(Reading time: 10 - 20 minutes)

“சார் நான் கேட்ட அந்த கேஸ் விஷயம்..??”, சுற்றி வளைக்காமல் கவின் கேட்க.. தான் அதுவரை பார்த்துக்கொண்டிருந்த பைலை மூவரடமும் கொடுத்தான் கனேஷ்.. படித்துப்பாருங்கள் என்பதாக..

பைலை முழுதாக படித்து முடித்த பிரஜித், “இது அப்போ ஹன்ட்ரெட் பர்ஸெண்ட் சூசைட் கேஸ்.. அப்படித்தானே..??”, என்று கேட்டிட..

“எப்படி சூசைட் கேஸ்னு சொல்றீங்க..??”, பதில் கேள்வி கேட்டிருந்தான் கனேஷ்..

“ஆக்ஸிடெண்ட்னா டெட் பாடி ட்ரெயின்ல அடிச்சு கொஞ்சம் தூரம் தூக்கிப்போட்டிருக்கனும்.. பட்.. இது சூசைட்டா இருக்கப்போய்த்தான் ட்ரெயின் பாஸான ட்ராக்லயே இருந்திருக்கு..”, மேலோட்டமாக படித்ததைவைத்து பிரஜி சொல்ல..

“இல்லை பிரஜி.. இட்ஸ் நாட் அ சூசைட்..”, இது கவின்..

“பின்ன..??”, இது கனேஷ்..

“இட்ஸ் ஆக்ஸிடெண்ட் சார்..”

“ஆக்ஸிடெண்டா..??”, வாய்ப்பேயில்லை இல்லை என்பதுபோல் பிரஜி சொல்ல..

“ஆமா மச்சி கண்டிப்பா ஆக்ஸிடெண்ட்தான்.. அவன் ட்ரக்ஸ் கன்ஸ்யூம் பண்ணிருக்கான்.. போதையில அங்க விழுந்துகிடந்திருக்கனும்.. அந்த டைம்ல ட்ரெயின் அவன் மேல ஏறிப்போயிருக்கலாம்.. ஆம் ஐ ரைட் சார்..??”, கனேஷிடம் கேட்க..

அவன் பார்வையோ நிஷாவிடத்தில்..

“நீங்க என்ன நிஷா சொல்றீங்க..?? ரொம்ப நேரமா பைலயே பார்த்துட்டு இருக்கீங்க..??”

“சார்.. இட்ஸ் அ ப்ரீ ப்ளான்ட் மர்டர்..”, கவினையும் பிரஜித்தையும் ஒரே நேரத்தில் அதிர வைத்தாள் அவள்..

“வாட்..??”, அதிர்ந்துபோய்தான் கேட்டனர் இருவரும்..

“எஸ்.. இட்ஸ் அ மர்டர்.. கொலை செய்யத்தெரியாம பண்ணிருக்க மர்டர்..”

“எப்படி சொல்றீங்க நிஷா..?? அதுவும் இவ்ளோ ஸ்ட்ராங்கா..??”

“சூசைட்னா.. யாரும் ரெயில் வே ட்ராக்ல தலை வெச்சுப்படுத்துத்தான் சூசைட் பண்ணிக்கணும்னு அவசியமில்லையே.. ட்ரெயின் வரும் திசைக்கு ஆப்போஸிட்ல நடந்து வந்தாலோ.. நின்னாலோ போதுமே.. அப்பவும் பாடியை ட்ரெயின் தூக்கிப்போட்டிருக்கும்..  இன் தி கேஸ் ஆப் ஆக்ஸிடெண்ட்.. அப்படியும் நடக்க வாய்ப்பிருக்கு.. ட்ரக்ஸ் எடுத்துட்டு தள்ளாடி தடுமாறி ட்ராக்ல விழ.. ஆனால்.. இவன் ட்ரக் எடுத்திருக்க அளவு.. ரொம்ப ஜாஸ்த்தி.. அதை சாப்ட்டா அவனால இரெண்டு அடி கூட எடுத்து வெச்சிருக்க முடியாது.. சோ கண்டிப்பா இட்ஸ் நாட் ஆன் ஆக்ஸிடென்ட்..”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஏன் நிஷா.. அவன் ரெயில் வே ட்ராக்ல உட்கார்ந்தே அவன் ட்ரக்ஸ் எடுத்திருக்கலாம்ல..??”, இது கவின்..

“அப்படி எடுத்திருக்க சான்ஸ் இல்லை கவின்.. ஒரு தெளிவான மனுஷனால *** கிராமுக்கு மேல ட்ரக்ஸ் மேல எடுக்கமுடியாது.. பிகாஸ்.. *** கிராம் அவன் சாப்பிடறப்பவே அவனுக்கு போதை ரொம்ப ஏறியிருக்கும்.. எழுந்திருக்க முடியாத அளவுக்கு.. பட் இன் திஸ் கேஸ் அவன் சாப்பிட்டிருக்க அளவு ரொம்பவே ஜாஸ்த்தி.. இவனை போர்ஸ் பண்ணி சாப்பிட வெச்சிருக்கனும்.. இல்லனா இஞ்செக்ட் பண்ணிருக்கனும்.. பாடில இஞ்செக்ட் பண்ண அடையாளம் எதுவுமில்லை.. பட்.. அவனோட நெயிஸ்ல வேற ப்ள்ட் சாம்ப்பிள்ஸ் இருக்கு.. அவன் டிபென்ட் பண்ணிருக்கான்.. கண்டிப்பா அவனை போர்ஸ் பண்ணி சாப்பிட வெச்சிருக்காங்க.. அவன் சுயநினைவ இழந்தபிறகு ரெயில்வே ட்ராக்ல போட்டிட்டுப் போயிருக்காங்க.. இது எல்லாமே ஒரு கெஸ்தான்.. இப்படி நடந்திருக்க நைன்ட்டி பர்ஸென்ட் சான்ஸ் இருக்கு..”

அத்தனை தெளிவு அவள் விளக்கத்தில்..

“எக்ஸெலெண்ட் நிஷா..”, அவளை மனமாற பாராட்டிய கனேஷ், “யூ ஆர் அப்ஸலூட்லி ரைட்.. நல்லா அனாலிசிஸ் பண்றீங்க.. பேசாம பேத்தாலஜி (PATHOLOGY – ஆட்டோஸ்பை செய்பவர்கள் படிப்பது) படிக்கலாம் நீங்க..”, ஒரு பிரமிப்புக்கூட ஒட்டிக்கொண்டிருந்தது அவனிடத்தில்..

ஐந்தாம் வருட மாணவர்களே அடாப்ஸி செய்வதில் தடுமாறித்தான் போனார்கள்.. ஆனால் இவள் இதை அசால்ட்டாக செய்தது வியப்பை அளித்திருந்தது அவனுக்கு..

“நோ ஐ ஆம் நாட் இன்ட்ரெஸ்டட் இன் பேத்தாலஜி..”

“தென்..??”

“ஐ வான்ட் டூ பிகம் அ கைனக்காலஜிஸ்ட்..”

புருவம் ஏறி இறங்கியது கனேஷிற்கு.. இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை அவன்..

“குட்.. ஆல் தி பெஸ்ட்..”, நிஷாவைப்பார்த்து சொன்னவன், “அன்ட் மிஸ்டர் டிடெக்டீவ்.. இஸ் யுவர் ப்ராப்ளம் சால்வ்ட்..??”

“யெஸ் சார்.. சால்வ்ட் நவ்.. டவுட்ஸ் வரும் நிறைய கேட்க வருவேன்..”, கனேஷைப் போல் இவனும் கேலியாக சொல்ல..

மீண்டும் ஒரு புன்னகை கனேஷிடம்..

ன் விழுகளுக்குள்

நான் விழுவது எப்பொழுதடி..??”

இன்றும் அவனிடமிருந்து வந்திருந்தது பூங்கொத்து..

யாரவனோ..??

தேடலில் அவள்..

 

வணக்கம் தோழமைகளே..

இன்று கொஞ்சம் சின்ன பதிவு தான்..

எக்ஸாம்ஸ் காரணமாக பெரிய பதிவு கொடுக்கமுடியவில்லை..

படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும்..

நன்றி..!!

உருவெடுப்பாள்..

Episode # 14

Episode # 16

{kunena_discuss:1168}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.