(Reading time: 6 - 12 minutes)

எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு பத்மினி நீங்கள் கவனித்துக்கொள்ளுங்கள் என்று வர இரண்டு மூன்று மணிநேரங்கள் கூட ஆகும் என்று கிளம்பியவன் சற்று நிதானித்து எங்கே என்று கேட்கமாட்டீர்களா பத்மினி.

எங்கே போகீறீர்கள் ?

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இன்று இரவு பரத் உத்ராவிற்கு ஒரு விருந்து தரப்போகிறார் எங்கே தெரியுமா ஆகாயத்தில் ! நீங்கள் படித்திருப்பீர்கள் கடற்கரையோர நாடுகளில் சுற்றுலா பயணிகளைக் கவர்வதற்காக ஸ்கை டைனிங் என்றொரு முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதாவது முழுவதும் கண்ணாடியிலான சாப்பாட்டு அறை அதிலென்ன புதுமை என்றுதானே கேட்கிறீர்கள் நிலத்தில் இருந்து 100 மீட்டர் உயரத்தில் அதாவது அந்தரத்தில் பலத்த பாதுகாப்புடன் உணவு அருந்தும் மேசை அமைக்கப்பட்டு இருக்கும், அங்கு உணவருந்துவது மிகவும் வித்தியாசமான அனுபவமாகவும் இருக்கும். பரத் இப்போது இதை இங்கே அந்தமானில் அமைத்திருக்கிறான் நான்கு பேர் மட்டும் அமர்ந்து சாப்பிடும்படியான உணவு கூண்டு இன்று அவர்கள் அங்குதான் போகப்போகிறார்கள் அதன் தொடர்பான ஏற்பாடுகளை நான் கவனிக்கப் போகிறேன். உங்களுக்கு உத்ராவின் விருப்பமான உணவுவகைகள் தெரியுமா ? என்று கேட்டு பத்மினியிடம் இருந்து முறைப்புகளை பதிலாய் வாங்கிக்கொண்டவன் வெளியேறினான். 

நம்மூர் பக்கம் ஒரு பழமொழி உண்டு பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்று அப்படித்தான் ஆனது ப்ரியனின் நிலைமையும்

தனது கணிப்பொறியில் இரவு பார்த்த நீரஜாவின் போல்டரை லாக் செய்யாமல் ஏதோ நினைவில் கிளம்பியும் விட்டான். சுமார் இரண்டு மணி நேரங்களுக்கு மேல் ரேடார் பதிவில் ஒவ்வொரு செயல்பாடுகளாக கவனித்துக்கொண்டே வந்த பத்மினி ஒரு கட்டத்தில் வெறுப்புடன் ப்ரியனின் கணிப்பொறியை நோக்கி போனாள். ஒவ்வொரு போல்டராக கவனித்து முந்தைய க்ரூப்பின் செயல்பாடுகளின் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தவனின் கைகள் தன்னிச்சையாக நீரஜாவின் போல்டரை உயிர்ப்பித்தது. 

தொடரும்...

Episode # 14

Episode # 16

Go to Kathal Ilavarasi story main page

{kunena_discuss:1201}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.