(Reading time: 14 - 27 minutes)

தொடர்கதை - தாரிகை - 16 - மதி நிலா

series1/thaarigai

வருடம் : 2004..

ன்று வானம் ஏனோ மோடம் போட்டுக்கொண்டிருந்தது.. பரத்வாஜின் மனதைப் போலவே..

இன்னும் அவரால் தான் கண்ட காட்சியைவிட்டு வெளியே வர இயலவில்லை..

வானின் மேகங்கள் போலவே அவரது மனதும் குழும்பிக்கிடக்க.. சடசடசடவென பெய்யத்துவங்கியது மழை..

ஆறு மாதத்திற்கு பிறகான மழை..!!

எப்பொழுதும் கீதாஞ்சலியுடம் அமர்ந்து மழையை ரசிப்பவர் இன்றைய மனக்குழப்பத்தில் மழையை வெறித்தபடியே அமர்ந்துந்தார்..

“ஏ..ங்..க.. சின்னக்குழந்தையாட்டம் இது என்ன மழையில நனைஞ்சுக்கிட்டு..??”, பின்னாலிருந்து கீதாஞ்சலி கடிய..

அவரது குரல் எட்டிடவில்லை அவருக்கு.. அசையாமல் ஒரே இடத்தில் நின்றிருந்தார் பரத்வாஜ்..

காரணமே இல்லாமல் மழையுடன் சேர்த்து அவரது கண்களில் கண்ணீர்.. மழையுடன் முத்தமிட்டுக்கொண்டிருந்தது..

“என்னாச்சு இவருக்கு..?? நான் சொல்லிட்டே இருக்கேன்.. இவர் பாட்டுக்கு மழையில நின்னுட்டு இருந்தா என்ன அர்த்தம்..??”, கோபம் அதன்பாட்டில் பொங்கிவழிய..

மழையைப் பொருட்படுத்தாது பரத்வாஜின் அருகில் வந்து அவரது தோளில் கைவைத்தார் கீதா..

தன் மீது விழுந்த ஸ்பரிசத்தில் திடுக்கிட்ட பரத்வாஜ்.. கைவைத்திருப்பது கீதா என உணர்ந்து அவரது தோளில் கைப்போட்டு தன்னுடன் இறுக்கிக்கொள்ள..

இன்று ஏனோ பரத்வாஜின் செய்கைகள் புதிதாய் தோன்ற.. விழுந்துகொண்டிருந்த மழையை பொருட்படுத்தாது அவர் முகம் பார்க்க முயற்சி செய்தார் கீதா..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவர் செய்கை புரிந்தார்போல் பரத்வாஜ், “என்ன கீதா..??”, என்று கேட்டிட..

“நான் கேட்கணும் அதை.. என்னாச்சு..??”

“ஒன்..னுமில்..லை..யே..”, தடுமாறியது பரத்வாஜின் குரல்..

“ஓன்னுமில்லையா..?? அப்போ ஏதோ இருக்கு.. என்னன்னு சொல்லுங்க..”, அடம்பிடித்தார் கீதா..

அழுத்தமாக.. மிக அழுத்தமாக தலையை இடதுகையால் கோதிக்கொண்ட பரத்வாஜ், “ப்ச்.. என்னன்னு தெரியல.. மனசு முழுசா ஏதோ குழப்பம்..”, பாதி உண்மையைச் சொன்னார் அவர்.. மனைவியை குழப்பிவிடக்கூடாதென்ற எண்ணத்தில்..

“குழப்பம்னா..?? இப்படி மழைல நின்னு சொட்டச் சொட்ட நனஞ்சா சரியாப்போயிடும்னு யாராவது சொன்னாங்களா..??”

“இல்லம்மா.. ஏதோ நியாபகம்.. அப்படியே நின்னுட்டேன் இங்கயே..”

“எந்த வேண்டாத நியாபகமும் வேண்டாம்.. உள்ள போலாம் வாங்க.. இப்படி நனைஞ்சா சளிப்பிடிச்சுக்கும் உங்களுக்கு..”

இருவரும் வீட்டிற்குள் வந்து உடைமாற்றி தேநீர் அருந்தத்துவங்க.. சொட்ட சொட்ட வந்து சேர்ந்தான் தரண்யன்..

அவனது முகம் முழுவதும் அத்தனை அத்தனை மகிழ்ச்சி..

“இன்னைக்கு செம மழைல..?? சூப்பரா இருந்துச்சு..”, அன்னையில் தோளில் கிடந்த துண்டை எடுத்துத் தன் தலையை துவட்டிக்கொண்டே இவன் சொல்ல..

கீதாஞ்சலிக்கு ஆச்சர்யம் வியப்பு என்றால்.. பர்த்வாஜுக்கு பயம்.. பயம்.. பயம் மட்டுமே..

அவன் செய்கைகள் ஏனோ சரியாக இல்லாததுபோல்..

“மழைல நனைஞ்சயா நீ..??”, ஆச்சர்யமாக கீதஞ்சலி கேட்டிட..

“ஆமாம்மா.. ஸ்கூல்ல இருந்து நனைஞ்சுட்டேதான் வந்தேன்.. சில்லுன்னு ரொம்ப நல்லா இருக்கு.. இன்னும் நனையலாம் போல..”

“ஹான்.. நீயாடா தம்பி சொல்ற..?? மழை நல்லா இருக்குன்னு..??”, இன்னும் நம்ப முடியவில்லை கீதாவிற்கு..

மழை என்றால் வெளியில் எட்டிப்பார்க்காதவன் இன்று சொட்டச் சொட்ட நனைந்து வந்ததில் அத்தனை ஆச்சர்யம் அவருக்கு..

“நல்லா இருந்தா நல்லா இருக்குன்னுதானே சொல்லமுடியம்..”, என்ற தரண், ”எனக்கு பஜ்ஜி சுட்டுக்கொடும்மா..”, என்றான் தன்னுள் நடக்கும் மாற்றங்கள் உணராது..

“சுட்டுத்தறேண்டா.. முதல்ல நீ போய் இந்த ஈரத்துணியை மாத்திட்டு வா..”, அவனைப் பிடித்து உள்ளே தள்ளிவிடாத குறையாக இவர் தள்ளிவிட சிரித்துக்கொண்டே இவன் உடைமாற்றச் செல்ல.. அவன் சொன்னதைச் செய்ய கிட்சனுக்குள் அடைக்கலமானார் கீதா..

உள்ளே வந்தது முதல் தரணையே பார்த்துக்கொண்டிருந்த பரத்வாஜிற்கு அவனின் ஒவ்வொரு மாற்றங்களும் முள்ளின் மீது கால் வைத்து நடப்பதுபோல் தோன்ற..

எப்படிக் கையாள்வதென்றே தெரியவில்லை அவருக்கு..

கண்டிப்பாக தரண் ஏதோவொறு இடத்தில் வெடித்து வெளியே வருவான் என்று புரிந்தது..

அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்பதும் அவன் செயல்கள் ஒவ்வொன்றும் நிருபித்துக்கொண்டிருக்க..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.