(Reading time: 14 - 27 minutes)

அத்தனை உற்சாகமாய் ஒவ்வொறுவரும் தங்களால் முடிந்த பங்களிப்பை அளித்துக்கொண்டிருந்தனர்..

ஆயிரக்கணக்கில் பாக்ட்டரியில் இருந்து துணிகளை அணுப்புவார்கள்..

துண்டு, கர்ச்சீப் என சின்னச் சின்ன துணிகள்..

அனைத்திற்கும் ஓரங்களில் கோடடித்து தேத்து மடித்து பேக் செய்து அணுப்புவதே அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை..

தங்களால் முடிந்தவற்றை சிறப்பாய் செய்துகொடுத்தனர் அனைவரும்..

இதோ அதோ என்று இரெண்டு மூன்று மாதங்கள் கடந்துவிட்டிருந்தது..

“அக்..கா..”

“அட சமூ.. ஏதோ பரிட்சை இருக்குன்னு சொன்ன.. அதுக்குள்ள முடிஞ்சிருச்சா..??”, அவளை எதிர்பார்க்காத சந்தோஷத்தில் அவர் கேட்க..

“ஆமாக்கா.. இன்னைக்குத்தான் கடைசி பரிட்சை.. முடிச்சுட்டேன்..”

“நல்லா எழுதுனியா ராசாத்தி..??”, வாஞ்சையுடன் அவர் கேட்க..

“அதெல்லாம்.. ரொம்ப நல்லாவே பண்ணிருக்கேன் நான்.. வேலை முடிய நேரமாகுமாக்கா..??”, புன்னகையுடன்..

“முடிஞ்சாச்சும்மா.. பேக் பண்றது மட்டும்தான் மிச்சம்.. இதோ இன்னும் ஒரு மணி நேரத்துல முடிச்சிருவாங்க.. சொல்லும்மா.. என்ன விஷயம்..??”

“மெஸ் ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணிருந்தோம்ல.. அது விஷயமா பேசவந்தேன்க்கா..”, என்றிட..

“மெஸ் இப்பவே தொடங்கனுமா சமூ.. இப்போத்தான் தையல் வேலை நல்லாப் போகுதே..??”

“தையல் வேலையில மொத்தம் இருபது இருபத்தி அஞ்சு பேருதானேக்கா இருக்காங்க.. மீதி இருக்க எல்லாரும் சும்மாதானே இருக்காங்க.. அவங்களுக்கு ஏதாவது பண்ணிக்கொடுக்கனும்க்கா..”

“நல்ல விஷயம்தான் தாயி.. ஆனால்.. உனக்கு ஏற்கனவே ரொம்ப செலவு.. இதுக்கு மேலையும் உன்னைத் தொந்தரவு பண்ண மனசு கேக்கலமா..”, உண்மையை வெகு இயல்பாய் அவர் சொல்ல..

“எனக்கு ஒன்னும் சிரமம் இல்லக்கா.. சமாளிச்சுக்கலாம்..”, நம்பிக்கையுடன் சொன்னாள் சமூ..

“சமாளிச்சிடுவ நீ.. தெரியும் எனக்கு.. ஆனால்.. மெஸ் எல்லாம் தொடங்கனும்னா மொதுல போடணும்ல..?? நாங்க பாக்கறதுல இருந்து வருதுதான்.. இல்லைன்னு சொல்லல.. ஆனால் இது எல்லாத்துக்கும் சரியாப்போயிடுது.. சம்பளம் கொடுக்க.. இங்க வயசானவங்களுக்கு மருந்து செலவு அது இதுன்னு.. பெருசா லாபமில்லை.. கொஞ்சம் நாளாகும் இதை நிலை நிறுத்திக்க.. அப்போ ஆரம்பிக்கலாம்.. துணைக்கு இருக்கோம் நாங்கெல்லாம்..”

“அக்கா.. பணம் ஒன்னும் பிரச்சனை இல்லைக்கா.. அது சமாளிச்சுக்கலாம்.. அதுக்கு நான் பொறுப்பு.. இவங்க இனி பிச்சை எடுக்கவோ வேறு தொழிலுக்கோ போகக்கூடாது.. போகவும் வேண்டாம்.. நாமெல்லாம் நம்ம சொந்த காலுல நின்னுட்டோம்னா.. இப்படிக் கஷ்ட்டபடத்தேவையே இல்லையே.. இதெல்லாம் வேண்டாம்க்கா.. இதோட வலி வேதனை அணுபவிச்சிருக்கேன் நான்.. ரொம்ப கொடுமை அது.. வயித்துப் பசிக்காகத்தான் எல்லாம்.. புரியுது எனக்கு.. ஆனால் வேண்டாம்க்கா.. இது அவங்களே அவங்களை அழிச்சுக்கற மாதிரி.. நிறுத்திடலாம்.. நிறுத்திடச் சொல்லுங்க.. வாழ நிறைய வழி இருக்கு.. வாழலாம்.. கஷ்டங்கள் வரத்தான் செய்யும்.. போரடலாம்.. தோல்விகள் வரும்.. பரவாயில்லை.. விழலாம்.. தப்பில்லை.. ஆனால் கண்டிப்பா ஒரு நாள் ஜெய்ப்போம் நாமெல்லாம்..”, நம்பிக்கை.. நம்பிக்கை.. அது மட்டுமே அவளிடத்தில்..

“நீ சொல்றது எல்லாம் சரிதான் சமூ.. ஆனால்.. சமைக்கறது நாம்தான்னு தெரிஞ்சுதுனா சாப்பிடுவாங்களா..?? ஒதிக்கிடமாட்டாங்களா..?? தெரியலை எனக்கு..”

“கண்டிப்பா மாட்டாங்க.. தேவை நல்ல தரமான சாப்பாடு மட்டும்தானே ஒழிய.. சமைக்கறது யாருன்னு அவங்களுக்குத் தேவையில்லை.. உங்க மேலையே நம்பிக்கை வெய்யுங்கக்கா.. கண்டிப்பா ஒரு நாள் நம்ம சாதிப்போம்க்கா..”, என்றவள் அவரது கைகளை நம்பிக்கையூட்டும்படி அழுத்திக்கொடுக்க..

அவருக்குள்ளும் புது இரத்தமும் நம்பிக்கையும் பாய்வதுபோல்..  

“சமூ.. ஊருல இருக்க நம்ம வீட்டை வித்தடலாம்..”

“ம்..மா..”

“நிஜமாத்தான் சொல்றேன் சமூ.. வித்தடலாம்.. நமக்கு பெருசா அதுல இருந்து வருமானம் எல்லாம் இல்லை.. சும்மா பேருக்குன்னு தானே அந்த வீடு இருக்கு.. வித்திடலாம்.. யாருக்காவது அந்தப் பணம் உதவட்டுமே..”

“சரிம்மா.. எப்படி இருந்தாலும் மெஸ் தொடங்கறதுனா உன் பேருல தான் தொடங்க முடியும்.. நீதான் அதுக்கு பொருப்புங்கற மாதிரி.. நாங்க புதுசா கடை துவங்க பெருசா சட்டத்துல இடமில்லை.. அப்படியே தொடங்குனாலும் சுத்தியிருக்க எல்லாரும் விடமாட்டாங்க.. அதனால நீங்கதான் அதை எடுத்து நடத்தற மாதிரி இருக்கும்.. உங்களுக்கும் ஓகே தானே..??”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.