(Reading time: 10 - 19 minutes)

"ஆ..அண்ணா!" என்று திரும்பியவனின் முகம் வாடியது. அவன் பொதுவாகவே அமைதி வடிவானவன்,எனினும் முகம் கலையோடு வசீகரிக்கும். சில தினங்களாகவே அந்த வசீகர பிம்பம் தொலைந்திருந்தது.தாடியை அதிகமாக வளர்க்காவிட்டாலும், குறித்த அளவு எப்போதும் முகத்தில் வைத்திருப்பான்.அது அவனுக்கு மெருக்கூட்டும்!!!ஆனால், இப்போது அது கேட்பாரற்று வளர்ந்திருந்தது.

அனைத்திற்கும் காரணம் அவள் தானே!என்னதான் இருக்கிறது அவள் மனதில்?என் தமையன் என்ன தவறிழைத்தான்?நிச்சயம்..அவர் என் கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.

"உதய்!" சிந்தனை கலைந்தான் அவன்.

"ம்?அண்ணா!"

"அம்மா கூப்பிடுறாங்க!"

"வரேன்ணா!"பதில் வந்ததும் விலகினான் கரிகாலன்.

"இருக்கட்டும் இன்று ஒரு முடிவு கட்டுகிறேன்." என்ற முடிவோடு கீழே இறங்கியவனுக்கு,காத்திருந்ததோ அதிர்ச்சி தான்!!!

"அத்தை!!" மனம் கொண்ட சங்கல்பங்கள் கரைந்துப் போக, இல்லத்திற்கு வருகை தந்திருந்த சத்யாவை கண்டு உளங்கனிந்தான் உடையான்.

"சின்னவனே!வாடா!" இருகரம் கூப்பி அவர் அழைக்க, ஓடி வந்து அணைத்துக் கொண்டான் அவன்.

"ஒருவழியா உங்களைப் பார்த்துட்டேன்."

"டேய்!போதும் விடுடா! மூச்சு முட்டுது!" 

"ம்ஹூம்..! விட மாட்டேன். சென்னையில இருந்து வந்திருக்கீங்க, எனக்கு சாக்லெட் வாங்கிட்டு வந்திங்களா?"அவன் சிறு வயதை நினைவுப்படுத்தின,அவன் சொற்கள்!!அதைக்கேட்ட தர்மா புன்னகையுடன் தலையில் அடித்துக்கொண்டார்.

"என்னடி சிரிக்கிற?"

"ம்...ஊர்ல இருந்து வந்திருக்கல குழந்தைக்கு கிளுகிளுப்பை, பொம்மை எல்லாம் வாங்கிட்டு வரலை?"

"ஏ..!என்ன உனக்கு என்ன வயிற்றெரிச்சல்!"

பரிந்து வந்தார் தர்மப்புத்திரனுக்காக!!

"சரி...நீ முதல்ல போய் ஃப்ரஷ் ஆகிட்டு வா!"

"இரு...!எங்கே என் உமுனாம்மூச்சிப் பொண்ணு?பார்த்தியா..அம்மா வந்திருக்கான்னு கூட வந்துப் பார்க்கலை!"

"இருடி!ஆதி கூப்பிட போயிருக்கான்."என்றதும் பகீரென்றது உடையானுக்கு!என்ன நிகழப் போகிறதோ!

உண்மையில் அவள் அறையின் வாயிலில் தயங்கியே நின்றான் ஆதித்யா.எவ்வாறு உரிமையுடன் பிரவேசிப்பான்?எந்த உரிமையின் அடிப்படையில் பிரவேசிப்பான்?எனினும் கதவைத் தட்டினான். பதிலில்லை. பொறுமை இழந்தவனாய் அவன் கதவைத் திறக்க, உள்ளே நிலைக்கண்ணாடி முன்னின்று புடவை கட்டிக் கொண்டிருந்தாள் அவள். அக்கோலத்தில் அவளைக் கண்டவனுக்கும், நிலைக்கண்ணாடியின் முன் ஆண்மகனின் பிம்பத்தைக் கண்டவளுக்கும் தூக்கிவாரிப் போட்டது. சட்டென முகத்தைத் தாழ்த்திக் கொண்டான் அவன்.

"ஸாரி!" என்று வந்த வேகத்திலே விலகி சென்றான். அவளோ செய்வதறியாது நின்றிருந்தாள்.மனதிலோ ஒருவித அழற்புணர்வு, நெருடல்!!புடவையால் தன் தேகத்தை மூடிக்கொண்டாள்.ஏன் இவ்வாறு எல்லாம் நடக்கிறது என்ற எண்ணமே வேதனையை அவளுக்குத் தாரை வார்த்தது.அவளைவிடவும் அதீத வேதனை நிச்சயம் கரிகாலனுக்கே,அதில் ஐயமில்லை!!!

"என்ன ஆண்மகன் நீ?தனிமையில் இருக்கும் கன்னிகையின் அறைக்குள் இவ்வாறு தான் பிரவேசிப்பாயா?என்ன காரணம் கூறுவாய்?அவள் முகத்தில் நான் எப்படி விழிப்பேன்?வேண்டும் என்றே நான் செய்ததாக அல்லவா எண்ணம் கொள்வாள்?"தலைப்பாரம் கூடியது அவனுக்கு!!!

மீண்டும் அந்த ஓவியத்தை கையில் எடுத்து கண்ணீர் வடித்தாள் மாயா.இது என்ன வேறுப்பட்ட காதல்??அவள் எண்ணம் யாரையும் குழப்பிப் பார்த்துவிடும்.யாருக்குத் தெரியும் அவள் இதயத்தில் ஓவியமாய் வீற்றிருப்பவனின் குணத்தினை??யாரோ,எப்படிப்பட்டவனோ!!!

"மாயா!" என்று உள்ளே நுழைந்த சத்யாவின் மனவாழி கொந்தளிக்க தொடங்கியது அக்காட்சியை கண்டு!!

"மாயா!"

"மா!" பதறிக்கொண்டு ஓவியத்தை மறைத்தாள்.

"என்னடி?என்ன இது?நான் அன்னிக்கே இதை எரிக்க சொன்னேன்ல!"

"மா!" அச்சம் பரவியது அவள் கண்களில்!!

"நீ திருந்தமாட்டியா?"என்று அந்த ஓவியத்தைப் பிடுங்கினார்.

"மா!ப்ளீஸ்...வேணாம்மா!" கண்ணீர் பெருக்கெடுத்தது அவள் விழிகளில்!!

"இனி இது என் கண் முன்னாடியே இருக்கக் கூடாது!"அதை அழிக்க முயற்சித்தவரைத் தடுத்தாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.