(Reading time: 11 - 22 minutes)

ரவாயில்லை பூபதி, நீ அடிக்கடி சொன்னது போல உன்னோட பொண்ணை பெரிய நடிகையாக்கிட்ட, அதுக்கும் ஒரு கொடுப்பிணை வேணும், உன்னை பார்த்து நானும் அப்படி ஆசைப்பட்டேன், ஆனா என்னோட ஆசை நடக்கலையே..”

“நீயும் அப்போ நிறைய ப்ரொட்யூஸர், டைரக்டர்ல்லாம் போய் பார்த்தீயே ஏன்ப்பா எதுவும் சான்ஸ் கிடைக்கலையா..”

“எங்க பூபதி.. நீ சொன்னதை உன்னோட பொண்டாட்டியும் பொண்ணும் அப்படியே கேட்டாங்க.. ஆனா எனக்கு தான் வந்ததும் சரியில்லை, வாச்சதும் சரியில்லையே.. நல்ல சான்ஸ் ஒன்னு கிடைச்சது, ஆனா என்னோட பொண்டாட்டி ரத்னா இருக்காளே, அவ எல்லாத்தையும் கெடுத்துட்டா..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

பொண்ணு சினிமாவுல நடிக்கக் கூடாதுன்னு அவசரம் அவசரமா ஒரு மாப்பிள்ளையை பார்த்து பொண்ணுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணா, ஆனா அந்த ஓடுகாலி கழுதை எவனையோ இழுத்துக்கிட்டு ஓடிடுச்சு, அந்த அதிர்ச்சி தாங்காம என் பொண்டாட்டி நெஞ்சை பிடிச்சவ தான், அப்பவே உயிரை விட்டுட்டா, அப்புறம் சோத்துக்கு கூட வழியில்லாம திரிஞ்சுக்கிட்டு இருந்தேன்..

அப்புறம் ஒருத்தருக்கு சான்ஸ் கேக்கற விஷயமா வசந்தன் சாரை பார்க்கப் போனப்ப தான் சாத்விக் தம்பி எனக்கு வேலை கொடுத்தாரு.. இப்பொ ஏதோ என்னோட பொழப்பு ஓடுது, ஆனாலும் ஆத்தாளும் பொண்ணுமா என்னோட கனவை கலைச்சிட்டாங்க.. அதுக்கு தண்டைனையா பொண்ணை பொத்தி பொத்தி வளர்த்து கடைசியில் அந்த பொண்ணே  என்னோட பொண்டாட்டி சாவுக்கு காரணமாயிட்டா, இத்தனையும் பண்ணிட்டு போன அந்த ஓடுகாலி கழுதை உறுப்பட்டிருக்கும், ம்ம் இருக்காது..” என்று பன்னீர் பேசிக் கொண்டே போக அதைக் கேட்டுக் கொண்டிருந்த தேவியோ அதிர்ச்சியில் சத்தமில்லாமல் அங்கிருந்து வந்தவள், தனது அறையில் வந்து கதறி அழுதாள்.

தன் தாய் எங்கேயோ நல்லப்படியாக இருப்பார் என்று அவள் நம்பிக் கொண்டிருக்க, அவர் இந்த உலகத்தில் இப்போது இல்லை என்ற செய்தியை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அதுவும் தன் தாயின் இறப்பிற்கு தானே காரணம் என்று அவள் அறிந்த நொடி, தான் செய்த தவறுக்கு தனக்கு இத்தனை பெரிய தண்டனை கிடைத்ததற்கு, அன்றே தன் உயிர் பிரிந்திருக்கலாம் என்று நினைத்து நினைத்து அழுதாள்.

அந்த நேரம் அங்கு வந்த புவனா தேவி அழுதுக் கொண்டிருந்ததை பார்த்து,

“தேவி என்னடா.. என்ன ஆச்சு? எதுக்கு அழற? யாராச்சும் ஏதாவது சொன்னாங்களா?” என்றுக் கேட்கவும், அவள் இல்லை என்று தலையாட்டினாள்.

“அப்புறம் என்ன உங்கம்மா தனம் ஞாபகம்.வந்துடுச்சா..” என்றுக் கேட்க,

“ஆமாம் அம்மா ஞாபகம் தான், என்னோட அம்மா ஞாபகம் வந்துடுச்சு..” என்று புவனாவை கட்டிக் கொண்டு தேவி அழவும்,

அவளின் தன் அன்னை என்ற வார்த்தையை கேட்டு புவனாவோ தன்னை அறியாமல், “யாதவி என்னாச்சுடாம்மா.. எதுக்கு இப்போ உங்கம்மா ஞாபகம் வந்துடுச்சு, அவங்க தான் எப்பவோ இந்த உலகத்தை விட்டு போயிட்டாங்களே, இப்பொ எதுக்கும்மா அவங்களை நினைச்சு அழற, இன்னைக்கு ஏதாச்சும் அவங்களுக்கு நினைவு தினமா..” என்றுக் கேட்டார்.

“அன்னைக்கு எதிலிருந்து தப்பிக்கவோ எங்கம்மா இறந்துட்டாங்கன்னு தனம்மா சொன்னதுக்கு நான் தலையாட்டினேன்.. ஆனா நான் பாவி, அவங்க சொன்ன பொய்யை ஒத்துக்கிட்ட பாவத்துக்கு கடவுள் அதுக்கு முன்னமே எங்கம்மா உயிரை பறிச்சிக்கிட்டாரு.. ஆனா என்னோட அம்மா சாவுக்கு நானே காரணம் ஆயிட்டேனே என்னை இந்த கடவுள் மன்னிப்பாரா..?” என்று மனதிற்குள்ளேயே பேசிக் கொண்டவள், வெளியில் அழுதுக் கரைந்துக் கொண்டிருந்தாள்.

அவள் எதற்காக அழுகிறாள் என்று தெரியாமல், அவளை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் புவனா வெறுமனே, “யாதவி யாதவி..” என்று அவளது பெயரை உச்சரித்தப்படி அவளுக்கு ஆறுதலாக அவளை அணைத்துக் கொண்டிருந்தார்.

என்ன ப்ரண்ட்ஸ் யாதவியை இந்த அத்தியாயத்தில் பார்த்துடீங்களா? ஆனா தேவியை அறிமுகப்படுத்தின அத்தியாயத்திலேயே அவள் தான் யாதவி என்று நிறைய பேர் சரியாக யூகித்தது சிறப்பு.. நன்றி.

மையல் தொடரும்..

Episode # 07

Episode # 09

Go to Maiyalil manam saaintha velai story main page

{kunena_discuss:1211}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.