(Reading time: 14 - 27 minutes)

தாளவில்லை அவருக்கு..

“வெற்றியை இங்கு அழைத்திடலாமா..??”, முன்பு தோன்றிய அதே எண்ணம் இப்பொழுதும் தோன்றியதுதான்..

ஆனால் அதைச் செய்ய முடியாமல் எதுவோவொன்று அவரைத்தடுத்திட..

அமைதியாக வேடிக்கைப்பார்க்க முடிவு செய்தார் அவர்..

பின்னாளில் தனது இந்த முடிவு தவறாகிப்போகுமென்று அறிந்திருந்தால்..??

ந்த வெயிலில் அவசியம் அசெம்பலி வைத்தாக வேண்டுமா..?? ரொம்ப டையர்டாகிடுது தரண்..”, தன்னிடம் அவன் கொஞ்சம் ஒதுக்கம் காட்டியபொழுதும்.. அவனுடன் பேசுவதை நிறுத்தவில்லை லாவண்யா..

“டைமாகுது லாவண்யா.. அரேஜாகி நிக்கச்சொல்லி அனோன்ஸ் பண்ணு மைக்ல..”, அவளின் கேள்விக்கு பதில் சொல்லாது இவன் சொல்லிவிட்டுச் செல்ல..

அவன் மீது என்றுமில்லாது எரிச்சல் பிறந்தது லாவண்யாவிற்கு..

தரணுக்கு முன்னால் சென்று மூச்சுவாங்க இவள் நிற்க..

என்ன வேண்டும் என்பதாய் அவளைப் பார்த்துவைத்தான் தரண்..

அவன் செய்கையில் இவளுக்கு அத்தனை கோபம் பிறந்திட, “என் மேல உனக்கு என்ன கோபம் தரண்..??”, பொறுமையை இழுத்துப்பிடித்துக்கொண்டு கேட்டிருந்தாள் அவள்..

“கோபமா எனக்கு என்ன கோபம்.. சீக்கிரம் அனோன்ஸ் பண்ணு நீ.. டைமாகுது பாரு..”, அவளைத் தவிர்த்து அவன் முன்னேறிச் செல்ல முயல..

அவனது கைகளை அழுத்தமாக பற்றிக்கொண்டாள் லாவண்யா..

“விடு லாவண்யா.. டைமாகுது..”, குரல் உயர்ந்தது தரணுக்கு..

“நான் கேட்டதுக்கு பதில் வேணும் எனக்கு..”, ஒவ்வொறு வார்த்தையிலும் அழுத்தம்.. அதில் நீ என்னிடம் பதில் சொல்லாமல் இங்கிருந்து செல்ல முடியாதென்ற அர்த்தமும்..

அவளது பிடியில் திணறித்தான் போனான் அவன்..

இருந்தும், “ப்ச்.. இரிட்டேட் பண்ணாத.. சொன்ன வேலையப்பாரு..”, முகத்தில் அடித்தாற்போன்று இவன் சொல்ல..

மாற்றம் ஏதுமில்லை இவளிடத்தில்..

“லா..வீ.. புரிஞ்சுக்கோ.. நேரமாகுது பாரு.. ஸ்டூடெண்ட்ஸ் எல்லாம் பாவம்..”, அவளது பார்வையில் இறங்கிப்போய் சொன்னான் தரண்..

“லா..வி.. இதுதான் நிஜம் தரண்.. நீ என்னை அவாய்ட் பண்ற.. நல்லாவே தெரியுது எனக்கு.. ஆனால் அது ஏன்னுதான் புரியல எனக்கு.. பட் வேணும்னே பண்றன்னு மட்டும் நல்லாப் புரியுது.. பட் ஒன்னு மட்டும்.. உனக்கு ஆக்ட் பண்ண சுத்தமா வரல தரண்..”, அவனது கண்களைப்பார்த்துக்கொண்டே இவள் சொல்ல..

பார்வையை வேறெங்கோ பதித்தான் இவன்..

“அவள் சொல்வது அனைத்தும் உண்மைதானே.. வேண்டும் என்றே தானே இவளை அவாய்ட் செய்கிறேன் நான்.. பட் இவளை அவாய்ட் செய்யாமல் வேறென்ன செய்வதாம் நான்..??”, எண்ணங்கள் எங்கோ பயணிக்கத் துவங்க.. லாவண்யா கைகளை விட்டுவிட்டதை கவணிக்கவில்லை அவன்..

கவணம் பதியவில்லை அவனுக்கு.. சுற்றி நடப்பவை எதிலும்..

“கையை விட்டுட்டேன் தரண்.. போலாம் நீ..”

“ஹான்.. என்ன சொன்ன லாவி நீ..??”, கனவிலிருந்து முழிப்பவன் போல் கேட்டிட..

“நான் பிடிச்சிருந்த உன் கையை விட்டுட்டேன்னு சொன்னேன்..”, என்றவள் அவனைத் திரும்பியும் பார்த்திடாது நடந்து செல்ல..

அவளையே வெறித்தவனது இதழ்கள், “சா..ரி.. லா..வி..”, என்று முணுமுணுத்தது..

ல்லீ.. இங்க பாரு நூலு நீட்டிட்டு இருக்கு.. நல்லா தெய்யு..”

“மடிப்பு கலையாம அடுக்கி வையுங்க..”

“அங்க என்னடி பேச்சு வேண்டி கெடுக்கு.. நாயம் கட்டிட்டு இருக்காம பொழப்பப்பாருங்க.. இன்னைக்குள்ள இதை அணுப்பிவைக்கனும்..”

“அடியே வள்ளி.. இது காட்டன்.. இவ்ளோ சூடா தேய்க்கக்கூடாது..”

அங்கிருந்தோர் அனைவரையும் வேலை வாங்கிக்கொண்டிருந்தார் கல்யாணி..

உற்சாகம்..!!

மனம் முழுவதும் உற்சாகம் அவருக்கு..!!

தங்களது வாழ்க்கைத் தரம் இவ்வளவு தூரம் உயருமென்று இதுவரை நினைத்தில்லை அவர்..

நிகழ்த்திக்காட்டியிருந்தாள் சமுத்திரா..

ஒரு எங்ஜியோவை அணுகியவள் சுயதொழில் செய்வதற்கு உதவி செய்யுமாறு கேட்க..

சில பல யோசனைகளுக்குப் பிறகு ஒரு ட்ரஸ்ட்டின் மூலம் பத்து தையல் மெஷினை வாங்கித் தந்தவர்கள்..

திருப்பூரிலிருக்கும் ஒரு டெக்ஸ்ட்டைல் பாக்ட்டரியில் பேட்ச் வர்க் செய்யும் காண்ட்ராக்ட்டையும் வாங்கித்தந்திருக்க..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.