(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - தாரிகை - 15 - மதி நிலா

series1/thaarigai

ருளவன் அந்த இடத்தை முழுமையாக சூழ்ந்திருக்க.. நிலவுமகள் தனது மேகக்காதலனின் பின்னிருந்து கொஞ்சமாய் எட்டி பூமியைப் பார்த்துக்கொண்டிருந்தாள்..

மேட்டுப்பாளையம் ரோட்டில் அமைந்திருக்கும் ஒரு பழைய கெமிக்கல் பாக்ட்டரி அது..

வழமைபோல் வேகநடையிட்டு அதற்குள் நுழைந்தார் நாதன்..

நடையில் வழக்கத்தைவிட இன்று கொஞ்சம் வேகம் அதிகம்.. அதில் பரபரப்பு கொஞ்சம் ஒளிந்திருந்ததோ..??

அந்த இடம் ஒருவித நாற்றத்தால் சூழ்ந்திருக்க.. கையால் நாசியை அழுத்தி மூடிக்கொண்டவர்.. அத்தனை வேகமாய் அந்தப் பகுதியைவிட்டு முன்னேறி வெட்டைவெளியை அடைய.. அங்கே வாட்டர் டாங்கின் டோர்..

ஒருமுறை தன்னை சுற்றியும் பார்வை பதிக்க.. யாரும் புலப்படவில்லை கண்களுக்கு..

அந்தப்பழைய டோரின் கைப்பிடியைப் பிடித்து இழுத்து அவர் திறக்க.. அதனுள்ளிருந்து சிறு வெளிச்சம்..

தீபவொளி போல..

நிதானமாக அந்த டேங்குக்குள் இறங்கியவர்.. டோரைக் க்ளோஸ் செய்துவிட்டு வெளிச்சம் வந்த திசை நோக்கி விடுவிடுவென நடந்தார்..

அடக்கப்பட்ட கோபம் அதில்..

அது ஒரு அன்டர்கிரவுண்ட் குடவுன்..

அங்கு பதினைந்து பேர் பொட்டலம் போட்டுக்கொண்டிருந்தனர் மும்முரமாக..

அவர்களை மேற்பார்வைப் பார்த்துக்கொண்டிருந்தான் பிரபு..

பூட்ஸ் காலின் சத்தத்தில் வருவது நாதன் என புரிந்து அனைவரும் சட்டென எழுந்து நிற்க..

பிரபுவின் கன்னத்தில் இடியாய் இறங்கியது நாதனின் விரல்கள்..

கண்ணில் புகை பறந்தது அவனுக்கு..

“அ..ண்..ணே..”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“என்னடா அண்ணே நொண்ணேன்னு..?? நீங்க பண்ணி வெச்சிருக்க வேலையால எவ்ளோ டென்ஷன் தெரியுமா எனக்கு..??”

எதிரில் இருந்தவனுக்கு இவர் ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என்று புரியவேயில்லை..

அடிவாங்கியதில் உதட்டிலிருந்து உதிரம் வேறு உதிர எதுவும் பேசாமல் தலையைக்குனிந்திருந்தான் அவன்..

“யாருடா அது ஸ்கூல் பையன்கிட்ட பொருளைக்கொண்டுபோய் கொடுக்கச்சொன்னது..??”

“அ..து.. நாந்தா..னுங்..க.. அண்..ணே..”, கொஞ்சம் நடுக்கத்துடன் ஒருவன் முன்னால் வந்து நின்றான்..

அவனை எட்டி உதைத்திருந்தார் நாதன்..

“எதுக்குடா நா** அப்படிப்பண்ண..??”, கோபம் கோபம் கோபம் மட்டுமே அவரிடத்தில்..

“அ..து.. வ..ந்து.. சின்னப்பசங்கக்கிட்ட சப்ளை பண்ண விட்டோம்னா பெருசா அதுங்களுக்கு காசு கொடுக்கத்தேவையில்லைன்னு..”, என்று இழுத்தவன் நாதனைப் பார்க்க..

விகாரமாய் காட்சியளித்தார் அவர்..

“மன்..னிச்சி..ருங்க..ண்ணே.. இனிமே..ல் இப்..படிப்..பண்ண மாட்டே..ன்..”, கெஞ்சலாக ஒலித்தது அவனது குரல்..

“அதான் மாட்டிவிட்டாச்சே.. இனி மன்னிப்பு கேட்டு என்ன பிரயோஜனம்..”, என்றவர் சுற்றியிருந்தவர்களிடம் கண்காட்ட..

அவனை பிடித்துக்கொண்டனர் சிலர்..

“டே..ய்.. பிரபு.. போட்டிருங்கடா இவனை..”, சாய்வாக இருக்கையில் அமர்ந்துகொண்டு நாதன் கட்டளையிட..

சுற்றியிருந்த அனைவருக்குள் அத்தனை திகைப்பு.. பயம்..

“அ..ண்..ணே.. அ..ண்..ணே.. வேண்டாம்னே.. இனிமேல் இப்படிப்பண்ண..மாட்..டேன்.. என்னை விட்டுடுங்கண்ணே..”, கெஞ்சிக்கொண்டிருந்தான் அவன்..

சுத்தமாக அவன் சொற்களைக் காதில் வாங்கவில்லை அவர்..

“பிரபு.. இவன் சத்தம் ரொம்பப் போடறான்.. காது வலிக்குது எனக்கு..”, இன்னும் சாய்வாக அவர் அமர்ந்துகொள்ள..

அவனது அலறல் இப்பொழுது அதிகமானது..

“பிரபு..”, நாதன் தனது குரலை உயர்த்திட..

மற்றவனது வாயில் போதை மருந்தை அடைத்திருந்த பிரபு, “அண்ணே.. கண்டிப்பா இவனைப் போடனுமா..?? நம்மக்கூட்டதுலேயே வருமானம் அதிகம் காட்டுறது இவன்தான்..”, தாழ்ந்த குரலில் நாதனிடம் சொல்ல..

“வருமானம் பன்றானுங்கறதுக்காக நம்ம எல்லாரும் ஜெயிலுக்கா போகமுடியும்..??”, என்று கேட்டவர்..

பிரபுவின் அமைதியைக் கண்டு, “போட்டிருங்க இவனை.. ஆக்ஸிடென்ட் மாதிரி இருக்கட்டும்.. காலையில இரெண்டு மணிக்கு இருகூர் வழியா ஒரு ட்ரெயின் போகும்ல அதுல ஆக்ஸிடென்டாகி செத்துப்போனதா இருக்கட்டும்.. எல்லாத்தையும் பார்த்துக்கோ நீ.. யாரும் மோப்பம் பிடிக்கக்கூடாது நம்மளை..”, அத்தனை தீவிரம் குரலில்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.