(Reading time: 11 - 21 minutes)

அவன் சென்றவுடன், ரிசெப்ஷனிஸ்ட்டையும் அனுப்பி வைத்து விட்டு மித்ரா பக்கம் திரும்ப, அவளைப் பார்த்து முறுவலித்த மித்ரா,

“தேங்க்ஸ் அத்தை. இந்தக் கழுத்தறுப்பு ஆளிடமிருந்து எப்படிடா தப்பிக்கிறதுன்னு யோச்சிட்டு இருந்தேன். நீங்க காப்பத்திடீங்க” என்று கூற, மைதிலி

“ஏண்டா. இவனை டெய்லி வரவிட்ட. முதல் நாளே எங்கிட்ட சொல்லியிருந்தா வேறே ஏற்பாடு செய்து இருப்பேன்லே”

“மச். அவன் பர்சனல் மட்டும் பேசறதா இருந்தா, நானே அவனை வெளியில் அனுப்பி இருப்பேன் அத்தை. ஆனால் அவன் பிசினஸ் விஷயம் பேசப் போறேன்னு வந்தான். பிசினஸ் பேசினான் தான். ஆனால் அதைவிட பர்சனல் தான் அதிகம். என்னால் ஒன்னும் சொல்ல முடியல”

“அவன்கிட்டே டோன்ட் டாக்  பர்சனல்ன்னு சொல்ல வேண்டியதுதானே”

“அது எல்லாம் அவன்கிட்டே வேலைக்கு ஆகலை அத்தை. அவன் பேசியதைக் கேட்கவில்லை என்றால், நெட்டில் நம்ம கம்பெனி பற்றி மோசமா எழுதிடுவேன்னு மிரட்டினான் அத்தை. அதனால் தான் பொறுத்துக் கொண்டேன்”

“என்னடா பேசற நீ? உன்னை விட இந்த கம்பெனியா முக்கியம். உனக்குப் பிரச்சினை என்றால், நான் கம்பெனியை யாரிடமாவது விற்றுவிட்டு வீட்டிற்குள் உனக்குப் பாதுகாப்பாக இருக்க மாட்டேனா? என்று கேட்டாள் மைதிலி.

“அச்சோ . இல்ல அத்தை. இவங்களை எல்லாம் திருத்த முடியாது, இவங்களுக்குப் பயந்துகிட்டு எத்தனை நாள் வெளியில் வராம நாம இருக்கிறது. இது நீங்க பாடுபட்டு உருவாக்கியன் கம்பனி. என்னாலே உங்களுக்கு நஷ்டம் வந்திடக் கூடாதுன்னுதான் பொறுத்துகிட்டேன் . உங்ககிட்டே அதான் ஒன்னும் சொல்லலை. ஆனால் இப்போ நீங்கள் வந்த பிறகு ரொம்ப நிம்மதியா இருக்கு”

அவளின் பேச்சைக் கேட்ட மைதிலி, அவளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவளை அணைத்தாள். ஆனால் இத்தனை நேரத்திலும் அவன் என்ன பேசினான் என்பதைச் சொல்லாத மித்ராவைக் கண்டு மைதிலிக்கு ஆச்சர்யமாக இருந்தது.

அன்றைக்கு இரவு ஷ்யாம் வரும்போது, ரொம்ப நேரம் ஆகியிருக்கவே, யாரையும் எதிர்பார்த்து இருக்கவில்லை. ஆனால் அவன் உள்ளே நுழையவும், மைதிலியைப் பார்த்து விட்டு,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“நீங்க ஏன்மா வெயிட் செஞ்சுகிட்டு இருக்கீங்க? நான் லேட் ஆகும்னு அப்பா கிட்டே சொல்லியிருந்தேனே”

“அது இருக்கட்டும். நீ சாப்பிட்டியா?

“சாப்பிட்டேன் மா”

“சரி. ரொம்பே லேட் நைட் ஆகிடுச்சு. இந்த பால் மட்டும் சூடா தரேன். குடிச்சுட்டு போய்ப் படு” எனக் கூறவே, முதலில் ரெப்ரெஷ் செய்து விட்டு வரலாம் என்று எண்ணியவன், பிறகு தன் அன்னையின் காத்திருப்புக் கருதி, பாலைக் குடித்து விட்டே செல்லலாம் என்று, அன்னை பின்னாடியே சென்றான் ஷியாம்.

அவன் பாலைக் குடித்து முடிக்கும் வரை, காத்து இருந்த மைதிலி,

“ஷ்யாம். அந்த சரவணன் மித்ராவைப் பார்க்க நம் ஆபீஸ் வருகிறான்” என்றுக் கூற, திடுக்கிட்டு விழித்தான் ஷ்யாம்.

“அம்மா, அவன் ஏன் அங்கே வரான்? அவள் அங்கே வருவது அவனுக்கு எப்படித் தெரியும்? நீங்க மித்ராவைப் பார்க்க எதுக்கு அலோ பண்ணினீங்க?” என்று கேள்விகளால் தாக்கவும்

“பொறுமை, பொறுமை. என்ன நடந்ததுன்னு நான் சொல்றேன். தென் நீ பேசு” எனவே, ஷ்யாமும் அமைதியாகினான்.

மைதிலி இல்லாத நேரத்தில் சரவணன் வந்து மித்ராவை சந்தித்ததில் தொடங்கி, இன்றைக்கு மித்ராவின் பேச்சு வரை சொல்லி முடித்தாள் மைதிலி.

“அவன் எதற்கு அவளைச் சந்தித்தான் என்று மித்ரா சொல்லவில்லையா?

“இல்லைடா ஷ்யாம். நான் கேட்டதற்கு, எத்தனையோ பேரை நம் கம்பனில் பார்க்கிறோம். அவர்களில் இவரும் ஒருவர். அதற்கு மேல் எந்த முக்கியத்துவமும் இல்லை என்று சொல்லிவிட்டாள்”

மித்ராவின் தைரியமான பேச்சு, ஷ்யாமிற்கு மிகவும் பிடித்து இருந்தது. ஆனால் சரவணன் விடாது தொடர்வதில் காரணம் மட்டும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்ல.

தன் யோசனையோடு தங்கள் அறைக்குச் சென்றான் ஷ்யாம்.

தொடரும்

Episode # 29

Episode # 31

{kunena_discuss:1187}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.