(Reading time: 11 - 21 minutes)

“அம்மா, சாப்பிடக் கூட நேரமில்லாம் ஓடற உன் பிள்ளைக்காக பூரி பண்ணத் தெரிஞ்ச உனக்கு, உன் கை சாப்பாடுதான் வேணும்னு காத்து இருக்கிற இந்த பிஞ்சு மனசுக்குப் பிடிச்ச இடியாப்பம் பண்ணத் தெரிஞ்சதா? இதுதாம்மா உலகம் “ என்று தத்துவம் கூறவே,

ஒருநிமிடம் திடுகிட்ட மைதிலி , பின் சுதாரித்தாள்.

“ஓஹோ. அப்படி வருத்தம் இருக்கா உங்களுக்கு. மித்ரா, நேத்திக்கு என்ன டிபன் பண்ணினேன்?

“இடியாப்பம் அத்தை”

“அதற்கு முதல் நாள் என்ன செஞ்சேன்”

“ரவா தோசை”

என்று பதில் கூறவும், இப்போது சுமியை முறைத்த மைதிலி

“இது எல்லாம் யாருக்குப் பிடிச்ச டிபன் மேடம்” என்று கேட்டாள்.

அவளின் கேள்வியில் “ஹி ஹி.. அம்மா அது சும்மா ஒரு ப்லொவில் வந்ததும்மா.. நீங்க யாரு மைதிலி ஆச்சே. நீதி, நேர்மை என பொங்கும் மாதர் குல மங்கை” என்று ஏகத்துக்கு ஐஸ் வைக்கவும்,

அதுவரை ராமை வறுத்து எடுத்த வாணலியில், இப்போது சுமித்ராவைப் போட்டுப் பொறித்தாள் மைதிலி.

ஒருவழியாக சாப்பாடு நேரம் முடிய, மித்ரா, தங்கள் அறைக்குச் சென்று தயாராகி வரவும், மைதிலியும் தயாராகி வந்தாள்.

அன்றும் வழக்கம் போலவே மைதிலி, மித்ரா இருவரும் தங்கள் அலுவலகம் சென்றனர்.

முந்தைய நாள் சரவணன் வந்து பேசிவிட்டுச் சென்றது நினைவில் இருந்தாலும், நேற்றைக்கு வீட்டிற்குச் சென்றவுடன் அவள் மனநிலை மாறிவிட்டது.

அதிலும் அன்றைய காலை ரகளை அவளின் மனதை மிகவும் லேசாக்கியது. அதனால் சரவணனைப் பற்றிப் பெரிது படுத்தாமல் விட்டு விட்டாள்.

அன்றைக்கு மதியமும் மைதிலி வெளியில் செல்ல வேண்டிய வேலை இருந்தது.

இவர்கள் பொறுப்பேற்று நடத்தும் ஒரு பெரிய மனிதரின் வீட்டுத் திருமண விழா அடுத்த வாரத்தில் இருந்தது. பெரிய தலைவர்கள், திரைத் துறையில் இருப்பவர்கள், தொழிலதிபர்கள் என பெரிய அளவில் கூட்டம் வரக் கூடிய வாய்ப்பு இருந்தது.

பாதுகாப்பு, விழா வீட்டினர் பொறுப்புதான் என்றாலும் கூட, அந்த செக்யூரிட்டி கார்ட்ஸ் தலைவரின் அனேக சந்தேகங்களுக்குப் பதில் சொல்லவே ஒருவர் தனியே போக வேண்டி இருந்தது.

மற்றவர்களின் வேலைப் பளு உணர்ந்ததாலும், பொறுப்பில் இருப்பதாலும் மைதிலி தான் அங்கே போக வேண்டி இருந்தது. எனவே இந்த ஒரு வாரமாக அவளுக்கு வெளியில் செல்லும் வேலை தினமுமே இருந்தது.

முதலில் பார்த்து விட்டு சென்றதற்குப் பிறகு சரவணன் தினமுமே மித்ராவைச் சந்திக்க வந்தான். அதிலும் மைதிலி வெளியே சென்ற பிறகு தான் வந்தான்.

மித்ராவின் ரிபோர்டில் எந்தக் குறிப்பும் இல்லாவிட்டாலும், ரிசெப்ஷனிஸ்ட் குறிப்பில் சரவணன் வருகைப் பற்றித் தெரிந்து கொண்டாள் மைதிலி. முதலில் மித்ராவே சொல்வாள் எனக் காத்திருக்க, அவள் அதைப் பற்றிச் சொல்லவே இல்லை.

சரவணனின் தொடர்ச்சியான வருகையில் ஐந்தாம் நாள், மைதிலி வெளியே சென்று சிறிது நேரத்திலேயே திரும்பி வந்தாள்.

அவள் வந்ததைத் தெரிந்து கொள்ளாத சரவணன், அன்றும் மித்ராவிடம் பேசிக் கொண்டிருக்க, மைதிலி மித்ராவின் அறைக் கதவைத் திறந்து வந்தாள்.

எதேச்சயாக கேட்பது போல்,

“மித்ரா, அந்த எட்டாம் தேதி விழாவிற்கான மெனு டிசைட் பண்ணியாச்சா? என்று கேட்டவள், அப்போதுதான் சரவணனைப் பார்ப்பவள் போல்

“ஹலோ. நீங்க எங்கே இங்கே?” என்று கேட்டாள்.

மைதிலி உள்ளே வரும்போதே கவனித்து விட்டாள் மித்ராவின் முகம் சரி இல்லையே என்று. மித்ரா கடனே என்று அமர்ந்து இருப்பது போல் இருந்தது.

முதலில் மைதிலியைப் பார்த்துத் திகைத்த சரவணன், பின் சுதாரித்தவனாக

“என் பிரெண்ட் வீட்டில் ஒரு பங்க்ஷன், அதற்கு உங்கள் நிறுவனம் தான் எற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கேட்க வந்தேன்” என்றுக் கூறினான்.

“அப்படி என்றால் நீங்கள் எங்கள் கஸ்டமர் என்குயரி டிபார்ட்மென்ட் இடம் அல்லவா பேச வேண்டும்” என்று கேட்டாள் மைதிலி.

“அது.. நம்ம மித்ரா இங்கே இருக்கவே, அவகிட்டே நேரடியா பேசினால் ஈஸியா இருக்குமேன்னு வந்தேன்”

“மிஸ்டர் சரவணன். மித்ரா இங்கே சாதாரண எம்ப்ளாய் கிடையாது. அவங்களுக்கு பெரிய போஸ்ட் கொடுக்கப் போறாங்க. அதுக்கு முன்னாடி அவங்களுக்கு அனுபவம் கிடைக்கத் தான் எல்லாம் டிபார்ட்மென்ட்லேயும் ட்ரைனிங் எடுக்கறாங்க. சோ யார் வேணாலு அவங்களைப் பார்க்கலாம்னு கிடையாது . அண்டர்ஸ்டான்ட்.” என்று வினவவே,

சரவணன் பவ்யமாகத் தலையசைத்தான்.

பின் ரிசெப்ஷனிஸ்ட் அழைத்து

“நீங்க மிஸ்டர் சரவணன் வந்தா, அவர் எதைப் பற்றிப் பேசுகிறாரோ அந்த டிபார்ட்மென்ட் ஸ்டாப் கிட்டே மட்டும் அனுப்புங்க. தேவை இல்லாமல் சீனியர் ஆபீசர்ஸ் யாரையும் டிஸ்டர்ப் செய்யாமப் பார்த்துக்கோங்க” என்று ஸ்ட்ரிக்ட்டாகக் கூறவே, சரவணன் பெருத்த அவமானத்தோடு திரும்பிச் சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.