(Reading time: 10 - 19 minutes)

"மா! நானே அதை எரித்து விடுறேன்மா!ப்ளீஸ்மா!" அவர் முன் மண்டியிட்டாள் மாயா.

"ச்சே...!என்னப் பொண்ணுடி நீயெல்லாம்?இன்னிக்கு ஒரு நாள் உனக்கு அவகாசம் தரேன். இந்த இராத்திரிக்குள்ளே அது எரிந்து சாம்பலாகணும்!இல்லை,உன்னை கொன்னுடுவேன். ஜாக்கிரதை!"கதவை படாரென அறைந்து சாத்திவிட்டு வெளியேறினார்.என்ன செய்வாள் அவளும்,அவளும் பெண் தானே!!!

அன்றிரவு...

"இன்னிக்கு இராத்திரிக்குள்ளே அது எரிந்து சாம்பலாகணும்!" தாயின் குரல் செவிகளில் ரீங்காரமிட்டது.

"எல்லா சூழ்நிலையிலும் எனக்கான ஆறுதலா இருந்தது அந்த ஓவியம் தான். இறைவன் அதையும் என்கிட்ட இருந்து பிரித்துவிட்டார். இதுவும் நல்லது தானே இனி நான் எனக்காக யாரோ இருக்காங்கன்னு என்னை நானே ஏமாற்றிக்க அவசியமே இல்லையே!"கண்களைத் துடைத்து திரும்பியவளின் எதிரே நின்றிருந்தான் ஆதித்யா ஒருவித குற்றவுணர்வோடு!!!

"மது!நான் உன்கிட்ட...அது வந்து..! ஐ ஆம் ஸாரி!காலையில...."அவள் எதையும் கேட்கும் நிலையில் இல்லை. 

மௌனமாக அவனை கடக்க முற்பட்டாள்.

"மது ப்ளீஸ்...!"

"என்ன விட்டுவிடுங்க ஆதி!நான் எதையும் கேட்கும் நிலையில் இல்லை."

"ஒரு இரண்டு நிமிடம்!" அவள் மௌனமாக விலக முற்பட,அவள் கரத்தை ஒருவித கடுமையுடன் பற்றி தன்னருகே இழுத்தான் அவன். இதுநாள் வரை அவ்வளவு நெருக்கம் எப்போதுமே இருவருக்குள்ளும் இருந்ததே இல்லை.

"என்னப் பண்றீங்க விடுங்க!"

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"என் கேள்விக்குப் பதில் சொல்லிட்டு போ மது!"

"என்ன விடுங்க ப்ளீஸ்!" கண்களை இறுக மூடி இருந்தாள் அவள்.ம்..பல நேரங்களில் விடையை எதிரில் வைத்து நாமும் கண்களை மூடிக்கொண்டே தான் இருக்கிறோம்.

"என்ன முதல்ல பாரு மது!"அவனது குரல்,அவளை கட்டுப்படுத்தியது. கண்ணீரும்,இயலாமையும் சேர்ந்து வெளிவர, நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்,அவன் முகத்தை,அந்தக் கண்களைப் பார்த்தாள். சட்டென அடங்கிப்போனது கண்ணீர். இந்தக் கண்கள் அவனுடையது அல்லவா!!புத்தி சட்டென சாவியை எடுக்க,அடைக்கப்பட்டிருந்த அனைத்து வாயில்களும் திறவின. உறைந்துப் போய் நின்றாள்.

"மது!"அவன் குரல் எங்கோ கேட்டது! சட்டென அவனை விலகினாள். ஒன்றுமே பேசவில்லை, மௌனமாக தனதறைக்கு ஓடினாள் அவள். மறைத்து வைத்திருந்த ஓவியத்தை எடுத்தவள்,அருகிலிருந்த பென்சிலை எடுத்து தீட்ட தொடங்க, முழுமையானது அந்த ஓவியம்!!அது அவன் தான்!!!இருவரும் ஒருவர் தானா, கண்ணீர் கரைப்புரண்டு ஓடியது அவளுக்கு!!!அவனையா விலகினேன் நான்???மனம் பதைபதைத்தது.

"மது!" இதயம் வென்றவனின் அடையாளம் தெளிந்தப்பின் அவன் குரல் கேட்க,பலமானது அவள் கண்ணீர்!!!

"நான் சொல்றதைக் கேளு மது! காலையில நான் தெரிந்தே இங்கே வரலை." அவன் தன்னிலை விளக்க முயல,அவளோ கரைப்புரண்டு ஓடிய கண்ணீரை கட்டுப்படுத்த இயலாமல் திரும்பி, ஓடிவந்து அவனது நெஞ்சில் தஞ்சம் புகுந்தாள்.சட்டென ஏற்பட்ட அதிர்ச்சி! திக்குமுக்காடி போனான் ஆதித்யா.

"என்னை மன்னித்துவிடுங்க! நான் தெரியாமல் பண்ணிட்டேன்." கண்ணீர் பெருகியது. அவனோ புரியாமல் நின்றான். எவ்வளவு நேரம் அப்படியே நின்றார்களோ, ஆதித்யாவின் கரங்கள் மெல்ல எழும்பி அவளை வளைத்தன. அதுநாள்வரை கனவுலகில் மட்டுமே கிட்டிய ஆறுதல் நிஜத்திலும் கிடைக்கப்பெற்றது.

உறக்கம் கலைந்ததால் கொட்டாவி விட்டப்படி வெளியே வந்த உடையானின் கண்களில் இக்காட்சி தென்பட, மீதமிருந்த உறக்கமும் அவனுக்குத் தொலைந்துப் போனது சுற்றும் முற்றும் அதிர்ச்சியில் பார்த்துவிட்டு, கண்களைப் பொத்திக்கொண்டு மீண்டும் உ்ளே ஓடிவிட்டான் அவன்.

Episode # 06

Episode # 08

தொடரும்!

{kunena_discuss:1163}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.