(Reading time: 10 - 20 minutes)

“சரிங்கண்ணே.. முடிச்சிடலாம்.. முடிச்சிட்டு உங்களுக்கு கூப்பிடறேன் நான்.. நீங்க கவலைப்படாம வீட்டுக்குப்போங்க..”

“ஹ்ம்.. நீ எனக்கு கால் பண்ணலாம் வேண்டாம்.. வீட்டுக்கு நேரா வந்து என்னையப்பாரு..”, என்றவர் வேலை செய்பவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றிட..

அவர் கண்கள் அனைவரையும் எச்சரிக்கை செய்வதுபோல்.. என்னைக் கேட்மாகல் இங்கு ஒரு துரும்பு அசைந்தாலும் அனைவருக்கும் இதே நிலமைதான் என்று கடுமையாக எச்சரிப்பதுபோல்..

அங்கிருந்தோர் அனைவருக்குள்ளும் நடுக்கம்..

விடியல்..!!

என்றும் போலவே இன்றும் பரபரப்பாக காட்சியளித்தது கோவை மருத்துவமனை..

“சூசைட் கேஸாட்ட இருக்கு.. முகமெல்லாம் செதஞ்சு பாக்கவே ரொம்ப அருவருப்பா இருக்கு..”

“ஆக்ஸிடென்ட்டாக்கூட இருக்கலாம்ப்பா.. யாரு கண்டா..?? ஆமா எங்க நடந்ததாம்..??”

“இருகூர்கிட்ட.. காலையில வாக்கிங்க் போறவங்க பார்த்துட்டு போலிஸுக்கு சொல்லிருக்காங்க.. அவிங்க இங்க தூக்கிட்டு வந்தாச்சு..”

வார்டுபாய்கள் இருவர் பேசிக்கொண்டிருக்க அவர்களைப் பேச்சைக் கேட்டவாறு கடந்து சென்றனர் கவின் பிரஜித்தும்..

“கேட்டியா கவின் அவங்க பேசிக்கிட்டதை..??”

“ஹ்ம்.. ஹ்ம்.. கேட்டேன்டா.. அநேகமா நம்ம பிஜி ஸ்டூடண்ட்ஸ் அட்டென்ட் பண்ணப்போறது அந்தக் கேசாதான் இருக்கனும்..”

“மோஸ்ட்லி சூசைட்தான்டா.. ரெயில்வே ட்ராக்ல ஆக்ஸிடென்ட் அப்படீங்கறது ரொம்பவே ரேர்..”

“பட் எதுவா இருந்தாலும் ஆட்டோஸ்பை பண்ணாம சொல்லமுடியாதுல..??”

“சரிதான்.. வா இன்னும் கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணாப்போதும்டா.. எல்லாத்தையும் தெரிஞ்சுக்கலாம்..”

“டேய்.. போலிஸ் கேஸ்டா இது.. இப்போதைக்கு ஸ்டூடெண்ட்ஸ் கிட்ட இதைப் பத்தி டிஸ்க்கெஸ் எல்லாம் பண்ணமாட்டாங்க..”

“ஆஹான்..”, ஒரு நக்கல் பதில் கவினிடம்..

அவனது மேனரிசத்திலேயே புரிந்துவிட்டது பிரஜிக்கு.. இவன் அட்டாப்ஸி செய்யும் யாரையோ பிடித்துவிட்டான் என்று..

லஞ்ச் பிரேக் பெல் அடித்ததும் வழக்கமாக டெஸ்க்கில் கவிழ்ந்துகொள்ளும் கவின்.. இன்று அவரசமாக பிரஜித்தை இழுத்துக்கொண்டு எமர்ஜென்சி வார்ட் நோக்கிச் செல்ல.. அதை எதர்ச்சையாகப் பார்த்த நிஷாவிற்கு அத்தனை ஆச்சர்யம்..

“பிரஜி.. கவின்.. எங்கடா போறீங்க..??”, வழியை மறைத்துக்கொண்டு அவள் கேட்க..

அதுவரை பிரஜியின் கைகளைப் பிடித்துக்கொண்டிருந்த கவின் அவனது கைகளை விட்டுவிட்டு நிஷாவின் கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டு நடக்க.. அவனது இழுப்பிற்கு நடக்கத்துவங்கினாள் அவள் புரியாமல்..

“இப்போ எதுக்கு இப்படிக் கையைப் பிடிச்சிட்டு வர..?? விடு கவின்.. வலிக்குது..”, அவனது இறுக்கத்தில் இவள் கத்த.. லேசாக பிடியைத் தளர்த்தினான் அவன்..

“என்னாச்சு பிரஜி..?? இவன் ஏன் இன்னைக்கு இப்படி பிஹேவ் பண்றான்..??”, கொஞ்சம் முகசுணுங்கள் இவளிடம்..

“ஏதோ டிடெக்ட்டீவ் மாதிரி பிஹேவ் பண்றான் நிஷா இவன்.. கொஞ்சம் வெயிட் பண்ணு.. தெரிஞ்சுடும்..”, இது பிரஜி..

மே ஐ கம் இன் சார்..??”

“எஸ் கம் இன் கவின்..”, குரல் வைத்தே வந்திருப்பது யாரென கண்டுபிடித்திருந்தான் அவன்..

அவன்..!! பாலகனேஷ்..!!

ஏதோவொரு பைலோடு போராடிக்கொண்டிருந்த பாலகனேஷைக் கண்ட கவின், “சார்.. நாங்கள் வேண்டும் என்றால் ஈவெனிங்க் வரவா..??”, என்று கேட்டிட்ட..

மூவரையும் நிமிர்ந்து பார்த்த கனேஷ், “நோ இஷ்யூஸ் கவின்.. என் வர்க் முடிஞ்சிருச்சு..”, என்றவன்.. மூவரும் இன்னும் நின்றுகொண்டிருப்பது கண்டு, “டேக் யுவர் சீட்ஸ் பீப்பில்.. நோ பார்மாலிட்டீஸ்..”, என்க.. கவின் உடனடியாக அமர்ந்துகொள்ள.. மற்ற இருவரும் தயக்கமாய் அமர்ந்தனர்..

“எஸ் கவின்… தனியா வருவீங்கன்னு நினைச்சேன் நான்.. ஒரு படையவே கூட்டிட்டு வந்திருக்கீங்க..”, கொஞ்ச்ம கேலியாக..

“இவங்க இரெண்டு பேரும் என் பிரெண்ட்ஸ் சார்.. ஹி இஸ் பிரஜித்.. மை கிளாஸ்மேட்.. அண்ட் ஷி இஸ் நிஷார்த்திகா.. மை ஜூனியர்..”, இருவரையும் அவன் கனேஷிடம் அறிமுகப்படுத்த..

ஒரு மெல்லிய புன்னகை அவனிடம்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.