(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 07 - சகி

Nenchil thunivirunthaal

குற்றவுணர்வு ஒருப்புறம்! சமர்ப்பணம் மற்றொரு புறம்!இரண்டிற்கும் மத்தியில் பலத்தரப்பட்ட வினாக்கள்...விடைகள் யாரிடத்தில்?காலத்திடத்தில் அல்லவா!!

"அவள் வந்து பத்து நாட்கள் கடந்துவிட்டன.எவரோ சொல்லி நான் அறிகிறேன்."கண்கள் கலங்கின அவருக்கு!

"அவனும் தான் வந்திருக்கிறான்.அவனுக்கும் நான் விரோதியாகிவிட்டேன் அல்லவா!"வெறுப்புற்றது மனம். பல வருடங்களாய் இந்தத் தனிமை வாழ்க்கை!அனைத்திற்கும் காரணம் எனது புத்தி. எத்தனை வருட தண்டனை? சிறிதும் இரக்கமில்லை அவள் மனதில்!" கண்களில் வடிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் விஜயராகவன். கூறினேன் அல்லவா!குற்றவுணர்வு ஒருப்புறம்,சமர்ப்பணம் மற்றொருப்புறம்!இருவேறு துருவங்கள் சந்திக்கும் தருணம் நெருங்கிவிட்டது. சந்திக்க வைக்கப் போகும் கருவி தான் யாரோ?யார் அறிவார்!

"பெரியய்யா!" பரிச்சயமான குரல் உலுக்க சிந்தனை கலைந்தார் அவர்.

"வாம்மா கங்கா!"

"பாட்டி உங்களை வயலுக்கு வர சொன்னாங்க பெரியய்யா!" அன்புடன் ஒலித்தது அவள் குரல். இத்தனை வருட சிறைவாசத்தில் ஒரு புதல்வியின் ஸ்தானத்தில் இருந்து தன்னை அன்புடன் கவனித்துக் கொள்வதால் கங்காவிடம் தனி ப்ரியம் அவருக்கு!

"வரேன்மா!"வந்த வேலை பூரணமாக விடைப்பெற்றாள் அப்பெண்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

வேகவேகமாய் கீழிறிங்கி வந்தவள் அறிந்திருக்க மாட்டாள் அவள் விதியை மாற்றி எழுதும் அருளை அவளது இறைவன் அன்றைய தினத்தில் நல்க அவளுக்காக ஆலயத்தில் காத்திருக்கிறான் என்று!!புள்ளிமானாய் துள்ளி வந்தவளின் கரத்தை பற்றி இழுத்தது ஒரு கரம். தடுமாறியப்படி அவன் மீது சரிந்தாள் கங்கா. இரு நொடிகள் தான் தீயிடையிட்ட மெழுகு பற்றிய தேகமாய் அவனை உதறி தள்ளினாள் அருவருப்பால்!

"ச்சே...!" கண்களில் அச்சம் பரவியது அவளுக்கு.

"என்ன கங்கா?என்ன கண்டுக்கவே மாட்ற?ஏன் நான் எல்லாம் உன் கண்ணுக்கு தெரிய மாட்டேனா?" அவளது நெருக்கத்தை யாசித்தான் அவன்.

"வேணாம் என்னை விட்டுவிடுங்க!நான் போயிடுறேன்."விலக முயற்சித்தவளை தன் பிடியுள் வலுக்கட்டாயமாக திணித்தான் அவன்.

"எங்கே போக போற?எங்கே போனாலும் என்கிட்ட தானே வரணும் நீ!"அவனது பார்வை அவள் தேகம் எங்கும் அளந்தது.

"எவ்வளவு அழகா இருக்க நீ! உன்னை அப்படியே..."அவளை நெருங்கியவனின் கரத்தைப் பற்றி இழுத்து கன்னத்தில் ஓங்கி அறைந்தார் அகிலாண்டேஸ்வரி.

குற்றவுணர்வில் தத்தளித்தவள் அங்கிருந்து ஓடி மறைந்தாள்.

"மனுஷனாடா நீ?அசிங்கமா இல்லை உனக்கு?ஆதரவு இல்லாத பொண்ணுக்கிட்ட இப்படி நடந்துக்க வெட்கமா இல்லை...ச்சே...!"தனது சினம் மொத்தத்தையும் சேர்த்து அவரை முறைத்தான் வருண்.

"மா!என் பையனை எதுக்கு அடித்தீங்க?"புதல்வனுக்காக பரிந்து வந்தார் அவன் தாயார் தேவி.

"பேசாதேடி! அவன் என்ன காரியம் பண்ணான் தெரியுமா?"

"ஆமா...பெரிசா ஊர்ல உலகத்துல பண்ணாத காரியத்தை பண்ணிட்டான்."

"ச்சே...நீயும் பொண்ணா!உன்னை சுமந்து பெற்றதுக்கு வெட்கப்படுறேன்."

"போதும் நிறுத்தும்மா!சும்மா பேசாதே!என் பிள்ளைக்கும்,பொண்ணுக்கும் இந்த வீட்டுல மரியாதையே இல்லை.ஒரு வேலைக்காரிக்காக என் மகனையே அடிக்கிற நீ!நம்ம குடும்பத்துல செய்யாத காரியத்தையா செய்துவிட்டான் இவன்."அவர் கூற, அது விஜயராகவனின் செவியில் விழுந்தது.தமையனின் வருகையை கவனித்தவர்,

"வாடா போகலாம்!"என்று புதல்வனை அழைத்துச் சென்றார்.

"இதெல்லாம் நீ கேட்க மாட்டியாடா?" புதல்வனை கடிந்தார் அகிலாண்டேஷ்வரி. அவரிடம் மௌனம் மற்றுமே இருந்தது. ஒரு காலத்தில் குரல் ஒலித்தது. அனைவரது ஆட்டத்தையும் அடக்கியாண்ட குரல்,இன்றோ அது ஒலிக்கவில்லை. அதனால் விளைந்ததே அனைத்து சங்கடங்களும்!!வெற்றியோ,தோல்வியோ உருட்டப்படும் பகடைக்கு எந்த ஒரு மதிப்பும் இருப்பத்தில்லை.பணயம் ஆக்கப்படும் பொருளாவது சிறிது மதிப்பை பெறுகிறது,பகடைக்கு???பகடையாய் நின்றிருந்தவளிடம் குற்றவுணர்வு மட்டுமே மிகுந்திருந்தது காலம் காலமாக!!!!

இதயத்துடிப்பின் அசைவு காரணமே இன்றி உச்சத்தைத் தொட,அதனை கட்டுப்படுத்த தனது நெஞ்சத்தைத் தாங்கினான் உடையான். 

"என்னவாயிற்று எனக்கு?" இனம்புரியா பதற்றம் இதயத்தினை வியாபித்தது.மடிக்கணினியில் எந்தக் கவனமும் பதியவில்லை. இதுதான் முதல் தடவை இது போன்ற உணர்வு ஏற்பட!! எச்சரிக்கை அல்லவா!!!!நரக வேதனையாய் இருந்தது.

"உதய்!" அவன் அனுபவித்த நரகத்தை தடை செய்தது ஆதித்யாவின் குரல்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.