஹை டெபிஸிலில் வைத்து தரணின் கட்டிலின் மீதேறி நடனமாடிக்கொண்டிருந்தாள் நித்யா..

தலையணை ஒருபுறம் பறந்திருக்க.. அவள் ஆட்டத்தில் அதிர்ந்து அடங்கியது தரணின் கட்டில்..

“நித்தீ.. எறங்குடீ முதல்ல.. இப்படியா அவன் பெட்டை நாஸ்த்தி பண்ணுவ..??”, முதுகில் இரெண்டடி போட்டு அவளைக் கீழே இறக்கிய அவளது அம்மா.. தரணின் பெட்டை ஒழுங்கு படுத்த துவங்க..

“சித்தீ.. விடுங்க.. நானே எடுத்துவெச்சிடறேன்..”, என்ற தரண்.. இருவரையும் தனது ரூமைவிட்டு வெளியே அனுப்புவிட்டு கலைந்துகிடந்த பெட்ஷீட்டை எடுக்க..

புதிதாய் ஒரு ஆசை மனதில் எழுந்தது..

பூனை நடயிட்டுவந்து கதவை சாத்தித் தாளிட்டவன்..

நித்தியைப் போல் பெட்டின் மீதேறி ஆடத்துவங்கினான்..

முதலில் கொஞ்சம் குத்தாட்டம் போட்டவன்.. கொஞ்சம் கொஞ்சமாக தன் ஆட்டத்தை மாற்றியிருந்தான்..

பெண்ணைப்போல்.. உடலை வளைத்து நெளித்து ஒரு ஆட்டம்..

என்னவோ அது அவனுக்கு மிகவும் பிடித்தமாக..

அத்தனை சந்தோஷம் மனதிற்குள்..

மூச்சு வாங்கி.. கைகால்கள் தளர்ந்து உடல் ஓய்வு கேட்க.. கொஞ்சம் கொஞ்சமாக நின்றது அவன் ஆட்டம்..

“நல்லா ஆடற நீ..”, தனக்குத்தானே சர்ட்டிபிக்கேட் கொடுத்துக்கொண்டவன்..

அவசரவசரமாக தனது ரூமை ஒழுங்கு படுத்துவிட்டு வெளியே வர..

அவ்வளவு நேரம் அவனது செயல்களை ஜன்னலின் வழியே பார்த்துக்கொண்டிருந்த பரத்வாஜுக்கு அத்தனை அதிர்ச்சி..

திகைத்துப்போய் அங்கேயே நின்று கொண்டிருந்தவருக்கு தான் என்னதான் உணருகிறோம் என்பது புரியாததாக..

ஏதோ தவறொன்று நடக்கவிரிக்கிறதென்று மனம் மட்டும் ஓயாமல் அடித்துச்சொல்ல..

அதன் பாரம் தாங்காமல் நின்ற இடத்திலேயே அமர்ந்துகொண்டார் அவர்..

இதை எப்படி சரிசெய்வதென புரியாமல்.. தெரியாமல்.. பெரும் குழப்பத்தில்..

உருவெடுப்பாள்..

Episode # 13

Episode # 15

{kunena_discuss:1168}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.