(Reading time: 6 - 12 minutes)

தொடர்கதை - காதல் இளவரசி – 15 - லதா சரவணன்

kadhal ilavarasi

த்ராவின் மனம் பூராவும் நீரஜா ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தாள்.

பரத் அப்படிப்பட்டவனா ப்ரியன் இத்தனை தெளிவாய் சொன்னபிறகும் முட்டாள்தனமாய் பரத்தை நான் நம்பிக்கொண்டு இருக்கவேண்டுமா ?

ஏதோ ஒரு ஏமாற்றம் நம்மை ஆட்கொள்ளும்போது நமக்கு ப்ரியமானவர்களின் நினைவு வரும் அவர்களின் மடிதேடி ஓடச்சொல்லும் ஆனால் இத்தனை மைல் தூரத்திற்கு வந்தபிறகு தன் மனதிற்கு நெருக்கமான உறவுகளை எப்படி கண்டுகொள்வது அதிலும் நித்திலனின் அன்பான ஆறுதலான வார்த்தைகள் தனக்கு ஏற்பட்டு இருக்கும் இந்த நெருக்கமான நேரத்தை எப்படி செலவிடுவது என்று சொல்லியிருக்கும். அவனுடன் அலைபேசியில் பேசலாமா என்று ஒரு கணம் தோன்றினாலும், குடும்பம் கடமை என்றெல்லாம் சொல்லிவிட்டு இப்படி சில தினங்களிலேயே பரத் என்னும் ஒரு மோசமானவரை நான் காதலிக்கிறேன் மீள முடியாத அளவிற்கு அவரிடம் காதல் வயப்பட்டு விட்டேன் என்று சொல்லவா முடியும். 

என்னை மட்டமாய் என்னமாட்டாரோ அன்போடும் காதலோடும் நித்திலன் தன்னிடம் நின்ற நிமிடங்களில் எத்தனை முறை அவரை உதாசீனப்படுத்தியிருப்பேன் அதனால் தானோ இப்படியொரு ஏமாற்றுக்காரனிடம் என் காதல் பிறந்திருக்கிறது கடவுளே என்னை நன்றாக தண்டித்துவிட்டீர்கள். எதிர்பட்ட பத்மினியிடம் நின்றாள் உத்ரா

பத்மினி நேற்று உன் அறைக்கு வந்தேன்

வந்தோம் என்று சொல் உத்ரா, உன் ஆளையும் கூட்டி வந்தாயே ?

பத்மினியின் குரலில் வெளிப்பட்டது கிண்டலா குரோதமா அல்லது ஏதுமில்லையா என்ற ஆராய்ச்சியை விடுத்து

ஆம் நான் பரத்தை உன்னிடம் மன்னிப்பு கேட்க கூட்டிட்டு வந்தேன் அப்போ நீ .... 

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அந்த தைரியத்தில் தான் பரத்தோடு கட்டிப்பிடிச்சிட்டு இருந்தியா உத்ரா...! நேற்று நடந்த விஷயம் என்னை எப்படி பாதித்து இருக்கும் ஆனா நீ என்னைப் பார்த்து ஒரு சின்ன ஆறுதல் கூட சொல்லாம உடனே பரத்தை தேடிப்போனப்பவே எனக்கு உங்க இரண்டு பேரைப் பற்றியும் புரிந்துபோச்சு அதுக்கப்பறம் ஏன் என் முன்னால் கட்டிப்பிடி வைத்தியம்

நிறுத்து பத்மினி நேற்று நடந்தது எதிர்பாராதது, உன்கிட்டே மன்னிப்பு கேட்கத்தான்

ம்....சரிதான் ஆனா நான்தான் தப்பா புரிஞ்சிகிட்டேன்னு சொல்ல வர்றீயா ?! உத்ரா..... எந்த ஒரு பிரச்சனைக்கும் இரண்டு பக்க நியாயம் இருக்கு ஆனா நீ ஒரு பக்கத்தை பற்றி மட்டும்தான் யோசிச்சே தப்பு செய்யாம அடிபட்டு நின்ன என்னை விட்டுட்டு நீ பரத்தை தேடி ஓடினியே அப்பவே எனக்கு இங்கே நான் மட்டும்தான் தனின்னு புரிஞ்சிபோச்சு ! 

இதையே நானும் உன்கிட்டே சொல்லாம் இல்லையா பத்மினி நீயும் இரண்டு பக்கமும் பார்க்கமாட்டேங்கிறீயா எங்க சைடும் யோசிக்கலாமே

எனக்கு இப்போ நேரம் இல்லை உத்ரா நீ உன் வேலையைப் பாரு நான் அப்பறம் உன்கிட்டே பேசறேன்

அடுத்த வார்த்தைகள் பிறக்கும் முன்னரே சட்டென்று விலகிப்போனாள் பத்மினி

மற்ற உறவுகள் விலகியிருக்கும் பட்சத்தில் நல்ல நட்பாய் துணை நின்ற பத்மினியும் தன்னிடம் விலகியிருக்கிறாளே என்று நினைக்கும்போதே உத்ராவிற்குள்ளும் ஒரு விநாடி வெளிச்சம் புறப்பட்டது. பத்மினி சொல்லியதைப் போல நான் ஏன் பரத் விஷயத்திலும் யோசிக்கக் கூடாது. ப்ரியனின் சொற்களை மட்டுமே கேட்டு ஏன் பரத்தை தவறாக நினைக்கவேண்டும் என்று தோன்றியதும், நமக்குப் பிடித்தவர்களின் தவறுகளையும் நியாயப்படுத்தும் குணம் தனக்கும் வந்துவிட்டதோ பரத்தை தனக்குப் பிடித்ததால்தான் என் மனதை நானே நியாயப்படுத்திக் கொள்கிறேன். இருந்தாலும் பரத்திடம் நேராகவே கேட்டுவிடும் நோக்கத்தோடு உத்ரா அவனிருப்பிடம் சென்றாள்.

அப்போதுதான் வெகு உற்சாகமாய் பரத் போனில் யாருடனோ பேசிக்கொண்டு இருந்தான் உத்ராவைப் பார்த்ததும் கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததைப்போல நீ வந்திருப்பது உத்ரா நானே உன்னைப் பார்க்கத்தான் கிளம்பியிருந்தேன். 

என்னவிஷயம் ? அத்தனை அவசரமாய் என்னைப் பார்க்க 

உனக்கு ஒரு சர்ப்பரைஸ்

நான் உங்ககிட்டே கொஞ்சம் பர்சனலா பேசணும் 

எதுவாகயிருந்தாலும் இன்னைக்கு சாயங்காலம் வரையில் நீ பொறுத்திருக்க வேண்டும் காரணம் நான் மாலை ஒரு வித்தியாசமான விருந்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன் எனக்காக அதுவரையில் காத்திருக்க முடியுமா உத்ரா

உத்ரா ஏதும் பேசாமல் தலையசைத்தாள் இன்னும் சில மணிநேரங்கள் கழிவதால் அவளுக்கு எத்தனை பெரிய நட்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, இன்னும் தன் மறுப்பையும், நீரஜா பற்றி தான் கேட்கப்போகும் கேள்விகளையும் மனதிற்குள்ளேயே உருப்போடலாம் எனவே பரத் சொன்னதற்கு தலையசைத்து ரேடார் ரூம் நோக்கிப்போனாள்.

அங்கே ப்ரியனும் பத்மினியும் இருந்தார்கள். அங்கேயும் போக மனமின்றி உத்ரா தனது அறைக்கே சென்றாள்.

ப்ரியன் பவளப்பாறைகளின் வளர்ச்சியைக் கணக்கிடும் ரேடருடன் தொடர்பு கொண்டுவிட்டு கண்காணிக்கும் கருவியை பத்மினியிடம் தந்தவன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.