(Reading time: 15 - 30 minutes)

“ஐயோ ம்மா..திஸ் இஸ் த லிமிட்.என்ன பேச்சு பேசிட்டு இருக்க..அதெல்லாம் என் பெர்சனல் இப்படி ஓபனா கேட்டுட்டு இருக்க..இதுமட்டும் ரொம்ப டீசெண்டா இருக்கா உனக்கு?”,கிட்டதட்ட கத்த ஆரம்பித்திருந்தாள் வெண்பா..

“ஏன் வெண்பா அம்மாவை தப்பாவே நினைக்குற..செத்து பொழச்சு வந்துருக்கேன்.அடுத்து எப்போ என்ன ஆகுமோனு பயம் கிடந்து பாடா படுத்துது..அதான் அதுகுள்ள அத்தனை நல்லது கெட்டதும் பாத்துரணும்னு மனசு துடிக்குது.என்ன தான் நா பொறுப்பான அம்மாவா இல்லாம போனாலும் அம்மா இல்லனு ஆய்டுமா..என் பொண்ணு வாழ்க்கை நல்லாயிருக்குனு தெரிய வேணாமா..”

“ப்ச்ச் சாரிம்மா..இப்போ எதுக்கு தேவையில்லாதத பேசுற..அதெல்லாம் நீ இன்னும் ரொம்ப வருஷம் நல்லாயிருப்ப..அப்பறம் என் வாழ்க்கை தான ரொம்ப ரொம்ப அழகாயிருக்கு.இத்தனை வருஷமுமம் இல்லாத அளவு சந்தோஷமா இருக்கு..சொல்ல கஷ்டமா தான் இருக்கு ஆனாலும் பெருமையா சொல்றேன் நீயும் அப்பாவும் கூட என்னை இப்படி பாத்துகிட்டது இல்ல போதுமா..அந்தளவு திவா என்னை பாத்துக்குறாரு..சந்தேகம் எல்லாம் தீர்ந்துதா இனியாவது காபி டீ எதாவது சாப்டு வா..”

அதன்பின் சில பல நிமிடங்கள் அமர்ந்து அவளோடு பேசிவிட்டு அவர் கிளம்ப சிந்தாம்மா மட்டும் மரியாதைக்காய் ஹாலிற்கு வந்து வழியனுப்பி வைத்தார்.வெண்பாவிற்கு தங்களறைக்குச் செல்லவே தர்ம சங்கடமாக இருந்தது.என்ன சொல்லி திவாவை சமாதானப்படுத்துவது என யோசித்தவாறே கதவை திறந்தளுக்கு முதுகுகாட்டி அமர்ந்து இன்னமும் அலைப்பேசியில் பேசிக் கொண்டுதான் இருந்தான்.

அமைதியாய் கட்டிலில் அமர்ந்தவள் தன்னை மறந்து ஏதோ சிந்தித்து கொண்டிருக்க அழைப்பை முடித்து வந்தவன் லேசாய் அவள் தோள் தட்டி உயிர்ப்பித்தான்.

“கண்ணம்மா..அம்மா கிளம்பிடாங்களா?சாரிடா முக்கியமான கால் கட் பண்ண முடில.”

அவளின் திவாவை பற்றி தெரிந்தும் தான் பயந்தது தவறோ என்றே எண்ணிணாள்.எந்த கோபமோ கடுப்போ எதுவும் இல்லை அவனிடத்தில்.

“சாரி திவா..அம்மா அப்படி பிகேவ் பண்ணுவாங்கனு..”

“கமான் கண்ணம்மா..உன்னோட அம்மா அந்த ஒரு விஷயம் போதும் அவங்க எப்படி பிகேவ் பண்ணாலும் நான் கவலைபட மாட்டேன்.ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் பாத்துருக்க அவங்களை இங்கேயே ஸ்டே பண்ண சொல்லு டா..பேச எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்..”

“இல்ல திவா நானும் எவ்வளவோ கேட்டு பாத்துட்டேன் ஆனா பிடிவாதமா ஹோட்டல்ல தான் தங்குவேன்னு சொல்லிட்டாங்க..டெய்லி இங்க வந்துட்டு போறேன்னு சொல்றாங்க..இன்னைக்கு அவங்க நடந்துகிட்டத பாத்தா அதுவே நல்லதுனு தான் தோணுது..”

“என்ன கண்ணம்மா..ஒருசின்ன விஷயம் அதுக்கு இவ்ளோ அப்செட் ஆகுற..”

“இல்ல திவா..சிந்தாம்மாவ பேஸ் பண்ணவே கஷ்டமாயிருக்கு..என்ன நினைச்சுருப்பாங்க..இன்னும் டெய்லி இப்படி ஒரு நிலைமைனா ரொம்ப கஷ்டம்.இன்னைக்காவது நீங்க வீட்ல இருக்கீங்க..நாளைக்கு நீங்க வேலைக்கு போய்ட்ட அப்பறம் எனக்கு இவங்க ரெண்டு பேரையும் பேலண்ஸ் பண்ண முடியும்னு தோணவேயில்ல.

கண்டிப்பா சிந்தாம்மா அமைதியா தான் இருப்பாங்க ஆனா எங்கம்மாவால சும்மா இருக்க முடியாது..அதாவது சண்டை வந்துருமோனு மனசு பதட்டமாவே இருக்கு..”

அவளருகில் அமர்ந்து ஆதரவாய் தோள் பற்றிக் கொண்டவன்,”ரொம்ப போட்டு குழப்பிக்காத டா..கோ வித் அ ப்ஃளோ அவ்ளோதான்.நாம நினைச்சு எதுவும் மாற போறதில்ல.இல்ல உனக்கு ரொம்ப ஒரு மாதிரி இருந்தா டெய்லி அவங்களை கூட்டிட்டு எங்கேயாவது வெளில போய்ட்டு வாடா..

இல்ல நீ போய் அவங்களோட ஹோட்டல இருந்துட்டு வா..எனிதிங் இஸ் பைன் பார் மீ.நீ ரிலாக்ஸ்டா இருந்தா போதும்.சரியா?”

வழக்கம்போல் அவன் அன்பில் கரைந்துருகித்தான் போக முடிந்தது வெண்பாவால்.குழந்தையாய் அவன் கூறிய அனைத்திற்கும் தலையசைத்தவள் இன்னுமாய் அவனை தன்னோடு சேர்த்துக் கொண்டாள்.

மறுநாள் காலை வழக்கம்போல் திவ்யாந்த் சீக்கிரமே கிளம்பிச் சென்றுவிட பொறுமையாய் எழுந்து தயாரானவள் சிந்தாம்மாவோடு அமர்ந்து காலை உணவை முடித்துவிட்டு நடனப்பள்ளிக்கு கிளம்பினாள்.

அதற்குமுன் மறக்காமல் சுலோச்சனாவிற்கு அழைத்து தானே வகுப்பு முடிந்து அவரை சந்திக்க வருவதாய் கூறினாள்.

மதியம் வரை வகுப்பை முடித்தவள் விடுப்பு கூறிவிட்டு கிளம்பி தாய் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குச் சென்றாள்.

“ஹே வெண்பா டியர்.என்ன இது இந்த கோலத்துல வந்து நிக்குற ஓ காட் கொஞ்சமும் ப்யூட்டி கான்ஷியஸே இல்லாம போச்சு உனக்கு..”

“ஹா ம்மா..வந்தவுடனே ஆரம்பிக்காத..வெயில வந்தது தலை வலிக்குது..ப்ளீஸ் சாப்ட எதாவது ஆர்டர் பண்ணு..”

“ம்ம் சரி சரி உக்காரு..”,என்றவர் அவளுக்காக சிற்றுண்டியை வரவழைத்து அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமை காத்தார்.அதன்பின் இன்டர்காமை எடுத்து அங்கிருந்த ப்யூட்டிஷினை வரவழைத்தார்.

“ம்மா..என்ன பண்ண போற..இதெல்லாம் ஒண்ணும் வேணாம்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.